All Surahs

Surah 4

النساء

An-Nisa

4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)

176 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِیْرًا وَّنِسَآءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِیْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَیْكُمْ رَقِیْبًا ۟

மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.

2

وَاٰتُوا الْیَتٰمٰۤی اَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِیْثَ بِالطَّیِّبِ ۪ وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَهُمْ اِلٰۤی اَمْوَالِكُمْ ؕ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِیْرًا ۟

அநாதைகளுக்கு அவர்களுடைய உடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நல்ல பொருளுக்குப் பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள்; மேலும், அவர்களின் பொருள்களை உங்களின் பொருள்களோடு கலந்து உண்ணாதீர்கள்; திண்ணமாக இது பெரும் பாவமாகும்.

3

وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِی الْیَتٰمٰی فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ ذٰلِكَ اَدْنٰۤی اَلَّا تَعُوْلُوْا ۟ؕ

அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.

4

وَاٰتُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً ؕ فَاِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَیْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِیْٓـًٔا مَّرِیْٓـًٔا ۟

மேலும், பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமின்றி அனுபவிக்கலாம்.

5

وَلَا تُؤْتُوا السُّفَهَآءَ اَمْوَالَكُمُ الَّتِیْ جَعَلَ اللّٰهُ لَكُمْ قِیٰمًا وَّارْزُقُوْهُمْ فِیْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟

மேலும், உங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள பொருள்களை விவரமறியாதவர்(களாய் உள்ள அநாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள்; ஆனால், அப்பொருள்களிலிருந்து அவர்களுக்கு உண்ணவும், உடுக்கவும் அளியுங்கள்! மேலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களை அறிவுறுத்துங்கள்!

6

وَابْتَلُوا الْیَتٰمٰی حَتّٰۤی اِذَا بَلَغُوا النِّكَاحَ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَیْهِمْ اَمْوَالَهُمْ ۚ وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ یَّكْبَرُوْا ؕ وَمَنْ كَانَ غَنِیًّا فَلْیَسْتَعْفِفْ ۚ وَمَنْ كَانَ فَقِیْرًا فَلْیَاْكُلْ بِالْمَعْرُوْفِ ؕ فَاِذَا دَفَعْتُمْ اِلَیْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَیْهِمْ ؕ وَكَفٰی بِاللّٰهِ حَسِیْبًا ۟

மேலும், அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை சோதித்து வாருங்கள்! அவர்களிடம் (பகுத்துணரும்) தகுதியை நீங்கள் கண்டால், அவர்களுக்குரிய உடைமைகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்களின் உரிமைகளைக் கேட்டு)விடுவார்களென அஞ்சி அந்த உடைமைகளை நீதிக்குப் புறம்பாக, வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள்! அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவோடு உண்ணலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கணக்கு கேட்பதற்கு அல்லாஹ் போதுமானவன்.

7

لِلرِّجَالِ نَصِیْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ۪ وَلِلنِّسَآءِ نَصِیْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ؕ نَصِیْبًا مَّفْرُوْضًا ۟

(மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்துக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.

8

وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا ۟

மேலும், பங்கீடு செய்யும்போது (வாரிசு அல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, வறியவர்களோ வந்தால் அச்சொத்திலிருந்து அவர்களுக்கும் சிறிது வழங்குங்கள்! மேலும், அவர்களிடம் கனிவாகப் பேசுங்கள்!

9

وَلْیَخْشَ الَّذِیْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّیَّةً ضِعٰفًا خَافُوْا عَلَیْهِمْ ۪ فَلْیَتَّقُوا اللّٰهَ وَلْیَقُوْلُوْا قَوْلًا سَدِیْدًا ۟

மக்கள் தங்களுக்குப் பின்னால் ஒன்றுக்கும் இயலாத குழந்தைகளை விட்டுவிட்டு மரணமடைய நேரிட்டால், அப்பொழுது தம் குழந்தைகள் குறித்து எந்த அச்சங்களுக்கு அவர்கள் ஆளாவார்களோ அதனைக் கருத்தில் கொண்டு (இவர்கள் விஷயத்திலும் இப்பொழுது) அவர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்; எனவே அவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து வாழட்டும்; மேலும் நேர்மையான வார்த்தைகளையே பேசட்டும்!

10

اِنَّ الَّذِیْنَ یَاْكُلُوْنَ اَمْوَالَ الْیَتٰمٰی ظُلْمًا اِنَّمَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ نَارًا ؕ وَسَیَصْلَوْنَ سَعِیْرًا ۟۠

அநாதைகளின் சொத்துகளை யார் அநியாயமாக உண்கிறார்களோ, அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், அதிவிரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.

11

یُوْصِیْكُمُ اللّٰهُ فِیْۤ اَوْلَادِكُمْ ۗ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَیْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَبَوَیْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ یَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ لَا تَدْرُوْنَ اَیُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ؕ فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟

உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகின்றான்: ஓர் ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானது. (இறந்து போனவருக்கு) இரண்டுக்கு மேற்பட்ட பெண் மக்கள் இருந்தால், இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு அவர்களுக்குரியதாகும். மேலும், ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில்) பாதி அவளுக்குரியதாகும். இறந்துபோனவருக்குக் குழந்தைகள் இருப்பின், அவருடைய பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு. மேலும், அவருக்குக் குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே வாரிசுகளாக இருப்பின், தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும்; அவருக்கு சகோதர சகோதரிகளுமிருந்தால் தாய் ஆறிலொரு பங்கிற்கு உரிமை பெறுவாள். இறந்து போனவர் செய்த வஸிய்யத் (மரண சாசனம்) நிறைவேற்றப்பட்ட பின்பும், (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் (சொத்துக்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்). உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இப்பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான். திண்ணமாக, அல்லாஹ் (எல்லா உண்மை நிலைகளையும்) நன்கறிந்தவனாகவும் (பயன்களை) நன்கு புரிந்தவனாகவும் இருக்கின்றான்.

12

وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ یَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْنَ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ یَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ مِّنْ بَعْدِ وَصِیَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ وَاِنْ كَانَ رَجُلٌ یُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ ۚ فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِی الثُّلُثِ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصٰی بِهَاۤ اَوْ دَیْنٍ ۙ غَیْرَ مُضَآرٍّ ۚ وَصِیَّةً مِّنَ اللّٰهِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَلِیْمٌ ۟ؕ

மேலும் (மரணமடைந்த) உங்களுடைய மனைவியர் விட்டுச் சென்ற சொத்தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப்பங்கு உங்களுக்குரியது; அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் உங்களுக்குரியது. அவர்கள் செய்த மரண சாஸனம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அவர்கள் விட்டுச் சென்ற கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (அந்தப் பங்கு உங்களுக்கு உரியதாகும்). உங்களுக்குக் குழந்தைகள் இல்லையானால், நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் மனைவியர்க்குரியது; ஆனால், உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்திலிருந்து எட்டில் ஒரு பாகம் அவர்களுக்குரியதாகும். நீங்கள் செய்கின்ற வஸிய்யத் மரண சாசனம் நிறைவேற்றப்பட்ட பிறகும் உங்களுடைய கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (அந்தப் பங்கு அவர்களுக்குரியதாகும்). தாய்தந்தையரும் பிள்ளைகளும் இல்லாத (நிலையில், இறந்து போன) ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணுடைய சொத்து பங்கிடப்பட வேண்டியிருந்தால், அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருப்பின் அந்தச் சகோதரர் அல்லது சகோதரிக்கு ஆறில் ஒரு பாகம் கிட்டும். உடன்பிறப்புகள் ஒருவருக்கு மேற்பட்டவர்களாயிருந்தால் முழுச் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் எல்லோரும் பங்கு பெறுவார்கள். ஆனால், இது இறந்து போனவர் செய்திருந்த வஸிய்யத் மரண சாஸனம் நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவருடைய) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் (அந்தப் பங்கை அவர்கள் பெறுவார்கள். ஆனால் ஒரு நிபந்தனை:) அந்த மரண சாஸனம் யாருக்கும் கேடு விளைவிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். இது அல்லாஹ் இட்ட கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், மென்மையான இயல்புடையவனாகவும் இருக்கின்றான்.

13

تِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ یُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ وَذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟

இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் அவன் நுழையவைப்பான். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.

14

وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَتَعَدَّ حُدُوْدَهٗ یُدْخِلْهُ نَارًا خَالِدًا فِیْهَا ۪ وَلَهٗ عَذَابٌ مُّهِیْنٌ ۟۠

மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய மறுத்து அவனுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்களை அல்லாஹ் நரகத்தில் தள்ளுவான்! அதில் அவர்கள் நிலையாக விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு (அங்கு) இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது.

15

وَالّٰتِیْ یَاْتِیْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآىِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَیْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ ۚ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِی الْبُیُوْتِ حَتّٰی یَتَوَفّٰهُنَّ الْمَوْتُ اَوْ یَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِیْلًا ۟

உங்களுடைய பெண்களில் எவர்கள் மானக்கேடான செயல்புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க உங்களிலிருந்து நால்வரைச் சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் சாட்சியமளித்துவிட்டால், அப்பெண்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்!

16

وَالَّذٰنِ یَاْتِیٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا ۚ فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِیْمًا ۟

அதே செயலை உங்களில் இருவர் செய்துவிட்டால், அவ்விருவருக்கும் தண்டனை அளியுங்கள். பிறகு அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடித் தம்மைத் திருத்திக் கொண்டார்களாயின் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.

17

اِنَّمَا التَّوْبَةُ عَلَی اللّٰهِ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ یَتُوْبُوْنَ مِنْ قَرِیْبٍ فَاُولٰٓىِٕكَ یَتُوْبُ اللّٰهُ عَلَیْهِمْ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟

நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலைச் செய்துவிட்டாலும் உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான்.

18

وَلَیْسَتِ التَّوْبَةُ لِلَّذِیْنَ یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ۚ حَتّٰۤی اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّیْ تُبْتُ الْـٰٔنَ وَلَا الَّذِیْنَ یَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ؕ اُولٰٓىِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟

எவர்கள் தீய செயல்கள் புரிந்தவாறு இருந்து மரணம் நெருங்கும்போது ‘நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்’ என்று கூறுகின்றார்களோ அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது. மேலும் இறுதி மூச்சுவரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.

19

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَحِلُّ لَكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا ؕ وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ۚ وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّیَجْعَلَ اللّٰهُ فِیْهِ خَیْرًا كَثِیْرًا ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! விதவைப் பெண்களுக்கு பலவந்தமான வாரிசுதாரர்களாய் நீங்கள் திகழ்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! மேலும், அவர்களுக்கு நீங்கள் அளித்த மஹ்ரின் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைக் கஷ்டப்படுத்துவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல; அவர்கள் ஏதேனும் வெளிப்படையான இழிசெயலைச் செய்தாலேயன்றி! அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.

20

وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَیْتُمْ اِحْدٰىهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَیْـًٔا ؕ اَتَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟

நீங்கள் ஒரு மனைவிக்குப் பதிலாக வேறு ஒருத்தியை மனைவியாகக் கொண்டு வர நாடினால் நீங்கள் அவளுக்கு பணக்குவியலையே (மஹ்ராக) கொடுத்திருந்தாலும் கூட, அதிலிருந்து கொஞ்சம் கூட திரும்பப் பெறாதீர்கள். நீங்கள் அவதூறு கூறியும், வெளிப்படையாக கொடுமை இழைத்தும் அதனைத் திரும்பப் பெறுவீர்களா?

21

وَكَیْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰی بَعْضُكُمْ اِلٰی بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟

சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே! மேலும் அந்த மனைவியர் உங்களிடமிருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கின்றார்களே! (அவ்வாறிருக்க) அப்பொருளை அவர்களிடமிருந்து எவ்வாறு திரும்பப் பெற முடியும்?

22

وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِیْلًا ۟۠

மேலும், உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளாதீர்கள்! முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக்க செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும்.

23

حُرِّمَتْ عَلَیْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِیْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَاُمَّهٰتُ نِسَآىِٕكُمْ وَرَبَآىِٕبُكُمُ الّٰتِیْ فِیْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآىِٕكُمُ الّٰتِیْ دَخَلْتُمْ بِهِنَّ ؗ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَیْكُمْ ؗ وَحَلَآىِٕلُ اَبْنَآىِٕكُمُ الَّذِیْنَ مِنْ اَصْلَابِكُمْ ۙ وَاَنْ تَجْمَعُوْا بَیْنَ الْاُخْتَیْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۙ

(பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள் மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன் பிறந்த சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள்; மேலும், உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், மேலும், உங்கள் பால்குடிச் சகோதரிகள், மேலும் உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகையக் குற்றமும் இல்லை. மேலும் உங்கள் முதுகுத் தண்டுகளிலிருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவிய ராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன.) ஆனால் முன்னால் நடந்தது நடந்துவிட்டது. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.

24

وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ۚ كِتٰبَ اللّٰهِ عَلَیْكُمْ ۚ وَاُحِلَّ لَكُمْ مَّا وَرَآءَ ذٰلِكُمْ اَنْ تَبْتَغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِیْنَ غَیْرَ مُسٰفِحِیْنَ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِیْضَةً ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا تَرٰضَیْتُمْ بِهٖ مِنْ بَعْدِ الْفَرِیْضَةِ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟

மேலும், பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில்) உங்கள் கைவசம் வந்துவிட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்றப் பெண்களை உங்கள் செல்வத்தின் வாயிலாக (மஹ்ர் கொடுத்து) அடைந்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; (ஆனால் இந்த நிபந்தனையுடன்:) திருமண வரையறைக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் நீங்கள் தகாத உறவில் ஈடுபடக்கூடாது. நீங்கள் அவர்களிடம் அனுபவித்த இன்ப சுகத்திற்குப் பதிலாக அவர்களின் மஹ்ரை கடமை என உணர்ந்து அதனைக் கட்டாயம் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! ஆயினும் மஹ்ரை நிர்ணயம் செய்த பின்பு ஒருவருக்கொருவர் மனநிறைவோடு நீங்கள் ஏதேனும் உடன்பாடு செய்துகொண்டால் உங்கள் மீது தவறேதுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

25

وَمَنْ لَّمْ یَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ یَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ مِّنْ فَتَیٰتِكُمُ الْمُؤْمِنٰتِ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِاِیْمَانِكُمْ ؕ بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَیْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ ۚ فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ اَتَیْنَ بِفَاحِشَةٍ فَعَلَیْهِنَّ نِصْفُ مَا عَلَی الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ ؕ ذٰلِكَ لِمَنْ خَشِیَ الْعَنَتَ مِنْكُمْ ؕ وَاَنْ تَصْبِرُوْا خَیْرٌ لَّكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠

மேலும், ஈமான் இறைநம்பிக்கை கொண்ட அடிமைகளல்லாத பெண்களைத் திருமணம் செய்து கொள்ள உங்களில் எவர் வசதி வாய்ப்புப் பெறவில்லையோ அவர் உங்கள் ஆதிக்கத்தில் இருக்கின்ற இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளட்டும்! அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறியக்கூடியவன். நீங்கள் ஒருவர் இன்னொருவரிலிருந்து தோன்றியிருக்கிறீர்கள். எனவே அவ்வடிமைப் பெண்களை, அவர்களைப் பராமரிப்போரின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்! மேலும் அவர்களுக்குரிய மஹ்ரை நல்ல முறையில் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அப்பெண்கள் திருமண வரையறைக்கு உட்பட்டவர்களாகவும், தகாத உறவில் ஈடுபடாதவர்களாகவும், மற்றும் கள்ளக் காதலர்களை வைத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக (இந்த வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன!) மேலும் அவ்வடிமைப் பெண்கள் திருமண வரம்புக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு ஒழுக்கக்கேடான செயல் எதனையும் செய்து விட்டால் அடிமைகளல்லாத பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு. திருமணம் முடிக்காத காரணத்தால் இறையச்சமுடைய வாழ்விலிருந்து பிறழ்ந்து விடுவோமோ என்ற அச்சமுடையவர்க்கே (அடிமைப் பெண்களை மணந்து கொள்ளலாம் எனும்) இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. ஆயினும், நீங்கள் பொறுமையை மேற்கொள்வதே உங்களுக்குச் சிறந்ததாகும். மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனும் ஆவான்.

26

یُرِیْدُ اللّٰهُ لِیُبَیِّنَ لَكُمْ وَیَهْدِیَكُمْ سُنَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ وَیَتُوْبَ عَلَیْكُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟

உங்களுக்கு முன்சென்ற உத்தமர்களின் வழிமுறைகளை உங்களுக்கு விளக்கிடவும், அவ்வழிகளிலே உங்களை நடத்திச் செல்லவும் அல்லாஹ் விரும்புகின்றான் அவன் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்ப நாட்டம் கொண்டுள்ளான். மேலும், அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கின்றான்.

27

وَاللّٰهُ یُرِیْدُ اَنْ یَّتُوْبَ عَلَیْكُمْ ۫ وَیُرِیْدُ الَّذِیْنَ یَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِیْلُوْا مَیْلًا عَظِیْمًا ۟

ஆம்! அல்லாஹ் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்பவே விரும்புகிறான். ஆனால், தம் மன இச்சைகளைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்களோ நேரிய வழியிலிருந்து நீங்கள் வெகுதூரம் விலகிச் சென்றிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

28

یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّخَفِّفَ عَنْكُمْ ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِیْفًا ۟

அல்லாஹ் உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த விரும்புகின்றான். ஏனென்றால், மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

29

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَكُمْ بَیْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ ۫ وَلَا تَقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِیْمًا ۟

நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவர் மற்றொரு வரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! (பொருளீட்டுவதற்கு) உங்களுக்கிடையே பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கல்வாங்கல் இருக்க வேண்டும். உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்கள்மீது அளப்பரிய கருணை புரிபவனாக இருக்கின்றான்.

30

وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِیْهِ نَارًا ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟

எவன் வரம்பு மீறியும் அநீதியாகவும் இவ்வாறு செய்கின்றானோ அவனை நாம் நெருப்பில் வீசியே தீருவோம்! மேலும், இது அல்லாஹ்வுக்கு இலகுவானதாக உள்ளது.

31

اِنْ تَجْتَنِبُوْا كَبَآىِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَنُدْخِلْكُمْ مُّدْخَلًا كَرِیْمًا ۟

உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம்.

32

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰی بَعْضٍ ؕ لِلرِّجَالِ نَصِیْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ وَلِلنِّسَآءِ نَصِیْبٌ مِّمَّا اكْتَسَبْنَ ؕ وَسْـَٔلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمًا ۟

அல்லாஹ் உங்களில் சிலருக்கு சிலரைவிட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும், பெண்களுக்கு அவர்கள் சம்பாதித் ததற்கேற்ப பங்கு உண்டு. இருப்பினும் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கோரிய வண்ணம் இருங்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

33

وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِیَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ ؕ وَالَّذِیْنَ عَقَدَتْ اَیْمَانُكُمْ فَاٰتُوْهُمْ نَصِیْبَهُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدًا ۟۠

தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்துக்களிலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கைக் கொடுத்துவிடுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

34

اَلرِّجَالُ قَوّٰمُوْنَ عَلَی النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰی بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَیْبِ بِمَا حَفِظَ اللّٰهُ ؕ وَالّٰتِیْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِی الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَیْهِنَّ سَبِیْلًا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیًّا كَبِیْرًا ۟

ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு)மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்! மேலும் அவர்களை அடியுங்கள்! ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்துவிட்டால், பிறகு அவர்களுக்கு எதிராகக் கை நீட்ட எந்த சாக்குபோக்குகளையும் தேடாதீர்கள்! திண்ணமாக நம்புங்கள்: அல்லாஹ் மேலே இருக்கின்றான்; அவன் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கின்றான்.

35

وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَیْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا ۚ اِنْ یُّرِیْدَاۤ اِصْلَاحًا یُّوَفِّقِ اللّٰهُ بَیْنَهُمَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا خَبِیْرًا ۟

மேலும், கணவன், மனைவிக்கிடையே உறவு முறியுமோ என நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும், மனைவியரின் உறவினரிலிருந்து மற்றொரு நடுவரையும் நியமியுங்கள். அவ்விருவரும் உறவைச் சீர்படுத்த நாடினால், அல்லாஹ்வும் அவ்விருவருக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான். திண்ணமாக, அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.

36

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَیْـًٔا وَّبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّبِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَالْجَارِ ذِی الْقُرْبٰی وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْۢبِ وَابْنِ السَّبِیْلِ ۙ وَمَا مَلَكَتْ اَیْمَانُكُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۟ۙ

மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள்! மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், மற்றும் வழிப்போக்கர், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நயமாக நடந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

37

لَّذِیْنَ یَبْخَلُوْنَ وَیَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَیَكْتُمُوْنَ مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟ۚ

அவர்கள் தாமும் உலோபிகளாயிருந்து பிற மக்களையும் உலோபித்தனம் புரியுமாறு ஏவுவார்கள். மேலும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியுள்ள செல்வங்களை மறைப்பார்கள். (இத்தகையவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.) இத்தகைய நன்றி கெட்ட ஈனர்களுக்கு நாம் இழிவு தரும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.

38

وَالَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْیَوْمِ الْاٰخِرِ ؕ وَمَنْ یَّكُنِ الشَّیْطٰنُ لَهٗ قَرِیْنًا فَسَآءَ قَرِیْنًا ۟

மேலும், எவர்கள் தம் பொருளை பிறர் மெச்சுவதற்காகச் செலவழிக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றார்களோ அத்தகையவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. உண்மை என்னவெனில், ஷைத்தான் யாருக்குத் தோழனாகின்றானோ அவர் மிகவும் கெட்ட தோழனையே அடையப் பெற்றவராவார்.

39

وَمَاذَا عَلَیْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ ؕ وَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِیْمًا ۟

இவர்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் தமக்கு அளித்தவற்றிலிருந்து செலவும் செய்தால் இவர்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? (இவ்வாறு செய்திருந்தால்) இவர்கள் புரிந்த நன்மை அல்லாஹ்வைவிட்டு மறைந்துவிடாது.

40

اِنَّ اللّٰهَ لَا یَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ ۚ وَاِنْ تَكُ حَسَنَةً یُّضٰعِفْهَا وَیُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِیْمًا ۟

திண்ணமாக, அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அல்லாஹ் அதனை இரட்டிப்பாக்குகின்றான். தன்னிடமிருந்து மாபெரும் கூலியையும் வழங்குகின்றான்.

41

فَكَیْفَ اِذَا جِئْنَا مِنْ كُلِّ اُمَّةٍ بِشَهِیْدٍ وَّجِئْنَا بِكَ عَلٰی هٰۤؤُلَآءِ شَهِیْدًا ۟ؕؔ

(முஹம்மதே!) நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் சாட்சியாளர் ஒருவரைக் கொண்டு வந்து, உம்மையும் இவர்கள் மீது சாட்சியாளராகக் கொண்டு வரும் வேளையில் இவர்கள் என்ன செய்வார்கள் (என்று சிந்தியுங்கள்).

42

یَوْمَىِٕذٍ یَّوَدُّ الَّذِیْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰی بِهِمُ الْاَرْضُ ؕ وَلَا یَكْتُمُوْنَ اللّٰهَ حَدِیْثًا ۟۠

எவர்கள் இறைத்தூதரின் சொல்லைக் கேட்காமலும், அவருக்கு மாறு செய்து கொண்டும் இருந்தார்களோ அவர்கள் பூமி பிளந்து தங்களை விழுங்கியிருக்கக் கூடாதா என அந்நாளில் ஏங்குவார்கள். அங்கு அவர்கள் (தம்முடைய) எந்தச் செய்தியையும் அல்லாஹ்விடம் மறைத்திட முடியாது.

43

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْتُمْ سُكٰرٰی حَتّٰی تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِیْ سَبِیْلٍ حَتّٰی تَغْتَسِلُوْا ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤی اَوْ عَلٰی سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآىِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَیَمَّمُوْا صَعِیْدًا طَیِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَیْدِیْكُمْ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையோடிருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்; நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறிகின்ற போதுதான் தொழ வேண்டும். மேலும், நீங்கள் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் நிலையில், குளிக்கின்ற வரை தொழுகையை நெருங்காதீர்கள்! பாதையைக் கடப்பவர்களாக இருந்தாலே தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் கழித்துவிட்டு வந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், பிறகு தண்ணீர் உங்களுக்குக் கிடைக்கவில்லையெனில் சுத்தமான மண்ணைக் கொண்டு உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அதாவது (அதனை) உங்களின் முகங்களிலும் கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் கனிவு உடையவனாகவும், மன்னிப்பு வழங்குபவனாகவும் இருக்கின்றான்.

44

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یَشْتَرُوْنَ الضَّلٰلَةَ وَیُرِیْدُوْنَ اَنْ تَضِلُّوا السَّبِیْلَ ۟ؕ

வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு வழங்கப்பட்டிருப்பவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள், வழிகேட்டினை விலைக்கு வாங்குகின்றார்கள்; நீங்களும் வழிதவறிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

45

وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآىِٕكُمْ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَلِیًّا ؗۗ وَّكَفٰی بِاللّٰهِ نَصِیْرًا ۟

அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிபவனாயிருக்கின்றான். மேலும் உங்களுக்கு ஆதர வளிக்கவும், உதவி செய்யவும் அல்லாஹ்வே போதுமானவன்.

46

مِنَ الَّذِیْنَ هَادُوْا یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَیَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَیْنَا وَاسْمَعْ غَیْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَیًّا بِاَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِی الدِّیْنِ ؕ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَقْوَمَ ۙ وَلٰكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۟

யூதர்களில் சிலர் (வேதத்தின்) சொற்களை அவற்றின் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். சத்திய நெறியைப் பழித்துரைத்தவாறு தம் நாவுகளைச் சுழற்றி ‘ஸமிஃனா, வ அஸய்னா’ என்றும் ‘இஸ்மஃ கைர முஸ்மயின்’ என்றும் ‘ராயினா’ என்றும் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் ‘ஸமிஃனா வ அதஃனா’ என்றும் ‘இஸ்மஃ’ என்றும் ‘உன்ளுர்னா’ என்றும் கூறியிருப்பார்களேயானால் அது அவர்களுக்கு நன்மையானதாகவும், மிக நேர்மையான வழிமுறையாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களின் அசத்தியப் போக்கின் காரணமாக அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டுவிட்டது. எனவே, அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றார்கள்.

47

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰۤی اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِ ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ۟

வேதம் வழங்கப்பட்டவர்களே! (இப்போது) நாம் இறக்கி வைத்துள்ள (வேதத்)தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இது (முன்பு) உங்களிடம் இருந்த (வேதத்)தை மெய்ப்படுத்தக்கூடியதாய் இருக்கின்றது! நாம் முகங்களை உருக்குலைத்து அவற்றைப் பின்புறமாய்த் திருப்பி விடுவதற்கு முன்பே அல்லது அஸ்ஹாபுஸ் ஸப்த்தை சபித்தது போல நாம் சபிப்பதற்கு முன்பே! (நம்பிக்கை கொண்டு விடுங்கள்.) இன்னும் அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும் (என்பதை நினைவில் வையுங்கள்.)

48

اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ۚ وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَرٰۤی اِثْمًا عَظِیْمًا ۟

திண்ணமாக, தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள், திண்ணமாக பெரும் பொய்யைப் புனைந்தவராவர்; மேலும் பாவத்தைப் புரிந்தவராவர்.

49

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یُزَكُّوْنَ اَنْفُسَهُمْ ؕ بَلِ اللّٰهُ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ وَلَا یُظْلَمُوْنَ فَتِیْلًا ۟

தம்மைத் தாமே தூய்மையானவர்கள் எனப் பெருமையடித்துக் கொள்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? உண்மை என்னவெனில், தான் நாடுகின்றவர்களையே அல்லாஹ் தூய்மையாக்குகிறான். (அவர்கள் தூய்மைப்படுத்தப்படவில்லை எனில் அதற்கு யார் பொறுப்பு?) மேலும் அவர்கள் யார் மீதும் அணுவளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது.

50

اُنْظُرْ كَیْفَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ وَكَفٰی بِهٖۤ اِثْمًا مُّبِیْنًا ۟۠

பாருங்கள்! இவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்க சற்றும் தயங்குவதில்லையே! மேலும், வெளிப்படையான பாவியாவதற்கு இது ஒன்றே போதுமானதாகும்.

51

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ اُوْتُوْا نَصِیْبًا مِّنَ الْكِتٰبِ یُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَیَقُوْلُوْنَ لِلَّذِیْنَ كَفَرُوْا هٰۤؤُلَآءِ اَهْدٰی مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا سَبِیْلًا ۟

வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு வழங்கப்பட்டவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ ஜிப்தையும்*, தாஃகூத்தையும் ஏற்றுக்கொள்கின்றார்கள். மேலும் நம்பிக்கையற்றவர்களைக் குறித்து, “இவர்கள்தாம் இறை நம்பிக்கை கொண்டவர்களைவிட மிகவும் நேர்வழியிலிருக்கின்றார்கள்” என்று கூறுகிறார்கள்.

52

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ ؕ وَمَنْ یَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِیْرًا ۟ؕ

இத்தகையோரைத்தான் அல்லாஹ் சபித்துள்ளான். மேலும், யாரை அல்லாஹ் சபித்துவிட்டானோ அத்தகையவருக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்!

53

اَمْ لَهُمْ نَصِیْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا یُؤْتُوْنَ النَّاسَ نَقِیْرًا ۟ۙ

ஆட்சி அதிகாரத்தில் இவர்களுக்கு ஏதாவது பங்குண்டா? அப்படி இருக்குமாயின் இவர்கள் மற்றவர்களுக்கு அற்பப் பொருளைக்கூட கொடுக்க மாட்டார்கள்.

54

اَمْ یَحْسُدُوْنَ النَّاسَ عَلٰی مَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۚ فَقَدْ اٰتَیْنَاۤ اٰلَ اِبْرٰهِیْمَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَیْنٰهُمْ مُّلْكًا عَظِیْمًا ۟

மேலும், இவர்கள் அல்லாஹ் தன் அருளினால் மக்களுக்கு வழங்கியிருப்பதைக் கண்டு அவர்கள்மீது பொறாமை கொள்கின்றார்களா? அப்படியென்றால் நாம் இப்ராஹீமின் வழித்தோன்றல்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கொடுத்து மாபெரும் அரசாட்சியையும் வழங்கியிருக்கிறோமே!

55

فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ ؕ وَكَفٰی بِجَهَنَّمَ سَعِیْرًا ۟

ஆனால், இவர்களில் சிலர் அதனை நம்பினார்கள்; மற்றும் சிலர் புறக்கணித்தார்கள். மேலும், (புறக்கணிப்பவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே போதுமானதாகும்.

56

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا سَوْفَ نُصْلِیْهِمْ نَارًا ؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَیْرَهَا لِیَذُوْقُوا الْعَذَابَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِیْزًا حَكِیْمًا ۟

எவர்கள் நம் சான்றுகளை மறுக்கின்றார்களோ அவர்களை நிச்சயம் நாம் நரகில் வீசி எறிவோம்! அவர்களுடைய உடலின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம்; வேதனையை அவர்கள் நன்கு சுவைத்துக் கொண்டேயிருப்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் மிகையான ஆற்றல் உள்ளவனாகவும் (தன் முடிவுகளைச் செயல்படுத்தும் நுட்பத்தை) நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

57

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ لَهُمْ فِیْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ؗ وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِیْلًا ۟

மேலும் எவர்கள் நம் வசனங்களை ஏற்று நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். அங்கு அவர்களுக்கு மிகத் தூய்மையான துணைவியர் இருப்பர். மேலும் அவர்களை நாம் அடர்ந்த நிழலில் அமரச் செய்வோம்.

58

اِنَّ اللّٰهَ یَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰۤی اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَیْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا یَعِظُكُمْ بِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِیْعًا بَصِیْرًا ۟

(முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அமானத் அடைக்கலப் பொருள்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.

59

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَاُولِی الْاَمْرِ مِنْكُمْ ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِیْ شَیْءٍ فَرُدُّوْهُ اِلَی اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ ذٰلِكَ خَیْرٌ وَّاَحْسَنُ تَاْوِیْلًا ۟۠

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்.) பின்னர், ஏதேனும் விவகாரத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால் அதனை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் திருப்பி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டோராயின் இதுதான் சரியான வழிமுறையாகும்; இறுதி விளைவின் கோணத்திலிருந்து பார்த்தாலும் இதுவே சிறந்தது.

60

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ یَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ یُرِیْدُوْنَ اَنْ یَّتَحَاكَمُوْۤا اِلَی الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْۤا اَنْ یَّكْفُرُوْا بِهٖ ؕ وَیُرِیْدُ الشَّیْطٰنُ اَنْ یُّضِلَّهُمْ ضَلٰلًا بَعِیْدًا ۟

(நபியே!) நீர் இவர்களைப் பார்க்கவில்லையா? “உமக்கு இறக்கியருளப்பட்ட வேதத்தையும் உமக்கு முன்னால் இறக்கியருளப்பட்ட வேதங்களையும் நாங்கள் நம்பினோம்” எனக் கூறுகின்றார்கள். எனினும், அவர்கள் தீர்ப்புக்காக தம் விவகாரங்களை தாஃகூத்திடம் கொண்டு செல்லவே விரும்புகின்றார்கள். ஆயினும் தாஃகூத்தை நிராகரிக்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப் பட்டிருந்தார்கள். ஷைத்தான் அவர்களை முற்றிலும் வழிகெடுத்து வெகுதூரம் கொண்டு செல்ல விரும்புகின்றான்.

61

وَاِذَا قِیْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰی مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَی الرَّسُوْلِ رَاَیْتَ الْمُنٰفِقِیْنَ یَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا ۟ۚ

மேலும், ‘அல்லாஹ் இறக்கிவைத்த (சட்டத்)தின் பக்கமும், தூதரின் பக்கமும் வாருங்கள்’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வராமல் விலகிச் செல்வதையே நீர் பார்க்கின்றீர்.

62

فَكَیْفَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِیْبَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ثُمَّ جَآءُوْكَ یَحْلِفُوْنَ ۖۗ بِاللّٰهِ اِنْ اَرَدْنَاۤ اِلَّاۤ اِحْسَانًا وَّتَوْفِیْقًا ۟

பின்னர் அவர்களின் கைகள் செய்த தீவினைகளின் காரணத்தால் அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது நிலைமை என்னவாகும்? பிறகு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும், இரு பிரிவினரிடையே உடன்பாடு ஏற்படுத்து வதையும் தவிர நாங்கள் வேறெதையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்துகொண்டு உம்மிடம் வருவார்கள்.

63

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یَعْلَمُ اللّٰهُ مَا فِیْ قُلُوْبِهِمْ ۗ فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِیْۤ اَنْفُسِهِمْ قَوْلًا بَلِیْغًا ۟

இத்தகையவர்களின் இதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். எனவே, நீர் அவர்களின் நடத்தையைப் புறக்கணித்து விடுவீராக! அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! மேலும் அவர்களின் உள்ளங்களில் பதியக்கூடிய நல்லுரையை நீர் அவர்களுக்குக் கூறுவீராக!

64

وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِیُطَاعَ بِاِذْنِ اللّٰهِ ؕ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِیْمًا ۟

மேலும் (அவர்களுக்கு அறிவித்துவிடுவீராக:) அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை. தமக்குத் தாமே அவர்கள் அநீதி இழைத்துக்கொண்ட வேளையில், உம்மிடம் அவர்கள் வந்திருந்தால், இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்தால், அவர்களுக்காக தூதரும் மன்னிப்புக் கோரியிருந்தால், திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் கண்டிருப்பார்கள்.

65

فَلَا وَرَبِّكَ لَا یُؤْمِنُوْنَ حَتّٰی یُحَكِّمُوْكَ فِیْمَا شَجَرَ بَیْنَهُمْ ثُمَّ لَا یَجِدُوْا فِیْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَیْتَ وَیُسَلِّمُوْا تَسْلِیْمًا ۟

இல்லை! (முஹம்மதே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும், அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

66

وَلَوْ اَنَّا كَتَبْنَا عَلَیْهِمْ اَنِ اقْتُلُوْۤا اَنْفُسَكُمْ اَوِ اخْرُجُوْا مِنْ دِیَارِكُمْ مَّا فَعَلُوْهُ اِلَّا قَلِیْلٌ مِّنْهُمْ ؕ وَلَوْ اَنَّهُمْ فَعَلُوْا مَا یُوْعَظُوْنَ بِهٖ لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَشَدَّ تَثْبِیْتًا ۟ۙ

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுங்கள் என்றோ, உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறிச் செல்லுங்கள் என்றோ நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களில் சிலர்தான் அதன் படி செயல்பட்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி செயலாற்றுவார்களேயானால், அது அவர்களுக்கு மிக நன்மை அளிப்பதாகவும் (சத்தியத்தில்) அவர்களை நன்கு உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருந்திருக்கும்.

67

وَّاِذًا لَّاٰتَیْنٰهُمْ مِّنْ لَّدُنَّاۤ اَجْرًا عَظِیْمًا ۟ۙ

மேலும், அவ்வாறு செயல்பட்டிருந்தால் நம்மிடமிருந்து அவர்களுக்கு மகத்தான கூலியைக் கண்டிப்பாக நாம் வழங்கியிருப்போம்.

68

وَّلَهَدَیْنٰهُمْ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟

மேலும், அவர்களுக்கு நாம் நேரான வழியைக் காட்டியுமிருப்போம்.

69

وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓىِٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَالصِّدِّیْقِیْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِیْنَ ۚ وَحَسُنَ اُولٰٓىِٕكَ رَفِیْقًا ۟ؕ

எவர்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்கள் மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்!

70

ذٰلِكَ الْفَضْلُ مِنَ اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ عَلِیْمًا ۟۠

இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உண்மையான அருளாகும். மேலும் (இந்த மக்களுடைய) உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

71

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِیْعًا ۟

நம்பிக்கையுடையவர்களே! (போராடுவதற்காக எந்நேரமும்) நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள்! பிறகு (சந்தர்ப்பத்திற்கு ஏற்ப) தனித்தனிப் பிரிவுகளாகக் கிளம்புங்கள்! அல்லது எல்லோரும் சேர்ந்து புறப்படுங்கள்!

72

وَاِنَّ مِنْكُمْ لَمَنْ لَّیُبَطِّئَنَّ ۚ فَاِنْ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَالَ قَدْ اَنْعَمَ اللّٰهُ عَلَیَّ اِذْ لَمْ اَكُنْ مَّعَهُمْ شَهِیْدًا ۟

உண்மையில், போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுபவனும் உங்களில் இருக்கின்றான். பிறகு உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அவன் “திண்ணமாக, அல்லாஹ் என் மீது கருணை புரிந்துள்ளான். ஏனெனில், நான் அவர்களுடன் கலந்து கொள்ளவில்லை” என்று கூறுவான்.

73

وَلَىِٕنْ اَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللّٰهِ لَیَقُوْلَنَّ كَاَنْ لَّمْ تَكُنْ بَیْنَكُمْ وَبَیْنَهٗ مَوَدَّةٌ یّٰلَیْتَنِیْ كُنْتُ مَعَهُمْ فَاَفُوْزَ فَوْزًا عَظِیْمًا ۟

ஆனால், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு நல்லருள் கிடைத்தால் உங்களுக்கும் அவனுக்கும் இடையே எவ்வித நட்பும் இல்லாததுபோல் “அய்யகோ! நானும் அவர்களுடன் இருந்திருக்கலாமே; அதன் மூலம் மாபெரும் வெற்றியை நான் அடைந்திருப்பேனே!” என்று புலம்புவான்.

74

فَلْیُقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ الَّذِیْنَ یَشْرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا بِالْاٰخِرَةِ ؕ وَمَنْ یُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَیُقْتَلْ اَوْ یَغْلِبْ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟

(இத்தகையோர்க்கு இவ்வுண்மை தெரிந்திருக்க வேண்டுமே:) இவ்வுலக வாழ்வை விற்று மறுமையைப் பெற விரும்புவோர் அல்லாஹ்வின் வழியில் போர் புரியட்டும்! பிறகு, யார் அல்லாஹ்வின் வழியில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றி பெற்றாலும் சரி, அவருக்கு உறுதியாக மகத்தான கூலியை நாம் வழங்குவோம்.

75

وَمَا لَكُمْ لَا تُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْقَرْیَةِ الظَّالِمِ اَهْلُهَا ۚ وَاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ وَلِیًّا ۙۚ وَّاجْعَلْ لَّنَا مِنْ لَّدُنْكَ نَصِیْرًا ۟ؕ

மேலும், பலவீனர்களாக்கப்பட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில், நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ, “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! மேலும் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள்.

76

اَلَّذِیْنَ اٰمَنُوْا یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ وَالَّذِیْنَ كَفَرُوْا یُقَاتِلُوْنَ فِیْ سَبِیْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْۤا اَوْلِیَآءَ الشَّیْطٰنِ ۚ اِنَّ كَیْدَ الشَّیْطٰنِ كَانَ ضَعِیْفًا ۟۠

இறைநம்பிக்கையுடைய நடத்தையை மேற்கொண்டவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர்புரிவார்கள். நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டவர்கள் தாஃகூத்தின் வழியில் போர்புரிவார்கள். எனவே ஷைத்தானின் தோழர்களுடன் போர் புரியுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகும்.

77

اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ قِیْلَ لَهُمْ كُفُّوْۤا اَیْدِیَكُمْ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ۚ فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ یَخْشَوْنَ النَّاسَ كَخَشْیَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْیَةً ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَیْنَا الْقِتَالَ ۚ لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ؕ قُلْ مَتَاعُ الدُّنْیَا قَلِیْلٌ ۚ وَالْاٰخِرَةُ خَیْرٌ لِّمَنِ اتَّقٰی ۫ وَلَا تُظْلَمُوْنَ فَتِیْلًا ۟

(போர் புரியாமல்) உங்கள் கரங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்; மேலும் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள் என்று எவர்களிடம் கூறப்பட்டதோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? இப்பொழுது போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதைப் போல ஏன் அதைவிட அதிகமாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றார்கள்! “எங்கள் இறைவனே! போர் புரிவதை எங்கள் மீது ஏன் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்குத் தவணை அளித்திருக்கக் கூடாதா?” என்று கேட்கிறார்கள். (நபியே! அவர்களிடம்) கூறுவீராக: இவ்வுலக வாழ்வின் இன்பமனைத்தும் அற்பமானதே! மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சி வாழ்பவர்க்கு மறுமை மிகவும் சிறந்ததாகும். இன்னும் உங்களுக்கு இம்மியளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது.

78

اَيْنَمَا تَكُوْنُوْا یُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِیْ بُرُوْجٍ مُّشَیَّدَةٍ ؕ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ یَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ ؕ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ فَمَالِ هٰۤؤُلَآءِ الْقَوْمِ لَا یَكَادُوْنَ یَفْقَهُوْنَ حَدِیْثًا ۟

நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே! மேலும், அவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கிறார்கள்; ஆனால் அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின், “(முஹம்மதே!) இது உம்மிடமிருந்து வந்தது” எனக் கூறுகிறார்கள். நீர் கூறுவீராக: அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன. இம்மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்வதில்லையே!

79

مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ ؗ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَیِّئَةٍ فَمِنْ نَّفْسِكَ ؕ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا ؕ وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟

(மனிதனே!) உனக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின் அது அல்லாஹ்வின் அருளால்தான் கிடைக்கின்றது. ஆனால் உனக்கு ஏதேனும் கேடு ஏற்பட்டால் அது உன் வினையினால்தான் விளைகிறது. (முஹம்மதே!) மக்களுக்காக உம்மைத் தூதராய் நாம் அனுப்பியுள்ளோம். மேலும், இதற்கு அல்லாஹ்வின் சாட்சியே போதுமானது.

80

مَنْ یُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ۚ وَمَنْ تَوَلّٰی فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَیْهِمْ حَفِیْظًا ۟ؕ

யார், அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படிகின்றாரோ அவர் உண்மையில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவராவார். மேலும் யாரேனும் புறக்கணித்துவிட்டால், அவர்களின் பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை.

81

وَیَقُوْلُوْنَ طَاعَةٌ ؗ فَاِذَا بَرَزُوْا مِنْ عِنْدِكَ بَیَّتَ طَآىِٕفَةٌ مِّنْهُمْ غَیْرَ الَّذِیْ تَقُوْلُ ؕ وَاللّٰهُ یَكْتُبُ مَا یُبَیِّتُوْنَ ۚ فَاَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟

‘நாங்கள் கீழ்ப்படிகிறோம்’ என (நேரில்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், உம்மை விட்டு வெளியேறிவிட்டால், அவர்களில் ஒரு பிரிவினர் இரவில் கூடி நீர் கூறுகின்றவற்றிற்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களின் இந்த இரகசி யப் பேச்சுக்களையெல்லாம் அல்லாஹ் பதிவு செய்து வைக்கிறான். எனவே நீர் அவர்களைப் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! சார்ந்திருப்பதற்கு அல்லாஹ் போதுமானவன்.

82

اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَیْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِیْهِ اخْتِلَافًا كَثِیْرًا ۟

அவர்கள் குர்ஆனைப் பற்றிச் சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்.

83

وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَوْفِ اَذَاعُوْا بِهٖ ؕ وَلَوْ رَدُّوْهُ اِلَی الرَّسُوْلِ وَاِلٰۤی اُولِی الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِیْنَ یَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّیْطٰنَ اِلَّا قَلِیْلًا ۟

அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால், அதனை அவர்கள் பரப்பி விடுகின்றார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும், தம்மில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அச்செய்தியின் உண்மை நிலையை நன்கு அறிந்திருப்பார்கள். (உங்களிடம் எந்த அளவுக்குப் பலவீனங்கள் இருந்தன என்றால்) உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாமல் போயிருந்தால், உங்களில் சிலரைத் தவிர அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.

84

فَقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ لَا تُكَلَّفُ اِلَّا نَفْسَكَ وَحَرِّضِ الْمُؤْمِنِیْنَ ۚ عَسَی اللّٰهُ اَنْ یَّكُفَّ بَاْسَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ وَاللّٰهُ اَشَدُّ بَاْسًا وَّاَشَدُّ تَنْكِیْلًا ۟

எனவே, (நபியே!) நீர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிவீராக! உம்மைத் தவிர வேறு யாருக்கும் நீர் பொறுப்பாளியல்லர். ஆயினும், இறைநம்பிக்கையாளர்களுக்கு(ப் போர் புரியும்படி) ஆர்வமூட்டுவீராக! அல்லாஹ் இறைமறுப்பாளர்களின் பலத்தை முறியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ் அனைவரையும்விட வலிமை மிக்கவன். மேலும், தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்!

85

مَنْ یَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً یَّكُنْ لَّهٗ نَصِیْبٌ مِّنْهَا ۚ وَمَنْ یَّشْفَعْ شَفَاعَةً سَیِّئَةً یَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ مُّقِیْتًا ۟

யார் நன்மைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அந்நன்மையில் பங்கு பெறுவார்; மேலும், யார் தீமைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அத்தீமையில் பங்கு பெறுவார். மேலும், அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

86

وَاِذَا حُیِّیْتُمْ بِتَحِیَّةٍ فَحَیُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰی كُلِّ شَیْءٍ حَسِیْبًا ۟

மேலும், உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்துக் கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாய் இருக்கின்றான்.

87

اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ لَیَجْمَعَنَّكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِیْثًا ۟۠

அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் உங்கள் அனைவரையும் மறுமைநாளில் திண்ணமாக ஒன்று திரட்டுவான். அ(ந் நாள் வருவ)தில் எவ்வித ஐயமும் இல்லை. மேலும், அல்லாஹ்வைவிட உண்மை பேசுபவர் வேறு எவருமில்லை.

88

فَمَا لَكُمْ فِی الْمُنٰفِقِیْنَ فِئَتَیْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْا ؕ اَتُرِیْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا ۟

பிறகு உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு கருத்துடையவர்களாய் ஆகிவிட்டீர்கள்! ஆயினும் அல்லாஹ் அவர்கள் சம்பாதித்துக் கொண்ட தீவினைகளின் காரணமாக அவர்களைத் தலைகீழாகப் புரட்டி விட்டிருக்கின்றான். அல்லாஹ் எவருக்கு நேர்வழி வழங்கவில்லையோ, அவருக்கு நேர்வழிகாட்ட நீங்கள் விரும்புகின்றீர்களா? எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்தானோ அவர்களுக்கு எவ்வித வழியையும் நீர் காணமாட்டீர்.

89

وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَآءً فَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ اَوْلِیَآءَ حَتّٰی یُهَاجِرُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ فَاِنْ تَوَلَّوْا فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ وَجَدْتُّمُوْهُمْ ۪ وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟ۙ

அவர்கள் நம்பிக்கை கொள்ளாததைப் போலவே நீங்களும் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்; (இவ்வகையில்) நீங்களும் அவர்களும் சமமாகிவிட வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்* செய்யும் வரையில், அவர்களில் எவரையும் நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், அவர்கள் (ஹிஜ்ரத்தைப்) புறக்கணித்துவிட்டால், அவர்களை நீங்கள் எங்குக் கண்டாலும் பிடித்துக் கொன்று விடுங்கள். மேலும், அவர்களில் எவரையும் உங்களின் நண்பராகவோ, உதவியாளராகவோ ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

90

اِلَّا الَّذِیْنَ یَصِلُوْنَ اِلٰی قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ اَوْ جَآءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ یُّقَاتِلُوْكُمْ اَوْ یُقَاتِلُوْا قَوْمَهُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَیْكُمْ فَلَقٰتَلُوْكُمْ ۚ فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ یُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَیْكُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰهُ لَكُمْ عَلَیْهِمْ سَبِیْلًا ۟

ஆனால், எந்தச் சமுதாயத்திடம் நீங்கள் உடன் படிக்கை செய்துள்ளீர்களோ அந்தச் சமுதாயத்தோடு சேர்ந்துகொள்ளும் நயவஞ்சகர்கள் (இந்தக் கட்டளையிலிருந்து) விதிவிலக்கானவர்கள்! அதேபோல், உங்களுடன் போர் புரியவோ, தம் கூட்டத்தாருடன் போர் புரியவோ மனமில்லாமல் உங்களிடம் வருகின்ற நயவஞ்சகர்களும் விதிவிலக்கானவர்கள்! அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களின் ஆதிக்கத்தைத் திணித்திருப்பான். அவர்களும் உங்களுக்கு எதிராகப் போர் புரிந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் உங்களோடு போர் புரியாமல், உங்களை விட்டு விலகியிருந்தால், மேலும் அவர்கள் உங்களிடம் சமாதானக் கரம் நீட்டினால் அவர்களுக்கெதிராக கை நீட்டிட அல்லாஹ் உங்களுக்கு வழியேதும் வைத்திடவில்லை.

91

سَتَجِدُوْنَ اٰخَرِیْنَ یُرِیْدُوْنَ اَنْ یَّاْمَنُوْكُمْ وَیَاْمَنُوْا قَوْمَهُمْ ؕ كُلَّ مَا رُدُّوْۤا اِلَی الْفِتْنَةِ اُرْكِسُوْا فِیْهَا ۚ فَاِنْ لَّمْ یَعْتَزِلُوْكُمْ وَیُلْقُوْۤا اِلَیْكُمُ السَّلَمَ وَیَكُفُّوْۤا اَیْدِیَهُمْ فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَیْثُ ثَقِفْتُمُوْهُمْ ؕ وَاُولٰٓىِٕكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَیْهِمْ سُلْطٰنًا مُّبِیْنًا ۟۠

மற்றொரு வகை நயவஞ்சகர்களையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடமும் பாதுகாப்புப் பெற வேண்டும்; தமது சமுதாயத்திலும் பாதுகாப்புப் பெற வேண்டும் என விரும்புகின்றார்கள். ஆனால், குழப்பத்திற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதில் அவர்கள் குதித்து விடுவார்கள்! இத்தகையோர் உங்களோடு மோதுவதிலிருந்து விலகி உங்களிடம் சமாதானத்திற்கு வரவில்லையாயின், மேலும் தம் கைகளைத் தடுத்துக் கொள்ளவில்லையாயின், அப்போது அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் பிடித்துக் கொன்றுவிடுங்கள்! அவர்களுக்கெதிராக கைநீட்டிட உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை நாம் அளித்துவிட்டோம்.

92

وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ یَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـًٔاۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـًٔا فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ یَّصَّدَّقُوْا ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۭ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ فَدِیَةٌ مُّسَلَّمَةٌ اِلٰۤی اَهْلِهٖ وَتَحْرِیْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ ۚ فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ شَهْرَیْنِ مُتَتَابِعَیْنِ ؗ تَوْبَةً مِّنَ اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟

ஓர் இறைநம்பிக்கையாளருக்கு மற்றோர் இறை நம்பிக்கையாளரைக் கொல்வது என்பது ஏற்ற செயல் அல்ல; தவறாகக் கொன்றுவிட்டாலே தவிர! ஒருவர் ஓர் இறைநம்பிக்கையாளரைத் தவறாகக் கொலை செய்துவிட்டால் (அதற்குரிய பாவப் பரிகாரம்) இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்வதாகும். மேலும், கொல்லப்பட்ட வரின் வாரிசுகளுக்கு உயிரீட்டுத் தொகையைக் கொடுத்துவிட வேண்டும்; அவர்கள் அதனை மன்னித்துவிட்டாலே தவிர! ஆனால் கொல்லப்பட்டவர் உங்களோடு பகைமை கொண்ட சமுதாயத்தைச் சார்ந்த இறைநம்பிக்கையாளராய் இருந்தால், (அதற்குரிய பரிகாரம்) ஓர் இறைநம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வதாகும். மேலும், கொல்லப்பட்டவர் உங்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட (முஸ்லிமல்லாத) சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தால் (அதற்குரிய பரிகாரம்) அவருடைய வாரிசுகளுக்கு உயிரீட்டுத் தொகையை அளிப்பதுடன், இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும். ஆனால், அடிமை கிடைக்கப் பெறாதவன் தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இவை பாவமன்னிப்புக்காக, அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட முறைகளாகும். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான்.

93

وَمَنْ یَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَنَّمُ خٰلِدًا فِیْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَیْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِیْمًا ۟

ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால், அவனுக்குரிய கூலி நரகமாகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்துகிடப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் திணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

94

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ فَتَبَیَّنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَلْقٰۤی اِلَیْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا ۚ تَبْتَغُوْنَ عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؗ فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِیْرَةٌ ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَیْكُمْ فَتَبَیَّنُوْا ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழியில் (ஜிஹாத் செய்யப்) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு ஸலாம் (சாந்தி உண்டாகட்டும் என்று) சொன்னவரைப் பார்த்து, “நீ இறை நம்பிக்கை கொண்டவன் அல்லன்” எனக் கூறாதீர்கள். நீங்கள் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களைத்தான் தேடுகிறீர்கள் என்றால், அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன்பு நீங்களும் இதே நிலையில்தான் இருந்தீர்கள். பிறகு அல்லாஹ் உங்களுக்குப் பேருதவி புரிந்தான். எனவே, நீங்கள் தெளிவாகப் புரிந்து செயல்படுங்கள்! நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் திண்ணமாகத் தெரிந்திருக்கின்றான்.

95

لَا یَسْتَوِی الْقٰعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ غَیْرُ اُولِی الضَّرَرِ وَالْمُجٰهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِیْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَی الْقٰعِدِیْنَ دَرَجَةً ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِیْنَ عَلَی الْقٰعِدِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟ۙ

இறைநம்பிக்கையாளர்களில் எவர்கள் தக்க காரணம் எதுவுமின்றி ஜிஹாதில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் தங்கி விடுகின்றார்களோ அவர்களும், எவர்கள் தங்களுடைய உயிராலும் பொருளாலும், அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களும் சமமாக மாட்டார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களை விட தங்களுடைய உயிராலும் பொருளாலும் ஜிஹாத் செய்பவர்களுக்கு அல்லாஹ் சிறப்பான அந்தஸ்தை வைத்திருக்கின்றான். ஒவ்வொருவருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். எனினும் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களைவிட கலந்து கொண்டவர்களின் கூலி அவனிடம் மிக அதிகமானதாக இருக்கிறது.

96

دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠

அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த பதவிகளும் மன்னிப்பும் பேரருளும் இருக்கின்றன. மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், அருளிரக்கம் உடையவனுமாய் இருக்கின்றான்.

97

اِنَّ الَّذِیْنَ تَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ظَالِمِیْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِیْمَ كُنْتُمْ ؕ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِیْنَ فِی الْاَرْضِ ؕ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِیْهَا ؕ فَاُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟ۙ

தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, அவர்களிடம் “நீங்கள் எந்நிலையில் இருந்தீர்கள்?” என வினவுவார்கள். அதற்கு அவர்கள் “பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்” என பதிலளிப்பார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?” என வானவர்கள் வினவுவார்கள். இவர்களுக்குரிய இருப்பிடம் நரகம்தான்! மேலும் அது மிகக் கொடிய இருப்பிடமாகும்.

98

اِلَّا الْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ لَا یَسْتَطِیْعُوْنَ حِیْلَةً وَّلَا یَهْتَدُوْنَ سَبِیْلًا ۟ۙ

ஆனால், எவ்வித உபாயத்தையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல், உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர.

99

فَاُولٰٓىِٕكَ عَسَی اللّٰهُ اَنْ یَّعْفُوَ عَنْهُمْ ؕ وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا ۟

அவர்களை அல்லாஹ் பிழை பொறுக்கக்கூடும். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், மன்னிப்பு வழங்குபவனும் ஆவான்.

100

وَمَنْ یُّهَاجِرْ فِیْ سَبِیْلِ اللّٰهِ یَجِدْ فِی الْاَرْضِ مُرٰغَمًا كَثِیْرًا وَّسَعَةً ؕ وَمَنْ یَّخْرُجْ مِنْ بَیْتِهٖ مُهَاجِرًا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ یُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠

எவர் அல்லாஹ்வின் வழியில் ஹிஜ்ரத் செய்கின்றாரோ, அவர் பூமியில் எண்ணற்ற தங்குமிடங்களையும் வாழ்வதற்கான பெரும் வசதி வாய்ப்பையும் காண்பார். மேலும் ஒருவர் அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்வதற்காகத் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய பிறகு (வழியிலேயே) அவருக்கு மரணம் ஏற்பட்டுவிட்டால், திண்ணமாக அவருக்கு நற்கூலி வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அல்லாஹ் மிகவும் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.

101

وَاِذَا ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَقْصُرُوْا مِنَ الصَّلٰوةِ ۖۗ اِنْ خِفْتُمْ اَنْ یَّفْتِنَكُمُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ اِنَّ الْكٰفِرِیْنَ كَانُوْا لَكُمْ عَدُوًّا مُّبِیْنًا ۟

மேலும், நீங்கள் பயணம் புறப்பட்டுச் சென்றால் சில தொழுகைகளைச் சுருக்கிக் கொள்வதில் உங்கள் மீது தவறேதுமில்லை. (குறிப்பாக) இறைநிராகரிப்பாளர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால் (சுருக்கிக் கொள்ளலாம்). ஏனென்றால், திண்ணமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு வெளிப்படையான பகைவர்களாய் இருக்கின்றார்கள்.

102

وَاِذَا كُنْتَ فِیْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآىِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْیَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ ۫ فَاِذَا سَجَدُوْا فَلْیَكُوْنُوْا مِنْ وَّرَآىِٕكُمْ ۪ وَلْتَاْتِ طَآىِٕفَةٌ اُخْرٰی لَمْ یُصَلُّوْا فَلْیُصَلُّوْا مَعَكَ وَلْیَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ ۚ وَدَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَیَمِیْلُوْنَ عَلَیْكُمْ مَّیْلَةً وَّاحِدَةً ؕ وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَذًی مِّنْ مَّطَرٍ اَوْ كُنْتُمْ مَّرْضٰۤی اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ ۚ وَخُذُوْا حِذْرَكُمْ ؕ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟

மேலும், (நபியே!) நீர் முஸ்லிம்களிடையே இருக்கும்போது (போர் நிலையில்) அவர்களுக்குத் தொழ வைப்பீராயின் அவர்களில் ஒரு குழுவினர் தங்களுடைய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு உம்மோடு நின்று கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் ஸுஜூது செய்து முடித்துவிட்டால் பின்னால் சற்று விலகிச் சென்றுவிட வேண்டும். தொழாமல் இருக்கும் மற்றொரு குழுவினர் வந்து உம்மோடு தொழ வேண்டும். அத்துடன் அவர்களும் முன்னெச்சரிக்கையோடு தம் ஆயுதங்களை ஏந்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் ஆயுதங்களிலும் பொருள்களிலும் நீங்கள் கவனக் குறைவாக இருந்துவிட்டால், உங்கள் மீது ஒரேயடியாக திடீர் தாக்குதல் நடத்த நிராகரிப்போர் தக்க தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாய் இருந்தால், ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருங்கள். திண்ணமாக, அல்லாஹ் நிராகரிப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையைத் தயார் செய்து வைத்துள்ளான்.

103

فَاِذَا قَضَیْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِكُمْ ۚ فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ ۚ اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَی الْمُؤْمِنِیْنَ كِتٰبًا مَّوْقُوْتًا ۟

நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுக்கும்போதும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மேலும், எதிரிகள் குறித்து அச்சம் நீங்கிவிட்டால் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுங்கள்! உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.

104

وَلَا تَهِنُوْا فِی ابْتِغَآءِ الْقَوْمِ ؕ اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ یَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ ۚ وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا یَرْجُوْنَ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟۠

அந்தக் கூட்டத்தைத் துரத்திச் செல்வதில் தளர்ந்து விடாதீர்கள்! நீங்கள் கஷ்டப்படுகிறீர்களென்றால், உங்களைப் போன்று அவர்களும்தான் கஷ்டப்படுகிறார்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காதவற்றை நீங்கள் விரும்பி எதிர்பார்க்கின்றீர்கள். மேலும், அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

105

اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَیْنَ النَّاسِ بِمَاۤ اَرٰىكَ اللّٰهُ ؕ وَلَا تَكُنْ لِّلْخَآىِٕنِیْنَ خَصِیْمًا ۟ۙ

(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்துத் தந்த நேரிய வழியின்படி மக்களிடையே நீர் தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதற்காகவே உம்மீது இத்திருமறையை சத்தியத்துடன் நாம் இறக்கி வைத்தோம். நீர் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு வாதாடுபவராய் இருக்க வேண்டாம்.

106

وَّاسْتَغْفِرِ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟ۚ

மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக! திண்ணமாக அல்லாஹ், மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.

107

وَلَا تُجَادِلْ عَنِ الَّذِیْنَ یَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِیْمًا ۟ۚۙ

தமக்குத் தாமே வஞ்சகம் செய்து கொள்கின்றவர்களுக்காக நீர் வாதாடாதீர்! திண்ணமாக, நம்பிக்கைத் துரோகம் செய்பவனையும் பாவம் புரிவதையே வழக்கமாகக் கொண்டவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

108

یَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا یَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ یُبَیِّتُوْنَ مَا لَا یَرْضٰی مِنَ الْقَوْلِ ؕ وَكَانَ اللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطًا ۟

அவர்கள் (தம் இழிசெயல்களை) மனிதர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ளலாம். ஆனால், அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. அவனோ அவனுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்கள் சதியாலோசனை செய்து கொண்டிருக்கும்போது கூட அவர்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் அவர்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான்.

109

هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ جٰدَلْتُمْ عَنْهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۫ فَمَنْ یُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ یَوْمَ الْقِیٰمَةِ اَمْ مَّنْ یَّكُوْنُ عَلَیْهِمْ وَكِیْلًا ۟

சரி! இக்குற்றவாளிகளின் சார்பில் உலக வாழ்க்கையின்போது நீங்கள் வாதாடிவிட்டீர்கள். ஆனால், மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்காக வாதாடுபவர் யார்? அல்லது அவர்களுக்காக பொறுப்பேற்பவர் யார்?

110

وَمَنْ یَّعْمَلْ سُوْٓءًا اَوْ یَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ یَسْتَغْفِرِ اللّٰهَ یَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِیْمًا ۟

மேலும் ஒருவர் தீய செயல்புரிந்து, அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்துக்கொண்டு பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையாளனாகவும் இருப்பதை அவர் காண்பார்.

111

وَمَنْ یَّكْسِبْ اِثْمًا فَاِنَّمَا یَكْسِبُهٗ عَلٰی نَفْسِهٖ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟

ஆனால், ஒருவன் பாவத்தைச் சம்பாதிப்பானாகில் தனக்குக் கேடாகவே அவன் அதைச் சம்பாதித்துக் கொள்கின்றான். அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

112

وَمَنْ یَّكْسِبْ خَطِیْٓئَةً اَوْ اِثْمًا ثُمَّ یَرْمِ بِهٖ بَرِیْٓـًٔا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِیْنًا ۟۠

மேலும், ஒருவன் ஒரு தவறை அல்லது ஒரு பாவத்தைச் செய்துவிட்டு ஒரு நிரபராதியின் மீது அதைச் சுமத்திவிட்டால் அவன் பெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தையும் நிச்சயம் சுமந்து கொள்பவனாவான்.

113

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآىِٕفَةٌ مِّنْهُمْ اَنْ یُّضِلُّوْكَ ؕ وَمَا یُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا یَضُرُّوْنَكَ مِنْ شَیْءٍ ؕ وَاَنْزَلَ اللّٰهُ عَلَیْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ ؕ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَیْكَ عَظِیْمًا ۟

(நபியே!) அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருளும் உம்மீது பொழிந்திராவிட்டால் (உம்மை அவர்கள் வழி தவறச் செய்திருப்பார்கள். ஏனெனில்) அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மைத் தவறான கருத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று முடிவு கட்டியிருந்தார்கள். உண்மையில், அவர்கள் தங்களை அன்றி வேறெவரையும் தவறான கருத்தில் ஆழ்த்திக்கொள்ளவில்லை. மேலும், அவர்களால் உமக்கு யாதொரு தீங்கையும் இழைக்க முடியாது. அல்லாஹ் உமக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் அருளினான். மேலும், நீர் அறியாதவற்றையும் உமக்குக் கற்றுத் தந்தான். அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடையோ மகத்தானதாகும்.

114

لَا خَیْرَ فِیْ كَثِیْرٍ مِّنْ نَّجْوٰىهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍ بَیْنَ النَّاسِ ؕ وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟

மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களுக்கிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் பேச்சுக்களைத் தவிர! (அவற்றில் நன்மை உண்டு.) மேலும் எவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடுவதற்காக இவ்வாறு செய்கின்றாரோ அவருக்கு நாம் விரைவில் மகத்தான கூலியை வழங்குவோம்.

115

وَمَنْ یُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُ الْهُدٰی وَیَتَّبِعْ غَیْرَ سَبِیْلِ الْمُؤْمِنِیْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰی وَنُصْلِهٖ جَهَنَّمَ ؕ وَسَآءَتْ مَصِیْرًا ۟۠

மேலும், தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், எவன் இறைத்தூதரிடம் பகைமை காட்டுவதில் முனைப்பாக இருக்கின்றானோ, இறைநம்பிக்கையாளர்களின் நடத்தைக்கு மாறான பாதையில் செல்கின்றானோ, அவனை அவன் திரும்பிவிட்ட திசையிலேயே நாம் செலுத்துவோம்; பின்னர் அவனை நரகத்தில் வீசி எறிவோம்! அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.

116

اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ؕ وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟

திண்ணமாக தனக்கு இணைவைப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்; இது தவிர அனைத்தையும் தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னித்து விடுவான். எனவே, யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவன் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான்.

117

اِنْ یَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اِنٰثًا ۚ وَاِنْ یَّدْعُوْنَ اِلَّا شَیْطٰنًا مَّرِیْدًا ۟ۙ

அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தேவதைகளை வணக்கத்திற்குரியவர்களாக எடுத்துக்கொள்கின்றார்கள்! மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தானை அவர்கள் வணக்கத்திற்கு உரியவனாக எடுத்துக் கொள்கிறார்கள்!

118

لَّعَنَهُ اللّٰهُ ۘ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِیْبًا مَّفْرُوْضًا ۟ۙ

அவனையோ அல்லாஹ் சபித்திருக்கின்றான். (இவர்கள் பின்பற்றும் ஷைத்தான் எத்தகையவன் எனில்) அவன் அல்லாஹ்வை நோக்கிக் கூறினான்: “உன் அடிமைகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கினை திண்ணமாக நான் வாங்கியே தீருவேன்.

119

وَّلَاُضِلَّنَّهُمْ وَلَاُمَنِّیَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُبَتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُغَیِّرُنَّ خَلْقَ اللّٰهِ ؕ وَمَنْ یَّتَّخِذِ الشَّیْطٰنَ وَلِیًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِیْنًا ۟ؕ

மேலும், நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன்; ஆசைகளில் அவர்களை உழலவைப்பேன். இன்னும், நான் அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; (அதன்படி) அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுத்து விடுவார்கள். மேலும், நான் அவர்களுக்கு ஆணை பிறப்பிப்பேன்; (அதன்படி) அல்லாஹ் படைத்த ஒழுங்கமைப்பில் அவர்கள் மாற்றங்கள் செய்வார்கள்.” எவன் அல்லாஹ்வை விட்டுவிட்டு, இந்த ஷைத்தானைத் தன்னுடைய நண்பனாகவும், பாதுகாவலனாகவும் எடுத்துக் கொள்கின்றானோ அவன் அப்பட்டமான இழப்புக் குரியவன் ஆவான்.

120

یَعِدُهُمْ وَیُمَنِّیْهِمْ ؕ وَمَا یَعِدُهُمُ الشَّیْطٰنُ اِلَّا غُرُوْرًا ۟

அவன் அவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றான்; ஆசையூட்டுகின்றான். ஆனால், ஷைத்தான் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

121

اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؗ وَلَا یَجِدُوْنَ عَنْهَا مَحِیْصًا ۟

இத்தகையோர் தங்குமிடம் நரகம்தான்! அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழி எதனையும் அவர்கள் காணமாட்டார்கள்.

122

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِیْلًا ۟

யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடும் சுவனப்பூங்காக்களில் நுழைய வைப்போம்; அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இது அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதியாகும். தம் சொல்லில், அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் வேறு யார் உளர்?

123

لَیْسَ بِاَمَانِیِّكُمْ وَلَاۤ اَمَانِیِّ اَهْلِ الْكِتٰبِ ؕ مَنْ یَّعْمَلْ سُوْٓءًا یُّجْزَ بِهٖ ۙ وَلَا یَجِدْ لَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟

இறுதி விளைவு, நீங்கள் ஆசைப்படுவது போலவோ, வேதம் அருளப்பட்டவர்கள் ஆசைப்படுவது போலவோ ஏற்படப்போவதில்லை. எவன் தீமை செய்தாலும் அவன் அதற்குரிய விளைவை அடைவான். அல்லாஹ்வைத் தவிர தனக்கு வேறெந்த காப்பாளனையும், உதவியாளனையும் அவன் காணமாட்டான்.

124

وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُ وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ نَقِیْرًا ۟

மேலும் நற்செயல்கள் புரிவோர் அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின், அவர்கள்தாம் சுவனத்தில் நுழைவார்கள். மேலும் இம்மியளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

125

وَمَنْ اَحْسَنُ دِیْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِیْمَ حَنِیْفًا ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِیْمَ خَلِیْلًا ۟

மேலும், எவர் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, தன்னுடைய நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு ஒருமனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றினாரோ அவரை விடச் சிறந்த வாழ்க்கை நெறி உடையவர் யார்? இப்ராஹீமையோ அல்லாஹ் தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

126

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطًا ۟۠

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; மேலும் அல்லாஹ் யாவற்றையும் சூழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான்.

127

وَیَسْتَفْتُوْنَكَ فِی النِّسَآءِ ؕ قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِیْهِنَّ ۙ وَمَا یُتْلٰی عَلَیْكُمْ فِی الْكِتٰبِ فِیْ یَتٰمَی النِّسَآءِ الّٰتِیْ لَا تُؤْتُوْنَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُوْنَ اَنْ تَنْكِحُوْهُنَّ وَالْمُسْتَضْعَفِیْنَ مِنَ الْوِلْدَانِ ۙ وَاَنْ تَقُوْمُوْا لِلْیَتٰمٰی بِالْقِسْطِ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَیْرٍ فَاِنَّ اللّٰهَ كَانَ بِهٖ عَلِیْمًا ۟

பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்குமாறு அவர்கள் உம்மிடம் கோருகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்: “அவர்கள் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்ற சட்டங்களையும் (நினைவுபடுத்துகின்றான்). அதாவது எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதுமில்லையோ (அல்லது பேராசையின் காரணமாக நீங்களே அவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்களோ) அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் மற்றும் பலவீனமான குழந்தைகள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவுபடுத்துகிறான்). மேலும், அநாதைகள் விஷயத்தில் நீதியைக் கடைப்பிடியுங்கள் என்றும் அல்லாஹ் உங்களுக்கு ஏவுரை வழங்குகின்றான். மேலும், நீங்கள் செய்யும் எந்த ஒரு நன்மையையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தே இருக்கின்றான்.

128

وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یُّصْلِحَا بَیْنَهُمَا صُلْحًا ؕ وَالصُّلْحُ خَیْرٌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟

ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன்மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை; எந்நிலையிலும் சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும். மனித உள்ளங்கள் குறுகிய எண்ணத்திற்கும் உலோபித்தனத்திற்கும் (விரைவாக) உட்பட்டுவிடுகின்றன. ஆனால், நீங்கள் இஹ்ஸான் நன்முறையில் வாழ்ந்து, இறையச்சத்தோடு செயல்படுவீர்களானால் திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.

129

وَلَنْ تَسْتَطِیْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَیْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِیْلُوْا كُلَّ الْمَیْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ ؕ وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟

மனைவியருக்கு இடையே முழுக்க முழுக்க நீதியாக நடந்துகொள்ள நீங்கள் விரும்பினாலும், அது உங்களால் முடியாது. எனவே, நீங்கள் (ஒரு மனைவியின் பக்கமே) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் விடப்பட்டவள் போல் ஒதுக்கிவிடாதீர்கள். (இதுவே இறைச்சட்டத்தின் நோக்கத்தை நிறைவு செய்யப் போதுமானதாகும்.) நீங்கள், உங்கள் நடத்தையைச் சீராக்கிக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தால் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.

130

وَاِنْ یَّتَفَرَّقَا یُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖ ؕ وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِیْمًا ۟

ஆனால் கணவன் மனைவியரில் ஒருவர் மற்றவரை விட்டுப் பிரிந்து போவார்களானால், அல்லாஹ், தனது பரந்த ஆற்றலினால் அவர்களை ஒருவர் மற்றவரின் பக்கம் தேவையற்றவராய் ஆக்கிவிடுவான். அல்லாஹ் பரந்த ஆற்றலுடையவனும் அறிவார்ந்தவனுமாவான்.

131

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَلَقَدْ وَصَّیْنَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِیَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ غَنِیًّا حَمِیْدًا ۟

வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் செயல்படுங்கள் என்றே உங்களுக்கு முன்னால் வேதம் வழங்கப்பட்டவர்களுக்கு நாம் அறிவுறுத்தியிருந்தோம். இப்போது உங்களுக்கும் (அதனையே அறிவுறுத்துகின்றோம்.) நீங்கள் நம்பவில்லையெனில் நம்பாதிருங்கள்! வானங்களிலுள்ள வையும், பூமியிலுள்ளவையும் திண்ணமாக அல்லாஹ்வுக்கே உரியன (என்பதை நினைவில் வையுங்கள்!) அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும், அனைத்துப் புகழுக்கும் உரியவனாகவும் இருக்கின்றான்.

132

وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟

ஆம்! வானங்கள் பூமியிலுள்ள அனைத்திற்கும் அல்லாஹ்வே உரிமையாளன் ஆவான். அவற்றின் பொறுப்புகளை ஏற்க அவனே போதுமானவன்!

133

اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ اَیُّهَا النَّاسُ وَیَاْتِ بِاٰخَرِیْنَ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰی ذٰلِكَ قَدِیْرًا ۟

மனிதர்களே, அவன் நினைத்தால் உங்களை அகற்றிவிட்டு (உங்களுக்குப் பகரமாக) மற்றவர்களைக் கொண்டு வருவான். இவ்வாறு செய்ய அல்லாஹ் முழு வலிமை பெற்றவனாக இருக்கின்றான்.

134

مَنْ كَانَ یُرِیْدُ ثَوَابَ الدُّنْیَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ وَكَانَ اللّٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟۠

இம்மைக்குரிய பயனை மட்டும் விரும்புகின்றவர், அல்லாஹ்விடத்தில் இம்மை, மறுமை இரண்டிற்குரிய நற்பயன்களும் இருக்கின்றன என்பதனைத் தெரிந்து கொள்ளட்டும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.

135

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوّٰمِیْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰۤی اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ ۚ اِنْ یَّكُنْ غَنِیًّا اَوْ فَقِیْرًا فَاللّٰهُ اَوْلٰی بِهِمَا ۫ فَلَا تَتَّبِعُوا الْهَوٰۤی اَنْ تَعْدِلُوْا ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவராகவும் அல்லாஹ்வுக்காக சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்! (நீங்கள் செலுத்தும் நீதியும், வழங்கும் சாட்சியும்) உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! (நீங்கள் யாருக்காக சாட்சி சொல்கின்றீர்களோ) அவர் செல்வந்தராகவோ ஏழையாகவோ இருந்தாலும் சரியே! அல்லாஹ் அவர்களின் நலனில் உங்களைவிட அதிக அக்கறை உள்ளவனாக இருக்கின்றான். எனவே, மன இச்சையைப் பின்பற்றி நீதி தவறி விடாதீர்கள். நீங்கள் உண்மைக்குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ, சாட்சியளிக்காமல் விலகிச் சென்றாலோ திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

136

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِیْ نَزَّلَ عَلٰی رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِیْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ ؕ وَمَنْ یَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْیَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும், அவன் தன்னுடைய தூதர் மீது இறக்கி அருளிய வேதத்தின் மீதும், இதற்கு முன்னால் அவன் இறக்கி வைத்த வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், மறுமைநாளையும் மறுக்கின்றானோ அவன் வழி கேட்டிலே உழன்று வெகுதூரம் சென்றுவிட்டான்.

137

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ سَبِیْلًا ۟ؕ

எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரித்தார்களோ, மறுமுறையும் நம்பிக்கை கொண்டு அதற்குப் பின்பும் நிராகரித்தார்களோ பிறகு தம் நிராகரிப்பில் தீவிரமாக மூழ்கிக்கொன்டே சென்றார்களோ அத்தகையோரை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்; மேலும், அவர்களுக்கு நேர்வழி காட்டவும் மாட்டான்.

138

بَشِّرِ الْمُنٰفِقِیْنَ بِاَنَّ لَهُمْ عَذَابًا اَلِیْمَا ۟ۙ

நயவஞ்சகர்களுக்கு திண்ணமாக துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது எனும் நற்செய்தியை அறிவிப்பீராக!

139

لَّذِیْنَ یَتَّخِذُوْنَ الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ اَیَبْتَغُوْنَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَاِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ۟ؕ

இவர்கள் இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்போரைத் தம் நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்நிராகரிப்போரிடம் கண்ணியத்தை தேடிச் செல்கின்றார்களா? உண்மையில் எல்லாவிதமான கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.

140

وَقَدْ نَزَّلَ عَلَیْكُمْ فِی الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰیٰتِ اللّٰهِ یُكْفَرُ بِهَا وَیُسْتَهْزَاُ بِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰی یَخُوْضُوْا فِیْ حَدِیْثٍ غَیْرِهٖۤ ۖؗ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ ؕ اِنَّ اللّٰهَ جَامِعُ الْمُنٰفِقِیْنَ وَالْكٰفِرِیْنَ فِیْ جَهَنَّمَ جَمِیْعَا ۟ۙ

எங்காவது (சிலரால்) அல்லாஹ்வின் திருவசனங்கள் மறுத்துரைக்கப்படுவதையும் அவை ஏளனம் செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால், அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும் வரை (அங்கு) அவர்களுடன் நீங்கள் உட்காராதீர்கள் என்று (முன்பே) இவ்வேதத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். இனி அவ்வாறு செய்வீர்களாயின் நீங்களும் அவர்களைப் போன்றவராவீர்கள். உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் நயவஞ்சகர்களையும், நிராகரிப்பவர்களையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றான்.

141

لَّذِیْنَ یَتَرَبَّصُوْنَ بِكُمْ ۚ فَاِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللّٰهِ قَالُوْۤا اَلَمْ نَكُنْ مَّعَكُمْ ۖؗ وَاِنْ كَانَ لِلْكٰفِرِیْنَ نَصِیْبٌ ۙ قَالُوْۤا اَلَمْ نَسْتَحْوِذْ عَلَیْكُمْ وَنَمْنَعْكُمْ مِّنَ الْمُؤْمِنِیْنَ ؕ فَاللّٰهُ یَحْكُمُ بَیْنَكُمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَلَنْ یَّجْعَلَ اللّٰهُ لِلْكٰفِرِیْنَ عَلَی الْمُؤْمِنِیْنَ سَبِیْلًا ۟۠

இந்நயவஞ்சகர்கள் உங்களுக்கு என்ன நேரப் போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு வெற்றி கிட்டினால், “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுவார்கள். நிராகரிப்போரின் கை ஓங்கியிருந்தால், “உங்களுக்கு எதிராகப் போரிட நாங்கள் சக்தி பெற்றிருக்கவில்லையா? (இருந்தும்) இறை நம்பிக்கையாளரிடமிருந்து நாங்கள் உங்களைக் காப்பாற்றவில்லையா?” என்று (அவர்களிடம்) கூறுவார்கள். உங்களுக்கும் அவர்களுக்குமிடையே இதைக் குறித்து மறுமைநாளில் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். (அத்தீர்ப்பில்) இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிராக, நிராகரிப்பவர்கள் மேலோங்க எவ்வழியும் அல்லாஹ் ஒரு போதும் வைத்திடமாட்டான்.

142

اِنَّ الْمُنٰفِقِیْنَ یُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَی الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰی ۙ یُرَآءُوْنَ النَّاسَ وَلَا یَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِیْلًا ۟ؗۙ

இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகின்றார்கள். உண்மையில் அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல்பட்டுக் கொண்டே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும், அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவுகூருகிறார்கள்.

143

مُّذَبْذَبِیْنَ بَیْنَ ذٰلِكَ ۖۗ لَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ وَلَاۤ اِلٰی هٰۤؤُلَآءِ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِیْلًا ۟

(முழுமையாக இவர்களோடுமில்லாமல், அவர்களோடுமில்லாமல்), இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடையில் தடுமாறி நிற்கிறார்கள். அல்லாஹ் எவனை வழிகெடுக்கின்றானோ அவனை (நேர்வழிப் படுத்த) வேறு எந்த வழிவகையும் நீர் காணமாட்டீர்.

144

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِیْنَ اَوْلِیَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِیْنَ ؕ اَتُرِیْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَیْكُمْ سُلْطٰنًا مُّبِیْنًا ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்போரை உங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான ஆதாரத்தை நீங்களே அல்லாஹ்விடம் கொடுத்திட விரும்புகின்றீர்களா?

145

اِنَّ الْمُنٰفِقِیْنَ فِی الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِیْرًا ۟ۙ

திண்ணமாக, நயவஞ்சகர்கள் நரகத்தின் மிக அடித்தட்டிற்கே செல்வார்கள். மேலும், அவர்களுக்கு உதவி செய்வோர் எவரையும் நீர் காணமாட்டீர்.

146

اِلَّا الَّذِیْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِیْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓىِٕكَ مَعَ الْمُؤْمِنِیْنَ ؕ وَسَوْفَ یُؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟

ஆயினும், (இவர்களில்) யார் பாவமன்னிப்புக் கோருபவராக விளங்கி, தம் செயல்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ, மேலும், அல்லாஹ்வின் வேதத்தை இறுகப் பற்றிக்கொண்டு தமது தீனை நெறியை அல்லாஹ்வுக்கே உரித்தானதாக்கிக் கொள்கின்றார்களோ, அத்தகையோர் இறைநம்பிக்கையாளர்களுடன் இருப்பர். மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை விரைவில் வழங்குவான்.

147

مَا یَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْ ؕ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِیْمًا ۟

நீங்கள் நன்றி செலுத்துபவர்களாய் இருந்து இறைநம்பிக்கையின் வழியில் நடப்பீர்களாயின் உங்களை ஏன் அல்லாஹ் தண்டிக்கப் போகின்றான்? மேலும், அல்லாஹ் நன்றியை மதிப்பவனாகவும், யாவையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

148

لَا یُحِبُّ اللّٰهُ الْجَهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ ؕ وَكَانَ اللّٰهُ سَمِیْعًا عَلِیْمًا ۟

அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மேலும், அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

149

اِنْ تُبْدُوْا خَیْرًا اَوْ تُخْفُوْهُ اَوْ تَعْفُوْا عَنْ سُوْٓءٍ فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِیْرًا ۟

(அநீதி இழைக்கப்பட்ட நிலையில், தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேச உங்களுக்கு அனுமதியுண்டு.) ஆனால், நீங்கள் வெளிப்படையாகவும் மறைவாகவும் நற்செயலை செய்தவண்ணம் இருங்கள்; அல்லது குறைந்தபட்சம் (அநீதியாளர்களின் தீங்கை) மன்னித்துவிடுங்கள். அவ்வாறு செய்தால் (தண்டனை வழங்க) அவன் முழு ஆற்றல் பெற்றிருக்கின்றான். (ஆயினும்) அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.

150

اِنَّ الَّذِیْنَ یَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَیُرِیْدُوْنَ اَنْ یُّفَرِّقُوْا بَیْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَیَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍ ۙ وَّیُرِیْدُوْنَ اَنْ یَّتَّخِذُوْا بَیْنَ ذٰلِكَ سَبِیْلًا ۙ۟

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் வேற்றுமையை ஏற்படுத்த விரும்புகின்றார்களோ, மேலும் நாங்கள் இறைத்தூதர்களில் சிலரை ஏற்றுக்கொள்வோம்; சிலரை ஏற்கமாட்டோம் என்று கூறுகின்றார்களோ, மேலும், இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடைப்பட்ட ஒரு வழியினை அமைத்திட விரும்புகின்றார்களோ

151

اُولٰٓىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ حَقًّا ۚ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟

அவர்கள்தாம் உண்மையில் அப்பட்டமான நிராகரிப்போர் ஆவர். இந்நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.

152

وَالَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ وَلَمْ یُفَرِّقُوْا بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ اُولٰٓىِٕكَ سَوْفَ یُؤْتِیْهِمْ اُجُوْرَهُمْ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠

(ஆனால்) எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்கள் அனைவரையும் நம்பி தூதர்களுக்கிடையே வேற்றுமை பாராட்டவுமில்லையோ அவர்களுக்கு அவர்களின் கூலிகளை நிச்சயம் வழங்குவோம். மேலும், அல்லாஹ் அதிக மன்னிப்பு வழங்குபவனும் கருணை நிறைந்தோனுமாய் இருக்கின்றான்.

153

یَسْـَٔلُكَ اَهْلُ الْكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَیْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ فَقَدْ سَاَلُوْا مُوْسٰۤی اَكْبَرَ مِنْ ذٰلِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰلِكَ ۚ وَاٰتَیْنَا مُوْسٰی سُلْطٰنًا مُّبِیْنًا ۟

(நபியே!) வேதம் அருளப்பட்டவர்கள் (எழுதப்பட்ட நிலையில்) ஒரு வேதத்தை வானத்திலிருந்து தங்கள் மீது இறக்கி வைக்குமாறு இன்று உம்மிடம் கேட்கின்றார்கள் எனில், உண்மையில் இவர்கள் மூஸாவிடம் இதைவிடக் கொடூரமான கோரிக்கை விடுத்திருந்தார்கள். அவரிடமோ அவர்கள், “அல்லாஹ்வை எங்களுக்கு வெளிப்படையாகக் காட்டுவீராக!” என்று கூறியிருந்தனர். இவ்வாறு அவர்கள் அக்கிரமமாக நடந்து கொண்டதால், திடீரென அவர்களை ஒரு பேரிடி தாக்கியது. பிறகு அவர்களுக்குத் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் பசுவின் கன்றைத் தங்களுடைய தெய்வமாக்கிக் கொண்டார்கள். அதனையும் நாம் மன்னித்தோம். நாம் மூஸாவிற்குத் தெளிவான கட்டளையை வழங்கினோம்.

154

وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِیْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِی السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّیْثَاقًا غَلِیْظًا ۟

இன்னும், தூர்மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தி (இக்கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு) அவர்களிடம் வாக்குறுதி வாங்கினோம். “தலை தாழ்த்தியவாறு வாயிலில் நுழையுங்கள்!” என்று நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டோம். ஸப்த் சனிக்கிழமை விதியை மீறாதீர்கள் என்றும் நாம் அவர்களுக்குக் கூறினோம்; மேலும், இவ்விஷயத்தில் திடமான வாக்குறுதியையும் அவர்களிடம் நாம் வாங்கினோம்.

155

فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰیٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِیَآءَ بِغَیْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ؕ بَلْ طَبَعَ اللّٰهُ عَلَیْهَا بِكُفْرِهِمْ فَلَا یُؤْمِنُوْنَ اِلَّا قَلِیْلًا ۪۟

அவர்கள் தம் வாக்குறுதியை மீறியதாலும், அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததாலும், இறைத்தூதர்கள் பலரை நியாயமின்றி அவர்கள் கொலை செய்ததாலும், மற்றும் எங்களுடைய உள்ளங்கள் உறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்று கூறியதாலும் அவர்களை நாம் சபித்தோம் உண்மை என்னவெனில், அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவே அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரை வைத்துவிட்டான். எனவே, அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.

156

وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰی مَرْیَمَ بُهْتَانًا عَظِیْمًا ۟ۙ

மேலும், அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், (அவர்களை நாம் சபித்தோம்).

157

وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِیْحَ عِیْسَی ابْنَ مَرْیَمَ رَسُوْلَ اللّٰهِ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰكِنْ شُبِّهَ لَهُمْ ؕ وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِیْهِ لَفِیْ شَكٍّ مِّنْهُ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ ۚ وَمَا قَتَلُوْهُ یَقِیْنًا ۟ۙ

மேலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா மஸீஹை நாங்கள்தாம் கொன்றோம் என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை! மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை மஸீஹை கொலை செய்யவேயில்லை.

158

بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَیْهِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟

மாறாக, அல்லாஹ் அவரைத் தன் பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான்.

159

وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَیُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚ وَیَوْمَ الْقِیٰمَةِ یَكُوْنُ عَلَیْهِمْ شَهِیْدًا ۟ۚ

வேதம் அருளப்பட்டவர்களில் யாரும் அவர் மரணமாவதற்கு முன்னால் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருக்க மாட்டார்கள். மேலும், மறுமைநாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்பவராய் இருப்பார்.

160

فَبِظُلْمٍ مِّنَ الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَیْهِمْ طَیِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِیْلِ اللّٰهِ كَثِیْرًا ۟ۙ

யூதர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாகவும், அல்லாஹ்வின் வழியிலிருந்து அதிகமான மனிதர்களை அவர்கள் தடுத்துக் கொண்டிருப்பதாலும், (முன்பு) அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்துவிட்டோம்.

161

وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ ؕ وَاَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ مِنْهُمْ عَذَابًا اَلِیْمًا ۟

மேலும் வட்டி அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்க அதனை அவர்கள் வாங்கிக் கொண்டிருப்பதாலும், மக்களின் சொத்துகளைத் தவறான முறையில் அவர்கள் விழுங்கிக் கொண்டிருப்பதாலும் (முன்பு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்து விட்டோம்). மேலும் அவர்களில் நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார்செய்து வைத்துள்ளோம்.

162

لٰكِنِ الرّٰسِخُوْنَ فِی الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ یُؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَیْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَالْمُقِیْمِیْنَ الصَّلٰوةَ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ اُولٰٓىِٕكَ سَنُؤْتِیْهِمْ اَجْرًا عَظِیْمًا ۟۠

ஆனால், அவர்களில் அறிவுத்திறன் மிக்கவர்கள் மற்றும் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் (நபியே!) உம்மீதும், உமக்கு முன்னரும் இறக்கியருளப்பட்ட அறிவுரைகளை நம்புகின்றார்கள்! (இவ்வாறு நம்பிக்கை கொண்டு) தொழுகையையும், ஜகாத்தையும் முறையாகப் பேணுபவர்கள், மேலும், அல்லாஹ்வையும் மறுமைநாளையும் உறுதியாக நம்புபவர்கள் ஆகியோருக்கு அதிவிரைவில் மகத்தான கூலியை நாம் நிச்சயமாக வழங்குவோம்.

163

اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ

(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்ததுபோல திண்ணமாக உமக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் ஸுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு ஜபூரை வழங்கினோம்.

164

وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَیْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَیْكَ ؕ وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰی تَكْلِیْمًا ۟ۚ

மேலும், முன்னரே உம்மிடம் நாம் எந்த இறைத்தூதர்கள் பற்றி எடுத்துரைத்துள்ளோமோ அந்த இறைத்தூதர்களுக்கும் உம்மிடம் எடுத்துரைக்கப்படாத இறைத்தூதர்களுக்கும் (வஹி அறிவித்திருக்கின்றோம்). அல்லாஹ் மூஸாவிடம் நேரடியாகப் பேசியும் இருக்கின்றான்.

165

رُسُلًا مُّبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَی اللّٰهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ؕ وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟

இறைத்தூதர்கள் அனைவரும் நற்செய்தி அறிவிப்பவர்களாகவும் எச்சரிப்பவர்களாகவும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஏனெனில், அத்தூதர்கள் அனுப்பப்பட்ட பிறகு அல்லாஹ்விடம் முறையிட மக்களுக்கு ஆதாரம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காக! மேலும், எந்நிலையிலும், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

166

لٰكِنِ اللّٰهُ یَشْهَدُ بِمَاۤ اَنْزَلَ اِلَیْكَ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ ۚ وَالْمَلٰٓىِٕكَةُ یَشْهَدُوْنَ ؕ وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ

(இவர்கள் நம்பினாலும் சரி; நம்பாவிட்டாலும் சரி) ஆனால் (நபியே!) அல்லாஹ் உம்மீது இறக்கியருளியவற்றை தன் பேரறிவைக்கொண்டே இறக்கியருளினான் என்பதற்கு தானே சான்று வழங்குகின்றான்; வானவர்களும் சாட்சி வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ்வின் சான்றே முற்றிலும் போதுமானது;

167

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ قَدْ ضَلُّوْا ضَلٰلًا بَعِیْدًا ۟

எவர்கள் (இவற்றை) தாமும் ஏற்க மறுத்து, அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மற்றவர்களையும் தடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக வழிகேட்டில் (மூழ்கி, சத்தியத்தைவிட்டு) வெகுதூரம் சென்றுவிட்டார்கள்.

168

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَظَلَمُوْا لَمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ طَرِیْقًا ۟ۙ

எவர்கள் இவ்வாறு நிராகரிப்பை அல்லாஹ்வை எதிர்க்கும் போக்கை மேற்கொண்டு, அக்கிரமம் புரிந்தார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்.

169

اِلَّا طَرِیْقَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟

அவர்களுக்கு நரகத்திற்கான வழியினைத் தவிர வேறெந்த வழியையும் காட்டவும் மாட்டான். அவர்கள் நிரந்தரமாக அதில் வீழ்ந்து கிடப்பார்கள்! இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக எளிதான செயலே ஆகும்.

170

یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُوْلُ بِالْحَقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَیْرًا لَّكُمْ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟

மனிதர்களே! இந்தத் தூதர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றார். எனவே, நம்பிக்கை கொள்ளுங்கள். அது உங்களுக்கே நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் நிராகரித்தால் வானங்கள், பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.

171

یٰۤاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِیْ دِیْنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ ؕ اِنَّمَا الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ ۚ اَلْقٰىهَاۤ اِلٰی مَرْیَمَ وَرُوْحٌ مِّنْهُ ؗ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ۫ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ ؕ اِنْتَهُوْا خَیْرًا لَّكُمْ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰهٌ وَّاحِدٌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ یَّكُوْنَ لَهٗ وَلَدٌ ۘ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟۠

வேதம் அருளப்பட்டவர்களே! உங்களுடைய தீனில் மார்க்கத்தில் (எதையும்) மிகைப்படுத்தாதீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறாதீர்கள். திண்ணமாக, மர்யமின் மகன் ஈஸாஅல்மஸீஹ், அல்லாஹ்வின் தூதரும் மர்யமுக்கு அவன் அனுப்பிய அவனுடைய கட்டளையுமாவார். மேலும், அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு ரூஹும் ஆவார். (அது மர்யமின் கருவறையில் குழந்தையாக வடிவம் பெற்றது.) எனவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், மூன்று (கடவுள்) எனச் சொல்லாதீர்கள். (அப்படிச் சொல்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்! இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அல்லாஹ் ஒரே இறைவன்தான்; தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். மேலும் (அவை அனைத்தையும் பராமரித்துப் பாதுகாக்கும்) பொறுப்பினை ஏற்பதற்கு அவனே போதுமானவனாவான்.

172

لَنْ یَّسْتَنْكِفَ الْمَسِیْحُ اَنْ یَّكُوْنَ عَبْدًا لِّلّٰهِ وَلَا الْمَلٰٓىِٕكَةُ الْمُقَرَّبُوْنَ ؕ وَمَنْ یَّسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهٖ وَیَسْتَكْبِرْ فَسَیَحْشُرُهُمْ اِلَیْهِ جَمِیْعًا ۟

தான் அல்லாஹ்வின் அடிமையாக இருப்பதை மஸீஹ் எப்போதுமே இழிவாகக் கருதியதில்லை. இறையண்மை பெற்ற வானவர்களும் அதனை இழிவாகக் கருதுவதில்லை. எவர்கள் அல்லாஹ்வுக்குப் பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதி, தற்பெருமையும் கொள்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் விரைவில் அல்லாஹ் ஒன்று திரட்டித் தன்முன் கொண்டுவருவான்.

173

فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ۚ وَاَمَّا الَّذِیْنَ اسْتَنْكَفُوْا وَاسْتَكْبَرُوْا فَیُعَذِّبُهُمْ عَذَابًا اَلِیْمًا ۙ۬ وَّلَا یَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِیًّا وَّلَا نَصِیْرًا ۟

(அவ்வேளையில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்கு அவன் அவர்களுடைய கூலிகளை நிறைவாகக் கொடுப்பான். மேலும், தனது அருளால் இன்னும் அதிகம் (கூலி) வழங்குவான். மேலும், எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதித் தற்பெருமையும் கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். மேலும், அல்லாஹ்வை அன்றி (தாம் நம்பிக்கை கொண்டிருந்த) பாதுகாவலர் மற்றும் உதவியாளர் எவரையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.

174

یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَیْكُمْ نُوْرًا مُّبِیْنًا ۟

மனிதர்களே! உங்களுடைய அதிபதியிடமிருந்து உங்களுக்குத் தெளிவான சான்று வந்துள்ளது. தெள்ளத் தெளிவாய் வழிகாட்டும் ஒளியையும் நாம் உங்களுக்கு அனுப்பியிருக்கின்றோம்.

175

فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَیُدْخِلُهُمْ فِیْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ ۙ وَّیَهْدِیْهِمْ اِلَیْهِ صِرَاطًا مُّسْتَقِیْمًا ۟ؕ

(இனி) எவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும் அவனிடம் புகலிடம் தேடுகின்றார்களோ அவர்களை அதிவிரைவில் தனது கருணையிலும் அருளிலும் அல்லாஹ் நுழையச் செய்வான். மேலும், தன் பக்கம் வருவதற்கான நேரான வழியையும் அவர்களுக்குக் காண்பிப்பான்.

176

یَسْتَفْتُوْنَكَ ؕ قُلِ اللّٰهُ یُفْتِیْكُمْ فِی الْكَلٰلَةِ ؕ اِنِ امْرُؤٌا هَلَكَ لَیْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗۤ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ وَهُوَ یَرِثُهَاۤ اِنْ لَّمْ یَكُنْ لَّهَا وَلَدٌ ؕ فَاِنْ كَانَتَا اثْنَتَیْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ ؕ وَاِنْ كَانُوْۤا اِخْوَةً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ؕ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اَنْ تَضِلُّوْا ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠

(நபியே!) மக்கள் உம்மிடம் கலாலா பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு கலாலா பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன், ஒரு சகோதரி அவனுக்கு இருக்கும் நிலையில் இறந்துவிட்டால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் பாதி அவளுக்கு உரியதாகும். குழந்தை இல்லாமல் அந்தச் சகோதரி இறந்துவிட்டால் சகோதரன் அவளுக்கு வாரிசாவான். இறந்து போனவருக்கு இரு சகோதரிகள் இருந்தால், அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு உரியதாகும். சகோதர சகோதரிகள் பலர் இருந்தால், அவர்களில் ஓர் ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானதாகும். அல்லாஹ் உங்களுக்குச் சட்ட திட்டங்களைத் தெளிவாக விவரிக்கின்றான்; நீங்கள் வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

PreviousAal-ImranNextAl-Maidah

0:00–:––