الٓرٰ ۫ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰی صِرَاطِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ
அலிஃப், லாம், றா. (முஹம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம்; மக்களை, அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக! (அதாவது) யாவற்றையும் மிகைத்தோனும் தனக்குத்தானே புகழுக்குரியோனுமாகிய அல்லாஹ்வின் பாதையின்பால் (கொண்டுவர வேண்டும் என்பதற்காக).