طٰسٓمّٓ ۟
தாஸீம்மீம்.
Surah 26
Ash-Shuara
26. ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)
227 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
طٰسٓمّٓ ۟
தாஸீம்மீம்.
تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟
இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ اَلَّا یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟
(நபியே!) இவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை என்பதற்காக(க் கவலைப்பட்டு) உம்மையே நீர் மாய்த்துக் கொள்வீர் போன்றிருக்கின்றதே!
اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَیْهِمْ مِّنَ السَّمَآءِ اٰیَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِیْنَ ۟
நாம் நாடினால் விண்ணிலிருந்து ஒரு சான்றினை இவர்கள் மீது இறக்கி வைத்திருக்க முடியும். அதன் முன்னே இவர்களின் பிடரி பணிந்து விடும்!
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِیْنَ ۟
கருணைமிக்க இறைவனிடமிருந்து புதிதாக எந்த ஓர் அறிவுரை இவர்களிடம் வந்தாலும் இவர்கள் அதனைப் புறக்கணித்துவிடுகின்றார்கள்;
فَقَدْ كَذَّبُوْا فَسَیَاْتِیْهِمْ اَنْۢبٰٓؤُا مَا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
இதோ இப்போதும் இவர்கள் பொய்யெனத் தூற்றிவிட்டிருக்கின்றார்கள். ஆனால், எதனை இவர்கள் கேலி செய்துகொண்டிருக்கிறார்களோ அதனைப் பற்றிய உண்மைச் செய்திகள் விரைவில் இவர்களுக்கு(ப் பல்வேறு வழிகளின் மூலம்) தெரிந்துவிடும்.
اَوَلَمْ یَرَوْا اِلَی الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِیْمٍ ۟
இவர்கள் பூமியின் மீது பார்வை செலுத்தவில்லையா என்ன? எத்துணை அதிக அளவில் எல்லாவிதமான உயர்தர தாவரங்களை நாம் அதில் முளைக்கச் செய்திருக்கின்றோம்!
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கிறது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர்.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும், பெருங்கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَاِذْ نَادٰی رَبُّكَ مُوْسٰۤی اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۙ
அந்த நிகழ்ச்சியை இவர்களுக்கு நீர் கூறும்: “உம்முடைய இறைவன் மூஸாவை அழைத்துக் கூறினான். அக்கிரமம் புரிந்த சமூகத்தாரிடம்
قَوْمَ فِرْعَوْنَ ؕ اَلَا یَتَّقُوْنَ ۟
ஃபிர்அவ்னுடைய சமூகத்தாரிடம் நீர் செல்லும். அவர்கள் அஞ்சுவதில்லையா?”
قَالَ رَبِّ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟ؕ
அதற்கு அவர் பணிந்து கூறினார்: “என் இறைவனே! என்னை அவர்கள் பொய்யன் என்று தூற்றிவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.
وَیَضِیْقُ صَدْرِیْ وَلَا یَنْطَلِقُ لِسَانِیْ فَاَرْسِلْ اِلٰی هٰرُوْنَ ۟
என் நெஞ்சம் இடுங்கிவிடுகின்றது; என் நாவுக்கு சரளமாகப் பேச வருவதில்லை. எனவே, நீ ஹாரூனுக்கு தூதுத்துவத்தை வழங்குவாயாக!
وَلَهُمْ عَلَیَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ یَّقْتُلُوْنِ ۟ۚۖ
மேலும், என்னைப் பற்றி அவர்களிடம் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. எனவே, அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நான் அஞ்சுகின்றேன்.”
قَالَ كَلَّا ۚ فَاذْهَبَا بِاٰیٰتِنَاۤ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ ۟
இறைவன் கூறினான்: “அப்படியல்ல! நீங்கள் இருவரும் என்னுடைய சான்றுகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். நாம் உங்களுடன் அனைத்தையும் செவியுற்றுக் கொண்டிருப்போம்.
فَاْتِیَا فِرْعَوْنَ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். மேலும், அவனிடம் கூறுங்கள்: அகிலங்களின் இறைவன் எங்களை அனுப்பியிருக்கின்றான்;
اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நீ எங்களுடன் அனுப்பிவிட வேண்டுமென்பதற்காக!”
قَالَ اَلَمْ نُرَبِّكَ فِیْنَا وَلِیْدًا وَّلَبِثْتَ فِیْنَا مِنْ عُمُرِكَ سِنِیْنَ ۟ۙ
அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீ குழந்தையாய் இருந்தபோது உன்னை நாம் எம்மிடத்திலே வைத்து வளர்க்கவில்லையா? மேலும், உன் வாழ்நாளில் பல ஆண்டுகள் நீ எம்மிடம் கழித்திருக்கின்றாய்.
وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِیْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِیْنَ ۟
அதன் பின்னர் நீ செய்துவிட்ட அந்தச் செயலையும் செய்துள்ளாய். நீ பெரிதும் நன்றிகெட்ட மனிதன்தான்!”
قَالَ فَعَلْتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّیْنَ ۟ؕ
மூஸா பதில் கூறினார்: “அப்போது நான் அறியாமையினால் அக்காரியத்தைச் செய்துவிட்டேன்.
فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِیْ رَبِّیْ حُكْمًا وَّجَعَلَنِیْ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
பின்னர், நான் உங்களுக்கு அஞ்சி உங்களிடமிருந்து ஓடிவிட்டேன். பின் என் இறைவன் எனக்கு நுண்ணறிவுத் திறனை வழங்கினான்; என்னைத் தூதர்களில் ஒருவனாகவுமாக்கினான்.
وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَیَّ اَنْ عَبَّدْتَّ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
எனக்குச் செய்ததாக நீ சொல்லிக் காட்டும் அந்த உபகாரத்தின் உண்மைநிலை யாதெனில், நீ இஸ்ராயீல் வழித்தோன்றல்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததேயாகும்.”
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِیْنَ ۟ؕ
ஃபிர்அவ்ன் கேட்டான்: “மேலும், இந்த அகிலங்களின் இறைவன் என்பது என்ன?”
قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟
அதற்கு மூஸா பதிலளித்தார்: “அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றிற்கு இடையிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் அதிபதி ஆவான் நீங்கள் உறுதியான நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால்!”
قَالَ لِمَنْ حَوْلَهٗۤ اَلَا تَسْتَمِعُوْنَ ۟
ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் கூறினான்: “கேட்கிறீர்களல்லவா?”
قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
அதற்கு மூஸா கூறினார்: “அவன் உங்களுடைய இறைவனும், முன்னோர்களான உங்கள் மூதாதையருடைய இறைவனுமாவான்.”
قَالَ اِنَّ رَسُوْلَكُمُ الَّذِیْۤ اُرْسِلَ اِلَیْكُمْ لَمَجْنُوْنٌ ۟
அதற்கு ஃபிர்அவ்ன் (அவையோரை நோக்கி) கூறினான்: “உங்களிடம் அனுப்பப்பட்ட இந்தத் தூதர் சரியான பைத்தியக்காரராய்த் தெரிகின்றார்!”
قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَیْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ ۟
அதற்கு மூஸா கூறினார்: “கிழக்கு, மேற்கு மற்றும் அவற்றிற்கிடையேயுள்ள அனைத்திற்கும் அவன் அதிபதியாவான் நீங்கள் சற்றேனும் அறிவுடையோராக இருந்தால்!”
قَالَ لَىِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَیْرِیْ لَاَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُوْنِیْنَ ۟
அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “நீர் என்னைத் தவிர வேறு எவரையேனும் வணக்கத்திற்குரியவராய் ஏற்றுக் கொண்டால், சிறையில் வாடி வதங்கிக் கிடப்பவர்களுடன் உம்மையும் நான் சேர்த்து விடுவேன்!”
قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَیْءٍ مُّبِیْنٍ ۟ۚ
மூஸா கேட்டார்: “தெளிவான ஒரு சான்றை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?”
قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
அதற்கு ஃபிர்அவ்ன் கூறினான்: “அதனைக் கொண்டுவாரும்; நீர் உண்மையாளராயின்!”
فَاَلْقٰی عَصَاهُ فَاِذَا هِیَ ثُعْبَانٌ مُّبِیْنٌ ۟ۚۖ
(அவன் இவ்வாறு கூறியதும்) மூஸா தன் கைத்தடியைப் போட்டார். உடனே அது சந்தேகமின்றி ஒரு பாம்பாயிற்று.
وَّنَزَعَ یَدَهٗ فَاِذَا هِیَ بَیْضَآءُ لِلنّٰظِرِیْنَ ۟۠
பிறகு, அவர் தம் கையை (அக்குளிலிருந்து) வெளியே எடுத்தார். உடனே அது பார்ப்போர் அனைவரின் முன்னிலையிலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِیْمٌ ۟ۙ
ஃபிர்அவ்ன் தன்னைச் சுற்றிலுமிருந்த தலைவர்களிடம் கூறினான்: “இவர் உண்மையில் ஒரு கைதேர்ந்த சூனியக்காரர்!
یُّرِیْدُ اَنْ یُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖ ۖۗ فَمَاذَا تَاْمُرُوْنَ ۟
தன்னுடைய சூனியத்தின் வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றார். இப்போது கூறுங்கள், நீங்கள் என்ன கட்டளை இடப்போகின்றீர்கள்?”
قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۙ
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “இவரையும், இவருடைய சகோதரரையும் தடுத்து வையுங்கள். முரசறைவோரை நகரங்களுக்கு அனுப்புங்கள்.
یَاْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِیْمٍ ۟
திறமை வாய்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் தங்களிடம் அவர்கள் அழைத்துக் கொண்டு வரட்டும்!”
فَجُمِعَ السَّحَرَةُ لِمِیْقَاتِ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟ۙ
அவ்வாறு ஒருநாள் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.
وَّقِیْلَ لِلنَّاسِ هَلْ اَنْتُمْ مُّجْتَمِعُوْنَ ۟ۙ
மக்களிடம் கோரப்பட்டது: “நீங்கள் கூட்டத்திற்கு வருவீர்களா?
لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟
நாம் சூனியக்காரர்களின் மார்க்கத்திலேயே இருந்து விடலாம்; அவர்கள் வெற்றியாளர்களாய்த் திகழ்ந்தால்!”
فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَىِٕنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟
சூனியக்காரர்கள் (களத்திற்கு) வந்தபோது, ஃபிர்அவ்னிடம் கேட்டார்கள்: “நாங்கள் வெற்றியடைந்துவிட்டால், திண்ணமாக எங்களுக்கு வெகுமதி கிடைக்குமல்லவா?”
قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِیْنَ ۟
அதற்கு அவன், “ஆம்! மேலும், நீங்கள் அப்போது எனக்கு நெருக்கமானவர்களாயும் இருப்பீர்கள்” என்றான்.
قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟
மூஸா அவர்களிடம் கூறினார்: “நீங்கள் எறிய இருப்பதை எறியுங்கள்!”
فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِیَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَنَحْنُ الْغٰلِبُوْنَ ۟
உடனே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தனர்; மேலும், கூறினர்: “ஃபிர்அவ்னின் மகிமை கொண்டு நாங்களே வெற்றியாளர்களாய்த் திகழ்வோம்!”
فَاَلْقٰی مُوْسٰی عَصَاهُ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚۖ
பிறகு, மூஸா தமது கைத்தடியை எறிந்தார். உடனே அது அவர்களின் பொய் வித்தைகளை விழுங்கிக் கொண்டே சென்றது.
فَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۙ
இதனைக் கண்ட சூனியக்காரர்கள் அனைவரும் தம்மையுமறியாமல் ஸஜ்தாவில் வீழ்ந்துவிட்டார்கள்.
قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ
பிறகு, அவர்கள் உரக்கக் கூறினார்கள்: “ஏற்றுக்கொண்டு விட்டோம் அகிலங்களின் அதிபதியை,
رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟
மூஸா மற்றும் ஹாரூனுடைய அதிபதியை!”
قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ اِنَّهٗ لَكَبِیْرُكُمُ الَّذِیْ عَلَّمَكُمُ السِّحْرَ ۚ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ؕ۬ لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُوصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟ۚ
ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸா கூறியதை ஏற்றுக்கொண்டு விட்டீர்களே நான் அனுமதி அளிப்பதற்கு முன்பே! திண்ணமாக, உங்களுக்கு சூனியத்தைக் கற்றுத்தந்த உங்களின் பெரிய குருவாக இருக்கின்றார் இவர்! சரி, இப்பொழுது உங்களுக்குத் தெரிந்துவிடும். நிச்சயமாக, நான் உங்கள் மாறு கை, மாறு கால்களைத் துண்டித்துவிடுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்துவிடுவேன்!”
قَالُوْا لَا ضَیْرَ ؗ اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “பரவாயில்லை! நாங்கள் எங்கள் இறைவனின் திருமுன் சென்று விடுவோம்.
اِنَّا نَطْمَعُ اَنْ یَّغْفِرَ لَنَا رَبُّنَا خَطٰیٰنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِیْنَ ۟ؕ۠
எங்கள் இறைவன் எங்களுடைய பாவங்களை மன்னித்து விடுவான் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏனெனில், அனைவர்க்கும் முன்னதாக நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாகி விட்டோமே!”
وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَسْرِ بِعِبَادِیْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟
மேலும், நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம்: “என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகப் புறப்படுவீராக! நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்!”
فَاَرْسَلَ فِرْعَوْنُ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۚ
இதன்படி ஃபிர்அவ்ன் (படைகளைத் திரட்டுவதற்காக) நகரங்களுக்கு ஊழியர்களை அனுப்பினான். (மேலும், சொல்லியனுப்பினான்:)
اِنَّ هٰۤؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِیْلُوْنَ ۟ۙ
“இவர்கள் மிகச் சிறிய ஒரு கூட்டத்தினர்தாம்!
وَاِنَّهُمْ لَنَا لَغَآىِٕظُوْنَ ۟ۙ
மேலும், இவர்கள் நம்மை மிகுந்த கோபமடையச் செய்துவிட்டார்கள்.
وَاِنَّا لَجَمِیْعٌ حٰذِرُوْنَ ۟ؕ
நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்கக்கூடிய கூட்டத்தினர் அல்லவா!”
فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
இவ்வாறு நாம் அவர்களை அவர்களுடைய தோப்புகள், நீருற்றுகள்,
وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ
செல்வக் களஞ்சியங்கள் மற்றும் சிறந்த இருப்பிடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறச் செய்தோம்.
كَذٰلِكَ ؕ وَاَوْرَثْنٰهَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
அவர்களுக்கு நேர்ந்தது இதுதான். (மற்றொருபுறம்) நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை இவை அனைத்திற்கும் வாரிசுகளாக்கிவிட்டோம்.
فَاَتْبَعُوْهُمْ مُّشْرِقِیْنَ ۟
பொழுது விடிந்ததும் இவர்கள் அம்மக்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰۤی اِنَّا لَمُدْرَكُوْنَ ۟ۚ
இரு கூட்டத்தாரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டபோது மூஸாவின் தோழர்கள், “திண்ணமாக, நாம் பிடிபட்டுவிடுவோம்!” என்று கூக்குரலிட்டனர்.
قَالَ كَلَّا ۚ اِنَّ مَعِیَ رَبِّیْ سَیَهْدِیْنِ ۟
அதற்கு மூஸா கூறினார்: “ஒருபோதும் இல்லை. என்னோடு என் இறைவன் இருக்கின்றான். அவன் திண்ணமாக, எனக்கு வழிகாட்டுவான்!”
فَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِیْمِ ۟ۚ
மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம்: “உமது கைத்தடியினால் கடலை அடியும்!” உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகிவிட்டது.
وَاَزْلَفْنَا ثَمَّ الْاٰخَرِیْنَ ۟ۚ
அதே இடத்திற்கு இரண்டாவது கூட்டத்தாரையும் நாம் நெருங்கிவரச்செய்தோம்.
وَاَنْجَیْنَا مُوْسٰی وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۚ
மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِیْنَ ۟ؕ
பிறகு, மற்றவர்களை மூழ்கடித்து விட்டோம்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
திண்ணமாக, இந்நிகழ்ச்சியில் ஒரு சான்று இருக்கிறது. எனினும் இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَاتْلُ عَلَیْهِمْ نَبَاَ اِبْرٰهِیْمَ ۟ۘ
மேலும், இப்ராஹீமின் சரிதையை இவர்களுக்கு எடுத்துரையுங்கள்:
اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ ۟
ஒருபோது அவர்தம் தந்தையிடமும், சமூகத்தாரிடமும், “எவற்றை நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
قَالُوْا نَعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِیْنَ ۟
அதற்கு அவர்கள் “சிலைகளை நாங்கள் பூஜிக்கின்றோம்; மேலும், அவற்றிற்கு சேவை செய்வதில் முழுமையாக ஈடுபட்டிருக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.
قَالَ هَلْ یَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَ ۟ۙ
அதற்கு அவர் கேட்டார்: “நீங்கள் அழைக்கும்போது உங்கள் அழைப்பை இவை கேட்கின்றனவா?
اَوْ یَنْفَعُوْنَكُمْ اَوْ یَضُرُّوْنَ ۟
அல்லது இவை உங்களுக்கு ஏதேனும் இலாபமோ, நஷ்டமோ அளிக்கின்றனவா?”
قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ یَفْعَلُوْنَ ۟
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “இல்லை. ஆயினும், எங்கள் முன்னோர் இவ்வாறே செய்து கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.”
قَالَ اَفَرَءَیْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۟ۙ
அதற்கு இப்ராஹீம் கூறினார்: “எவற்றை நீங்களும், உங்களுடைய முற்காலத்து மூதாதையர்களும் வணங்கிவந்தீர்களோ ,
اَنْتُمْ وَاٰبَآؤُكُمُ الْاَقْدَمُوْنَ ۟ؗۖ
அவற்றை நீங்கள் என்றாவது (கண்திறந்து) பார்த்திருக்கின்றீர்களா?
فَاِنَّهُمْ عَدُوٌّ لِّیْۤ اِلَّا رَبَّ الْعٰلَمِیْنَ ۟ۙ
என்னைப் பொறுத்தவரை திண்ணமாக, இவை அனைத்தும் விரோதிகளாகும்; ஆனால், அகிலங்களின் அதிபதியைத் தவிர!
الَّذِیْ خَلَقَنِیْ فَهُوَ یَهْدِیْنِ ۟ۙ
அவன் எத்தகையவனெனில், அவன்தான் என்னைப் படைத்தான்; மேலும், அவனே எனக்கு பின்னர் வழிகாட்டுகின்றான்.
وَالَّذِیْ هُوَ یُطْعِمُنِیْ وَیَسْقِیْنِ ۟ۙ
எனக்கு உண்ணவும் அருந்தவும் தருகின்றான்.
وَاِذَا مَرِضْتُ فَهُوَ یَشْفِیْنِ ۟
மேலும், நான் நோயுற்றால் அவனே எனக்கு குணமளிக்கின்றான்.
وَالَّذِیْ یُمِیْتُنِیْ ثُمَّ یُحْیِیْنِ ۟ۙ
அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் மீண்டும் எனக்கு வாழ்வளிப்பான்.
وَالَّذِیْۤ اَطْمَعُ اَنْ یَّغْفِرَ لِیْ خَطِیْٓـَٔتِیْ یَوْمَ الدِّیْنِ ۟ؕ
மேலும், கூலி கொடுக்கப்படும் நாளில் அவன் என் பாவங்களை மன்னித்தருள்வான் என்று நான் அவனிடமே நம்பிக்கை கொண்டுள்ளேன்.”
رَبِّ هَبْ لِیْ حُكْمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟ۙ
(இதன் பின்னர்) இப்ராஹீம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத்திறனை வழங்குவாயாக! மேலும், என்னை உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக!
وَاجْعَلْ لِّیْ لِسَانَ صِدْقٍ فِی الْاٰخِرِیْنَ ۟ۙ
மேலும், பிற்கால மக்களிடையே எனக்கு உண்மையான புகழை வழங்குவாயாக!
وَاجْعَلْنِیْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِیْمِ ۟ۙ
மேலும், அருட்கொடைகள் நிரம்பிய சுவனத்தின் வாரிசுகளுள் என்னையும் ஒருவனாக ஆக்குவாயாக!
وَاغْفِرْ لِاَبِیْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّیْنَ ۟ۙ
மேலும், என் தந்தையை மன்னிப்பாயாக! திண்ணமாக, அவர் வழிகெட்டுப் போனவர்களில் ஒருவராய் இருக்கின்றார்.
وَلَا تُخْزِنِیْ یَوْمَ یُبْعَثُوْنَ ۟ۙ
மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே!
یَوْمَ لَا یَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَ ۟ۙ
அந்நாளில், செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திடமாட்டா.
اِلَّا مَنْ اَتَی اللّٰهَ بِقَلْبٍ سَلِیْمٍ ۟ؕ
ஆனால், எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர!”
وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ ۟ۙ
(அந்நாளில்) சுவனம் இறையச்சமுடையவர்களின் அருகில் கொண்டுவரப்படும்;
وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِلْغٰوِیْنَ ۟ۙ
வழிகெட்டுப் போனவர்களின் முன்னிலையில் நரகம் திறந்து வைக்கப்படும்.
وَقِیْلَ لَهُمْ اَیْنَ مَا كُنْتُمْ تَعْبُدُوْنَ ۟ۙ
மேலும், அவர்களிடம் வினவப்படும்: நீங்கள் வணங்கி வந்த தெய்வங்கள் எங்கே?
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ هَلْ یَنْصُرُوْنَكُمْ اَوْ یَنْتَصِرُوْنَ ۟ؕ
“நீங்கள் அல்லாஹ்வை விடுத்து வணங்கி வந்தீர்களே அந்தத் தெய்வங்கள் எங்கே? அவை உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து கொண்டிருக்கின்றனவா? அல்லது அவற்றால் தம்மையேனும் காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா?”
فَكُبْكِبُوْا فِیْهَا هُمْ وَالْغَاوٗنَ ۟ۙ
பின்னர் அந்த தெய்வங்களும், வழிகெட்டுப் போனவர்களும்,
وَجُنُوْدُ اِبْلِیْسَ اَجْمَعُوْنَ ۟ؕ
இப்லீசின் சேனைகளும் அனைவரும் நரகில் தலைகீழாக எறியப்படுவார்கள்!
قَالُوْا وَهُمْ فِیْهَا یَخْتَصِمُوْنَ ۟ۙ
அங்கு இவர்கள் அனைவரும் தமக்கிடையே சண்டையிட்டுக் கொள்வார்கள்.
تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ
வழி தவறியவர்கள் (தங்கள் தெய்வங்களிடம்) கூறுவார்கள்: “இறைவன் மீது ஆணையாக! நாங்கள் வெளிப்படையான வழிகேட்டிலிருந்தோம்.
اِذْ نُسَوِّیْكُمْ بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟
அகிலங்களின் அதிபதியுடன் உங்களுக்கு சரி சமமான தகுதியை நாங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது!
وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الْمُجْرِمُوْنَ ۟
குற்றவாளிகள் தாம் எங்களை இந்த வழிகேட்டில் தள்ளி விட்டார்கள்.
فَمَا لَنَا مِنْ شَافِعِیْنَ ۟ۙ
இப்போது, எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள் யாரும் இல்லை!”
وَلَا صَدِیْقٍ حَمِیْمٍ ۟
உற்ற நண்பர் எவருமிலர்.
فَلَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
அந்தோ! மீண்டும் ஒருமுறை எங்களுக்குத் திரும்பிச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால், நாங்கள் நம்பிக்கையாளர்களாய்த் திகழ்வோமே!”
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
திண்ணமாக, இதில் பெரியதொரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ قَوْمُ نُوْحِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
நூஹுடைய சமூகத்தார் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
அவர்களிடம் அவர்களின் சகோதரர் நூஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய தூதராவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۚ
நான் இப்பணிக்காக உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ؕ
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (தயக்கமின்றி) எனக்குக் கீழ்ப்படியுங்கள்!”
قَالُوْۤا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَ ۟ؕ
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நாங்கள் உம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மிகவும் கீழ்த்தரமான மக்கள் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்களே!”
قَالَ وَمَا عِلْمِیْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟ۚ
அதற்கு நூஹ் கூறினார்: “அவர்களின் செயல் எப்படிப்பட்டதென்று எனக்கென்ன தெரியும்?
اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰی رَبِّیْ لَوْ تَشْعُرُوْنَ ۟ۚ
அவர்களுடைய கணக்கெல்லாம் என் அதிபதியின் பொறுப்பிலுள்ளது. நீங்கள் சற்று உணர்ந்து செயல்படக்கூடாதா?
وَمَاۤ اَنَا بِطَارِدِ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
நம்பிக்கை கொள்வோரை விரட்டிவிடுவது என் பணியன்று.
اِنْ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ؕ
நானோ, தெளிவாக எச்சரிக்கை செய்பவனாயிருக்கின்றேன்.”
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰنُوْحُ لَتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِیْنَ ۟ؕ
அதற்கு அவர்கள், “நூஹே! நீர் இதனைத் தவிர்த்துக்கொள்ளாவிடில், கல்லடிபட்டு விரட்டப்படுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்” என்று கூறினார்கள்.
قَالَ رَبِّ اِنَّ قَوْمِیْ كَذَّبُوْنِ ۟ۚۖ
நூஹ் இறைஞ்சினார்: “என் இறைவனே! என் சமூகத்தார் என்னைப் பொய்யனென்று தூற்றிவிட்டனர்.
فَافْتَحْ بَیْنِیْ وَبَیْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِیْ وَمَنْ مَّعِیَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟
இனி எனக்கும் அவர்களுக்குமிடையில் திட்டவட்டமான ஒரு தீர்ப்பை வழங்குவாயாக! மேலும், என்னையும் என்னுடன் இருக்கும் இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக!”
فَاَنْجَیْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِی الْفُلْكِ الْمَشْحُوْنِ ۟ۚ
இறுதியில், நிரம்பிய ஒரு கப்பலில் அவரையும், அவருடனிருந்தவர்களையும் நாம் காப்பாற்றிக்கொண்டோம்.
ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ الْبٰقِیْنَ ۟ؕ
பின்னர், எஞ்சியிருந்த மனிதர்களை மூழ்கடித்துவிட்டோம்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
திண்ணமாக, இதில் ஒரு சான்று உள்ளது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களல்லர்.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ عَادُ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
ஆத் சமூகத்தினர் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினார்கள்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
அவர்களுடைய சகோதரர் ஹூத் அவர்களிடம் கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
நான் உங்களுடைய நம்பிக்கைக்குரிய தூதரா வேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
நான் இப்பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனக்குரிய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
اَتَبْنُوْنَ بِكُلِّ رِیْعٍ اٰیَةً تَعْبَثُوْنَ ۟ۙ
என்ன இது! உயரமான இடங்களிலெல்லாம் வீணாக நினைவுக் கட்டடங்களை நீங்கள் எழுப்புகின்றீர்கள்
وَتَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ ۟ۚ
பெரும் பெரும் மாளிகைகளை நிர்மாணிக்கின்றீர்கள் நீங்கள் என்றென்றும் வாழப் போவதைப்போல!
وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِیْنَ ۟ۚ
மேலும், நீங்கள் எவரையேனும் பிடித்தால் கொடூரமாகப் பிடிக்கிறீர்கள்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
وَاتَّقُوا الَّذِیْۤ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ ۟ۚ
நீங்கள் அறிந்திருப்பவற்றையெல்லாம் எவன் உங்களுக்கு வழங்கினானோ, அவனுக்கு அஞ்சுங்கள்!
اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِیْنَ ۟ۚۙ
அவன் உங்களுக்குக் கால்நடைகளையும், பிள்ளைகளையும்,
وَجَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۚ
தோட்டங்களையும், நீரூற்றுகளையும் அருளினான்.
اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟ؕ
நான் உங்கள் விஷயத்தில் ஒரு மாபெரும் நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்!”
قَالُوْا سَوَآءٌ عَلَیْنَاۤ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوٰعِظِیْنَ ۟ۙ
இதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் நல்லுரை கூறினாலும் கூறாவிட்டாலும் எல்லாம் எங்களுக்கு ஒன்றுதான்.
اِنْ هٰذَاۤ اِلَّا خُلُقُ الْاَوَّلِیْنَ ۟ۙ
இந்த விஷயங்கள் எல்லாம் தொன்றுதொட்டே கூறப்பட்டு வருபவைதாம்.
وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟ۚ
மேலும், நாங்கள் தண்டிக்கப்படக்கூடியவர்களல்லர்!”
فَكَذَّبُوْهُ فَاَهْلَكْنٰهُمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
இறுதியில் அவர்கள் அவரைப் பொய்யர் எனக் கூறிவிட்டார்கள். நாம் அவர்களை அழித்துவிட்டோம்.திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர்.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
ஸமூத் சமுதாயத்தார் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினர்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
இப்பணிக்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
اَتُتْرَكُوْنَ فِیْ مَا هٰهُنَاۤ اٰمِنِیْنَ ۟ۙ
நீங்கள் இங்குள்ள அனைத்துப் பொருள்களுக்கு மத்தியில் நிம்மதியாக வாழ்வதற்கு விட்டு வைக்கப்படுவீர்களா என்ன?
فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
(அதாவது) இந்தத் தோட்டங்களிலும் நீரூற்றுகளிலும்,
وَّزُرُوْعٍ وَّنَخْلٍ طَلْعُهَا هَضِیْمٌ ۟ۚ
பயிர்நிலங்களிலும் கனிந்த குலைகளையுடைய பேரீச்சந் தோப்புகளிலும்!
وَتَنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُیُوْتًا فٰرِهِیْنَ ۟ۚ
மேலும், மலைகளைக் குடைந்து குடைந்து பெருமை கொண்டவர்களாய் நீங்கள் குடியிருப்புகள் அமைத்துக் கொள்கின்றீர்கள்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்!
وَلَا تُطِیْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِیْنَ ۟ۙ
மேலும், வரம்பு மீறி வாழ்பவர்களுக்குக் கீழ்ப்படியாதீர்கள்.
الَّذِیْنَ یُفْسِدُوْنَ فِی الْاَرْضِ وَلَا یُصْلِحُوْنَ ۟
அவர்களோ பூமியில் அராஜகம் விளைவிக்கின்றார்கள். இன்னும், எவ்விதச் சீர்திருத்தமும் செய்வதில்லை.”
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِیْنَ ۟ۚ
அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “நீர் சூனியம் செய்யப்பட்ட மனிதராகவே இருக்கின்றீர்.
مَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ۖۚ فَاْتِ بِاٰیَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறென்ன? நீர் உண்மையாளராயின் ஏதேனுமொரு சான்றினைக் கொண்டு வாரும்!”
قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَكُمْ شِرْبُ یَوْمٍ مَّعْلُوْمٍ ۟ۚ
அதற்கு ஸாலிஹ் கூறினார்: “இதோ! ஒரு பெண் ஒட்டகம்; (ஒரு நாள்) இது தண்ணீர் அருந்தட்டும். மற்றொரு நாள் நீங்களெல்லோரும் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம்.
وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابُ یَوْمٍ عَظِیْمٍ ۟
இதற்கு எவ்விதத் தீங்கும் இழைக்காதீர்கள்; அப்படி தீங்கு இழைத்தீர்களானால் ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்!”
فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِیْنَ ۟ۙ
ஆயினும், அவர்கள் அதன் கால் நரம்புகளை வெட்டி விட்டார்கள். பிறகு வருந்தக்கூடியவர்களாகி விட்டார்கள்.
فَاَخَذَهُمُ الْعَذَابُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது! நிச்சயமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர்.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَتْ قَوْمُ لُوْطِ لْمُرْسَلِیْنَ ۟ۚۖ
லூத்தின் சமூகத்தார் இறைத்தூதர்களைப் பொய்யரெனத் தூற்றினார்கள்.
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
அவர்களிடம் அவர்களின் சகோதரர் லூத் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதரா வேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்!
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
நான் இப்பணிக்காக உங்களிடம் எவ்விதக் கூலியையும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அகிலங்களின் அதிபதியிடமே உள்ளது.
اَتَاْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِیْنَ ۟ۙ
உலகப் படைப்பினங்களில் ஆண்களிடம் நீங்கள் செல்கின்றீர்களா?
وَتَذَرُوْنَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ ؕ بَلْ اَنْتُمْ قَوْمٌ عٰدُوْنَ ۟
மேலும், உங்கள் மனைவியரிடம் உங்களுக்காக உங்கள் இறைவன் படைத்திருப்பனவற்றை விட்டுவிடுகின்றீர்களா? உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிச் செல்லும் மக்களாவீர்கள்!”
قَالُوْا لَىِٕنْ لَّمْ تَنْتَهِ یٰلُوْطُ لَتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِیْنَ ۟
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “லூத்தே! நீர் இவ்வாறு கூறுவதைத் தவிர்த்துக் கொள்ளாவிடில், (எங்கள் ஊரிலிருந்து) வெளியேற்றப்படுகிறவர்களில் நீரும் சேர்க்கப்படுவீர்!”
قَالَ اِنِّیْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِیْنَ ۟ؕ
அவர் கூறினார்: “உங்கள் தீய செயல்களைக் கண்டு வெறுப்பவர்களில் நானும் ஒருவன்.
رَبِّ نَجِّنِیْ وَاَهْلِیْ مِمَّا یَعْمَلُوْنَ ۟
என் இறைவனே! என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் இவர்களின் தீவினைகளிலிருந்து காப்பாற்றுவாயாக!”
فَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗۤ اَجْمَعِیْنَ ۟ۙ
இறுதியில், நாம் அவரையும் அவருடைய குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றிக் கொண்டோம்;
اِلَّا عَجُوْزًا فِی الْغٰبِرِیْنَ ۟ۚ
பின்னால் தங்கிவிட்டவர்களோடு இருந்த ஒரு கிழவியைத் தவிர!
ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِیْنَ ۟ۚ
பிறகு, மற்றவர்களை அழித்து விட்டோம்.
وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟
இன்னும் அவர்கள் மீது பொழிய வைத்தோம், ஒரு மழையை! அது மிக மோசமான மழையாக இருந்தது. அதுவோ எச்சரிக்கப்பட்டவர்கள் மீது இறங்கியது.
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
كَذَّبَ اَصْحٰبُ لْـَٔیْكَةِ الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
அய்க்காவாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர் எனத் தூற்றினர்.
اِذْ قَالَ لَهُمْ شُعَیْبٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
அவர்களிடம் ஷுஐப் கூறியதை நினைவு கூருங்கள்: “நீங்கள் அஞ்சுவதில்லையா?
اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராவேன்.
فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟ۚ
எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
وَمَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مِنْ اَجْرٍ ۚ اِنْ اَجْرِیَ اِلَّا عَلٰی رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
நான் இப்பணிக்காக உங்களிடம் யாதொரு கூலியையும் கோரவில்லை. எனது கூலியோ அனைத்துலகங்களின் அதிபதியிடமே உள்ளது.
اَوْفُوا الْكَیْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِیْنَ ۟ۚ
நிறைவாக அளந்து கொடுங்கள்; யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தாதீர்கள்!
وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِیْمِ ۟ۚ
மேலும், சரியான தராசு கொண்டு எடை போடுங்கள்.
وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟ۚ
மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள். பூமியில் அராஜகம் விளைவித்துக் கொண்டு திரியாதீர்கள்.
وَاتَّقُوا الَّذِیْ خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْاَوَّلِیْنَ ۟ؕ
மேலும், எவன் உங்களையும் உங்களுக்கு முந்தைய சமுதாயத்தாரையும் படைத்தானோ அவனுக்கு அஞ்சுங்கள்.”
قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِیْنَ ۟ۙ
அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீர் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரே ஆவீர்!
وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَاِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِیْنَ ۟ۚ
மேலும், நீர் எங்களைப் போன்று ஒரு மனிதரேயன்றி வேறல்லர் மேலும், நாங்கள் உம்மை முற்றிலும் பொய்யரென்றே கருதுகின்றோம்.
فَاَسْقِطْ عَلَیْنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟ؕ
நீர் உண்மையாளராயின் வானத்தின் சில பகுதிகளை எங்கள்மீது விழச்செய்வீராக!”
قَالَ رَبِّیْۤ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ ۟
அதற்கு ஷுஐப் கூறினார்: “நீங்கள் செய்துகொண்டிருப்பவை பற்றி என் இறைவன் நன்கறிகின்றான்.”
فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ یَوْمِ الظُّلَّةِ ؕ اِنَّهٗ كَانَ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினர். இறுதியில் குடை நாளின் வேதனை அவர்களைப் பீடித்துக்கொண்டது. திண்ணமாக, அது பயங்கரமான ஒரு நாளின் வேதனையாய் இருந்தது!
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟
திண்ணமாக, இதில் ஒரு சான்று இருக்கின்றது. ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர்.
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠
மேலும், திண்ணமாக, உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
وَاِنَّهٗ لَتَنْزِیْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
மேலும், திண்ணமாக, இது அகிலங்களின் அதிபதியினால் இறக்கியருளப்பட்டதாகும்.
نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِیْنُ ۟ۙ
நம்பிக்கைக்குரிய ரூஹ்* இதனை எடுத்துக் கொண்டு இறங்கியிருக்கின்றது
عَلٰی قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِیْنَ ۟ۙ
உமது உள்ளத்தின் மீது! எதற்காகவெனில் (அல்லாஹ்வின் சார்பில் மனிதர்களை) எச்சரிக்கை செய்பவர்களுள் நீரும் ஒருவராய் ஆக வேண்டும் என்பதற்காக!
بِلِسَانٍ عَرَبِیٍّ مُّبِیْنٍ ۟ؕ
தெள்ளத் தெளிந்த அரபி மொழியில்.
وَاِنَّهٗ لَفِیْ زُبُرِ الْاَوَّلِیْنَ ۟
மேலும், முன்னோர்களின் வேதங்களிலும், திண்ணமாக இது உள்ளது.
اَوَلَمْ یَكُنْ لَّهُمْ اٰیَةً اَنْ یَّعْلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலுள்ள அறிஞர்கள் இதனை அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது இந்த மக்(காவாசி)களுக்கு ஒரு சான்றாக இல்லையா?
وَلَوْ نَزَّلْنٰهُ عَلٰی بَعْضِ الْاَعْجَمِیْنَ ۟ۙ
(ஆயினும், இவர்களின் பிடிவாதமான நடத்தை எவ்வாறுள்ளது என்றால்) நாம் இதனை அரபியரல்லாத எவர் மீதாவது இறக்கி வைத்திருந்தால்,
فَقَرَاَهٗ عَلَیْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِیْنَ ۟ؕ
மேலும், அவர் (தெள்ளிய அரபி வேதமாகிய) இதை அவர்களுக்கு ஓதிக்காட்டினால் அப்போதும் இவர்கள் அதனை நம்பக்கூடியவர்களாய் இருக்கமாட்டார்கள்.
كَذٰلِكَ سَلَكْنٰهُ فِیْ قُلُوْبِ الْمُجْرِمِیْنَ ۟ؕ
இதேபோன்று நாம் இ(ந்நல்லுரை)தனை குற்றம் புரிந்தோரின் இதயங்களில் செலுத்தி விடுகின்றோம்.
لَا یُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟ۙ
துன்புறுத்தும் வேதனையை அவர்கள் கண்ணால் காணாத வரை அவர்கள், இதன் மீது நம்பிக்கை கொள்வதில்லை!
فَیَاْتِیَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟ۙ
பிறகு, அவர்கள் உணராதிருக்கும் நிலையில் அது அவர்கள் மீது திடீரென வந்துவிழும்!
فَیَقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَ ۟ؕ
அப்போது அவர்கள் புலம்புவார்கள்: “எங்களுக்குச் சற்று அவகாசம் கிடைக்காதா?”
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
இவர்கள் நம்முடைய வேதனை சீக்கிரம் வரவேண்டும் என்றா அவசரப்படுகின்றார்கள்?
اَفَرَءَیْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِیْنَ ۟ۙ
நீர் கொஞ்சம் சிந்தித்தீரா? பல்லாண்டுகள்வரை சுகமாய் வாழ்ந்திட இவர்களுக்கு நாம் அவகாசம் அளித்துவிட்டிருந்தாலும்,
ثُمَّ جَآءَهُمْ مَّا كَانُوْا یُوْعَدُوْنَ ۟ۙ
பின்னர் எதனைக்கொண்டு இவர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்களோ அது இவர்களிடம் வந்துவிடுமானால்
مَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یُمَتَّعُوْنَ ۟ؕ
அப்போதுஇவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அந்த வாழ்க்கைச் சாதனங்கள் இவர்களுக்கு என்ன பயனைத் தரப்போகின்றன?
وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْیَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ ۟
(பாருங்கள்:) நாம் எந்த ஊரையும் அழித்ததில்லை எச்சரிக்கை செய்பவர்கள் அவர்களிடம் வந்து,
ذِكْرٰی ۛ۫ وَمَا كُنَّا ظٰلِمِیْنَ ۟
நல்லுரை வழங்கும் பொறுப்பை நிறைவேற்றாத வரையில்! மேலும், நாம் கொடுமை புரிபவராயும் இருந்ததில்லை.
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّیٰطِیْنُ ۟
இதனை (தெளிவான இந்த வேதத்தை) ஷைத்தான்கள் எடுத்துக் கொண்டு இறங்கவில்லை.
وَمَا یَنْۢبَغِیْ لَهُمْ وَمَا یَسْتَطِیْعُوْنَ ۟ؕ
அது அவர்களுக்குரிய பணியுமல்ல; அவ்வாறு செய்வதற்கும் அவர்களால் இயலாது!
اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَ ۟ؕ
திண்ணமாக, அவர்கள் இதனைச் செவியுறுவதிலிருந்தும்கூட விலக்கித் தூரமாக வைக்கப்பட்டுள்ளார்கள்.
فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِیْنَ ۟ۚ
ஆகவே, (நபியே!) அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் அழைக்காதீர்கள். அவ்வாறாயின் தண்டனை பெறுவோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்.
وَاَنْذِرْ عَشِیْرَتَكَ الْاَقْرَبِیْنَ ۟ۙ
உம்முடைய மிக நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்யுங்கள்;
وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
மேலும், நம்பிக்கையாளர்களில் யார் உம்மைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களிடம் பணிவாய் நடந்து கொள்ளும்!
فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟ۚ
அவர்கள் உமக்குக் கீழ்ப்படியாது மாறு செய்தால், “நீங்கள் செய்யும் செயல்களுக்கு நான் பொறுப்பாளியல்லன்!” என்று அவர்களிடம் கூறிவிடும்!
وَتَوَكَّلْ عَلَی الْعَزِیْزِ الرَّحِیْمِ ۟ۙ
மேலும், வல்லமை மிக்கவனும், பெரும் கிருபையாளனுமாகிய இறைவனையே முழுமையாகச் சார்ந்திரும்!
الَّذِیْ یَرٰىكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ
அவன் எத்தகையவன் எனில், நீர் எழும்போது உம்மைப் பார்க்கிறான்.
وَتَقَلُّبَكَ فِی السّٰجِدِیْنَ ۟
மேலும், சிரம்பணிந்து வணங்குவோர்களிடையே உம் அசைவையும் பார்க்கின்றான்.
اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
திண்ணமாக, அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
هَلْ اُنَبِّئُكُمْ عَلٰی مَنْ تَنَزَّلُ الشَّیٰطِیْنُ ۟ؕ
(மக்களே!) ஷைத்தான்கள் யார்மீது இறங்குகிறார்கள் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்கவா?
تَنَزَّلُ عَلٰی كُلِّ اَفَّاكٍ اَثِیْمٍ ۟ۙ
பெரும் பொய்யனாகிய, பாவம் புரியக்கூடிய ஒவ்வொருவன் மீதும் அவர்கள் இறங்குகின்றார்கள்.
یُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَ ۟ؕ
அவர்கள் கேள்விப்பட்டதை யெல்லாம் காதுகளில் ஊதி விடுகின்றார்கள். மேலும், அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே!
وَالشُّعَرَآءُ یَتَّبِعُهُمُ الْغَاوٗنَ ۟ؕ
மேலும், கவிஞர்களையோ வழிகெட்டுப் போனவர்கள்தான் அவர்களைப் பின்பற்றுகின்றார்கள்.
اَلَمْ تَرَ اَنَّهُمْ فِیْ كُلِّ وَادٍ یَّهِیْمُوْنَ ۟ۙ
அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதையும்,
وَاَنَّهُمْ یَقُوْلُوْنَ مَا لَا یَفْعَلُوْنَ ۟ۙ
தாங்கள் செய்யாதவற்றைக் கூறுவதையும் நீர் பார்க்கவில்லையா?
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِیْرًا وَّانْتَصَرُوْا مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا ؕ وَسَیَعْلَمُ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَیَّ مُنْقَلَبٍ یَّنْقَلِبُوْنَ ۟۠
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிந்தார்களோ, மேலும், அல்லாஹ்வை அதிகம் நினைத்தார்களோ, மேலும், தங்களுக்குக் கொடுமை இழைக்கப்பட்டபோது அதற்காக மட்டும் பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர! மேலும், கொடுமை புரிகின்றவர்கள், அவர்கள் எந்த கதியை அடையப் போகின்றார்கள் என்பதை அதிவிரைவில் அறிந்துகொள்வார்கள்.