All Surahs

Surah 39

الزمر

Az-Zumar

39. ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)

75 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟

வல்லமை மிக்கவனும், நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கிறது.

2

اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ فَاعْبُدِ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّیْنَ ۟ؕ

(நபியே!) நாம் இந்த வேதத்தை உம்மீது சத்தியத்துடன் இறக்கியிருக்கின்றோம். எனவே, நீர் அல்லாஹ்வையே வழிபடும். தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்!

3

اَلَا لِلّٰهِ الدِّیْنُ الْخَالِصُ ؕ وَالَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِیُقَرِّبُوْنَاۤ اِلَی اللّٰهِ زُلْفٰی ؕ اِنَّ اللّٰهَ یَحْكُمُ بَیْنَهُمْ فِیْ مَا هُمْ فِیْهِ یَخْتَلِفُوْنَ ؕ۬ اِنَّ اللّٰهَ لَا یَهْدِیْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ ۟

அறிந்துகொள்ளுங்கள். தூய்மையான கீழ்ப்படிதல் முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். எவர்கள் அவனை விட்டுவிட்டு வேறு பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ, அவர்கள் (தம்முடைய இச்செயலுக்கு இப்படிக் காரணம் கூறுகிறார்கள்:) “எங்களுக்கு அல்லாஹ்விடத்தில் அவர்கள் நெருக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்பதற்காகத்தான் நாங்கள் அவர்களை வணங்குகின்றோம்.” எவற்றில் அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றார்களோ, அவை அனைத்திலும் திண்ணமாக அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான். பொய்யனாகவும், சத்தியத்தை நிராகரிப்பவனாகவும் இருக்கும் எவனுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.

4

لَوْ اَرَادَ اللّٰهُ اَنْ یَّتَّخِذَ وَلَدًا لَّاصْطَفٰی مِمَّا یَخْلُقُ مَا یَشَآءُ ۙ سُبْحٰنَهٗ ؕ هُوَ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ ۟

அல்லாஹ் எவரையேனும் மகனாக எடுத்துக் கொள்ள நாடியிருந்தால், தன்னுடைய படைப்புகளிலிருந்து தான் நாடுபவரைத் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் இதனை (எவரையேனும் தனக்கு மகனாக ஆக்கிக்கொள்வதை) விட்டுத் தூய்மையானவன்! அவன்தான் அல்லாஹ்! தனித்தவனும், யாவற்றையும் அடக்கி ஆளுபவனும் ஆவான்.

5

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ۚ یُكَوِّرُ الَّیْلَ عَلَی النَّهَارِ وَیُكَوِّرُ النَّهَارَ عَلَی الَّیْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ؕ كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ اَلَا هُوَ الْعَزِیْزُ الْغَفَّارُ ۟

அவன் வானங்களையும், பூமியையும் சத்தியத்தோடு படைத்திருக்கின்றான். அவனே இரவைச் சுருட்டி பகலை விரிக்கின்றான்; பகலைச் சுருட்டி இரவை விரிக்கின்றான்; சூரியனையும் சந்திரனையும் அவன் வசப்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு காலம் வரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அறிந்து கொள்ளுங்கள். அவன் வலிமை மிக்கவனும், மன்னித்து அருள்பவனுமாவான்!

6

خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَاَنْزَلَ لَكُمْ مِّنَ الْاَنْعَامِ ثَمٰنِیَةَ اَزْوَاجٍ ؕ یَخْلُقُكُمْ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ خَلْقًا مِّنْ بَعْدِ خَلْقٍ فِیْ ظُلُمٰتٍ ثَلٰثٍ ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟

அவனே உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். பின்னர் அவனே அந்த உயிரிலிருந்து அதன் துணையை உண்டாக்கினான். அவனே உங்களுக்காக எட்டு கால்நடைகளை இணைகளாகப் படைத்தான். அவன் உங்கள் அன்னையரின் வயிற்றில், மூன்று இருட்திரைகளினுள் ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றான். (இந்தக் காரியங்கள் செய்கின்ற) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவனாவான். ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. பிறகு, நீங்கள் எங்கிருந்து திசை திருப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்?

7

اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنْكُمْ ۫ وَلَا یَرْضٰی لِعِبَادِهِ الْكُفْرَ ۚ وَاِنْ تَشْكُرُوْا یَرْضَهُ لَكُمْ ؕ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ ثُمَّ اِلٰی رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

நீங்கள் நிராகரிப்பீர்களாயின் திண்ணமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன். ஆனால், அவன் தன் அடியார்களிடம் நிராகரிப்பை விரும்புவதில்லை. மேலும், நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின், அதனை அவன் உங்களுக்காக விரும்புகின்றான். சுமை சுமப்பவர் எவரும் பிறரின் சுமையைச் சுமக்கமாட்டார். இறுதியில், உங்கள் இறைவனின் பக்கமே நீங்கள் எல்லோரும் திரும்ப வேண்டியுள்ளது. அப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அவன் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பான். திண்ணமாக, அவன் உள்ளங்களின் நிலைமைகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

8

وَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهٗ مُنِیْبًا اِلَیْهِ ثُمَّ اِذَا خَوَّلَهٗ نِعْمَةً مِّنْهُ نَسِیَ مَا كَانَ یَدْعُوْۤا اِلَیْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلّٰهِ اَنْدَادًا لِّیُضِلَّ عَنْ سَبِیْلِهٖ ؕ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِیْلًا ۖۗ اِنَّكَ مِنْ اَصْحٰبِ النَّارِ ۟

மனிதனுக்கு ஏதேனும் ஒரு தீங்கு வந்துவிட்டால், அவன் தன் இறைவனின் பக்கம் திரும்பி அவனை அழைக்கின்றான். பிறகு அவனுடைய இறைவன் அவன் மீது தன் அருட்கொடையை வழங்கினால், முன்பு எந்தத் துன்பத்தை நீக்கும்படி இறைஞ்சிக் கொண்டிருந்தானோ அந்தத் துன்பத்தை அவன் மறந்து விடுகின்றான்; மேலும், அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குகின்றான்; அவனுடைய வழியைவிட்டுத் தவறச் செய்வதற்காக! (நபியே!) அந்த மனிதனிடம் கூறும்: “நீ உனது நிராகரிப்பின் மூலம் சிறிது நாட்கள் இன்பம் அனுபவித்துக்கொள். திண்ணமாக நீ நரகத்திற்குச் செல்பவன் ஆவாய்.”

9

اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّیْلِ سَاجِدًا وَّقَآىِٕمًا یَّحْذَرُ الْاٰخِرَةَ وَیَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖ ؕ قُلْ هَلْ یَسْتَوِی الَّذِیْنَ یَعْلَمُوْنَ وَالَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ؕ اِنَّمَا یَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۟۠

(இத்தகைய மனிதனின் நடத்தை சிறந்ததா அல்லது அந்த மனிதனின் நடத்தையா?) அவனோ கீழ்ப்படிந்தவனாயிருக்கின்றான்; இரவு நேரங்களில் நின்று வணங்குகின்றான், மேலும், சிரம் பணிகின்றான்; மறுமையையும் அஞ்சுகின்றான்; மேலும், தன் இறைவனின் அருளுக்கு ஆசைப்படுகின்றான். இவர்களிடம் கேளும்: “அறிந்தோரும் அறியாதோரும் சமமாக முடியுமா? அறிவுடையவர்கள்தாம் நல்லுரைகளை ஏற்கின்றார்கள்.”

10

قُلْ یٰعِبَادِ الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوْا رَبَّكُمْ ؕ لِلَّذِیْنَ اَحْسَنُوْا فِیْ هٰذِهِ الدُّنْیَا حَسَنَةٌ ؕ وَاَرْضُ اللّٰهِ وَاسِعَةٌ ؕ اِنَّمَا یُوَفَّی الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَیْرِ حِسَابٍ ۟

(நபியே!) கூறுவீராக: “நம்பிக்கைக்கொண்டிருக்கின்ற என் அடியார்களே! உங்களுடைய இறைவனுக்கு அஞ்சுங்கள். எவர்கள் இவ்வுலகில் நன்னடத்தையைக் கொண்டிருக்கின்றார்களோ, அவர்களுக்கு நன்மை இருக்கிறது. மேலும், அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி அளவின்றி வழங்கப்படும்.”

11

قُلْ اِنِّیْۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّیْنَ ۟ۙ

(நபியே! இவர்களிடம்) கூறும்: “தீனைகீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி அவனை வணங்கும்படி திண்ணமாக எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.

12

وَاُمِرْتُ لِاَنْ اَكُوْنَ اَوَّلَ الْمُسْلِمِیْنَ ۟

மேலும், நானே எல்லோருக்கும் முதலில் முஸ்லிமாக (இறைவனுக்கு அடிபணிந்தவனாக) இருக்க வேண்டும் என எனக்குப் பணிக்கப்பட்டுள்ளது.”

13

قُلْ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟

கூறுவீராக: “நான் என் இறைவனுக்கு மாறு செய்தால் ஒரு மகத்தான நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகின்றேன்.”

14

قُلِ اللّٰهَ اَعْبُدُ مُخْلِصًا لَّهٗ دِیْنِیْ ۟ۙ

கூறிவிடுவீராக: “நான் என்னுடைய தீனைகீழ்ப்படிதலை, அல்லாஹ்வுக்கு முற்றிலும் உரித்தாக்கிய வண்ணம் அவனையே வணங்குவேன்.

15

فَاعْبُدُوْا مَا شِئْتُمْ مِّنْ دُوْنِهٖ ؕ قُلْ اِنَّ الْخٰسِرِیْنَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ اَلَا ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِیْنُ ۟

நீங்கள் அவனை விடுத்து யார் யாரையெல்லாம் விரும்புகின்றீர்களோ அவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்.” கூறுவீராக: “மறுமை நாளில் யார் தங்களையும், தங்கள் குடும்பத்தாரையும் இழப்பிற்குள்ளாக்கினார்களோ, அவர்கள்தாம் உண்மையில் திவால் ஆனவர்கள்.” நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்! இதுதான் அப்பட்டமான திவால் ஆகும்.

16

لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ؕ ذٰلِكَ یُخَوِّفُ اللّٰهُ بِهٖ عِبَادَهٗ ؕ یٰعِبَادِ فَاتَّقُوْنِ ۟

அவர்கள் மீது நெருப்புக்குடைகள் மேலிருந்தும், கீழிருந்தும் மூடியிருக்கும். இத்தகைய முடிவைக் குறித்துதான் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்துகின்றான். எனவே, என் அடியார்களே! என் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

17

وَالَّذِیْنَ اجْتَنَبُوا الطَّاغُوْتَ اَنْ یَّعْبُدُوْهَا وَاَنَابُوْۤا اِلَی اللّٰهِ لَهُمُ الْبُشْرٰی ۚ فَبَشِّرْ عِبَادِ ۟ۙ

ஆனால் (இதற்கு மாறாக) எவர்கள் தாஃகூத்துக்கு* அடிபணிவதைத் தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிட்டார்களோ அவர்களுக்கு நற்செய்தி இருக்கிறது. எனவே அந்த அடியார்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி அறிவித்து விடுவீராக!

18

الَّذِیْنَ یَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَیَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ ؕ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ هَدٰىهُمُ اللّٰهُ وَاُولٰٓىِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ ۟

அவர்கள் எத்தகையவர்கள் எனில், சொல்வதை ஆழ்ந்து கவனமாகக் கேட்டு அவற்றின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுகின்றவர்கள். இத்தகையவர்களுக்குத்தான் அல்லாஹ் நேர்வழி காட்டியிருக்கிறான். அவர்களே விவேகம் உடையவர்களாவர்.

19

اَفَمَنْ حَقَّ عَلَیْهِ كَلِمَةُ الْعَذَابِ ؕ اَفَاَنْتَ تُنْقِذُ مَنْ فِی النَّارِ ۟ۚ

(நபியே!) எவன் மீது தண்டனைக்கான தீர்ப்பு உறுதியாகிவிட்டதோ அவனை யாரால் காப்பாற்ற முடியும்? நெருப்பில் வீழ்ந்துவிட்டிருப்பவனை உம்மால் காப்பாற்ற முடியுமா என்ன?

20

لٰكِنِ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَّبْنِیَّةٌ ۙ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ۬ وَعْدَ اللّٰهِ ؕ لَا یُخْلِفُ اللّٰهُ الْمِیْعَادَ ۟

ஆயினும், எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்காக கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை.

21

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَكَهٗ یَنَابِیْعَ فِی الْاَرْضِ ثُمَّ یُخْرِجُ بِهٖ زَرْعًا مُّخْتَلِفًا اَلْوَانُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَجْعَلُهٗ حُطَامًا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟۠

நீங்கள் காணவில்லையா என்ன? அல்லாஹ் வானத்திலிருந்து நீரைப் பொழிந்து அதனை அருவிகளாகவும், ஊற்றுகளாகவும், நதிகளாகவும் பூமியில் ஓடச் செய்தான். பின்னர் அந்த நீரின் வாயிலாக பல்வேறுபட்ட பயிர் வகைகளை விதவிதமான நிறங்களில் அவன் வெளிப்படுத்துகின்றான். பிறகு, அந்தப் பயிர்கள் முதிர்ந்து காய்ந்து விடுகின்றன. அப்போது அவை மஞ்சளித்துப் போவதை நீர் காண்கிறீர். இறுதியில் அல்லாஹ் அவற்றைப் பதராக்கிவிடுகின்றான். உண்மையில் விவேகம் உடையவருக்கு இதில் ஒரு படிப்பினை இருக்கிறது.

22

اَفَمَنْ شَرَحَ اللّٰهُ صَدْرَهٗ لِلْاِسْلَامِ فَهُوَ عَلٰی نُوْرٍ مِّنْ رَّبِّهٖ ؕ فَوَیْلٌ لِّلْقٰسِیَةِ قُلُوْبُهُمْ مِّنْ ذِكْرِ اللّٰهِ ؕ اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

எவருடைய நெஞ்சத்தை அல்லாஹ் இஸ்லாத்திற்காகத் திறந்துவிட்டிருக்கின்றானோ, மேலும் எவர் தன்னுடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ஒளியில் நடந்து கொண்டிருக்கின்றாரோ (அவர் இவற்றிலிருந்து எந்தப் படிப்பினையும் பெறாத மனிதனைப் போன்று ஆக முடியுமா?) அல்லாஹ்வின் நல்லுரைகளுக்கு எதிராக எவர்களுடைய உள்ளம் இன்னும் அதிகமாக இறுகிவிட்டதோ, அவர்களுக்குக் கேடுதான்! அத்தகையவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்.

23

اَللّٰهُ نَزَّلَ اَحْسَنَ الْحَدِیْثِ كِتٰبًا مُّتَشَابِهًا مَّثَانِیَ ۖۗ تَقْشَعِرُّ مِنْهُ جُلُوْدُ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ ۚ ثُمَّ تَلِیْنُ جُلُوْدُهُمْ وَقُلُوْبُهُمْ اِلٰی ذِكْرِ اللّٰهِ ؕ ذٰلِكَ هُدَی اللّٰهِ یَهْدِیْ بِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟

அல்லாஹ் மிக அழகிய உரைகளை இறக்கியிருக்கின்றான்; ஒரு வேதத்தை! அதன் எல்லாப் பகுதிகளும் ஒரே சீராக உள்ளன. மேலும், அதில் கருத்துகள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. அதனைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கிறது. பின்னர், அவர்களின் உடலும், உள்ளமும் மிருதுவாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன. இது அல்லாஹ்வின் வழிகாட்டுதலாகும். அவன், தான் நாடுவோரை இதனைக் கொண்டு நேரிய வழியில் செலுத்துகின்றான். இனி எவருக்கு அல்லாஹ்வே நேர்வழி காட்டவில்லையோ, அவருக்கு நேர்வழி காட்டுவோர் வேறு எவரும் இலர்.

24

اَفَمَنْ یَّتَّقِیْ بِوَجْهِهٖ سُوْٓءَ الْعَذَابِ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَقِیْلَ لِلظّٰلِمِیْنَ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ۟

இனி மறுமைநாளில் வேதனையின் கடும் தாக்குதலைத் தன் முகத்தில் தாங்கிக்கொள்ள வேண்டிய மனிதனுடைய மோசமான நிலையைக் குறித்து நீங்கள் என்ன கணிக்கிறீர்கள்? அப்படிப்பட்ட கொடுமைக்காரர்களிடம் அப்பொழுது கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றை!”

25

كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتٰىهُمُ الْعَذَابُ مِنْ حَیْثُ لَا یَشْعُرُوْنَ ۟

இவர்களுக்கு முன்பும் பலர் இதே போன்று பொய்யென வாதிட்டிருக்கிறார்கள். இறுதியில், அவர்கள் நினைத்தும் பார்த்திராத திசையிலிருந்து அவர்கள் மீது வேதனை வந்தது.

26

فَاَذَاقَهُمُ اللّٰهُ الْخِزْیَ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟

பின்னர், அல்லாஹ் உலக வாழ்விலேயே இழிவினை அவர்கள் சுவைக்கச் செய்தான். மறுமையின் வேதனையோ, இதனைவிடக் கடுமையானதாகும்; அந்தோ! இந்த மக்கள் அறிந்திருந்தால்!

27

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِیْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟ۚ

நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு விதவிதமான எடுத்துக்காட்டுகளை கொடுத்திருக்கின்றோம், அவர்கள் விழிப்படையவேண்டும் என்பதற்காக!

28

قُرْاٰنًا عَرَبِیًّا غَیْرَ ذِیْ عِوَجٍ لَّعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟

இது அரபி மொழியிலுள்ள குர்ஆன்; இதில் எவ்விதக் கோணலுமில்லை; தீயகதியிலிருந்து இவர்கள் தப்பித்துக் கொள்வதற்காக!

29

ضَرَبَ اللّٰهُ مَثَلًا رَّجُلًا فِیْهِ شُرَكَآءُ مُتَشٰكِسُوْنَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ ؕ هَلْ یَسْتَوِیٰنِ مَثَلًا ؕ اَلْحَمْدُ لِلّٰهِ ۚ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

அல்லாஹ் ஓர் உதாரணம் சொல்கின்றான்; ஒரு மனிதன் இருக்கின்றான். அவன் மீது உரிமை கொண்டாடுவதில் துர்குணமுடைய மனிதர்கள் பங்காளிகளாய் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவனைத் தத்தம் பக்கமாக இழுக்கின்றனர். மற்றொரு மனிதன் முழுக்க முழுக்க ஒரே உரிமையாளனுக்கே அடிமையாக இருக்கின்றான். என்ன, இவ்விருவரின் நிலையும் சமமாக முடியுமா? அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறியாமையில் கிடக்கின்றார்கள்.

30

اِنَّكَ مَیِّتٌ وَّاِنَّهُمْ مَّیِّتُوْنَ ۟ؗ

(நபியே!) நீரும் மரணமாகத்தான் போகிறீர். இவர்களும் மரணமாகக் கூடியவர்கள்தாம்!

31

ثُمَّ اِنَّكُمْ یَوْمَ الْقِیٰمَةِ عِنْدَ رَبِّكُمْ تَخْتَصِمُوْنَ ۟۠

பிறகு, மறுமை நாளில் திண்ணமாக நீங்கள் எல்லோரும் உங்கள் இறைவன் முன்னிலையில் தத்தம் வாதங்களை எடுத்துவைக்கப் போகிறீர்கள்.

32

فَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَذَبَ عَلَی اللّٰهِ وَكَذَّبَ بِالصِّدْقِ اِذْ جَآءَهٗ ؕ اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْكٰفِرِیْنَ ۟

எவன் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தானோ மேலும், உண்மை தன் எதிரில் வந்தபோது அதனையும் பொய்ப்படுத்தினானோ, அவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? என்ன, இத்தகைய நன்றி கொன்றவர்களுக்கு நரகில் தங்குமிடம் எதுவும் இல்லையா?

33

وَالَّذِیْ جَآءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهٖۤ اُولٰٓىِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ ۟

ஆனால், எந்த மனிதர் உண்மையைக் கொண்டு வந்தாரோ, மேலும், எவர்கள் அவரை உண்மையாளர் என்று ஏற்றுக்கொண்டார்களோ அப்படிப்பட்டவர்கள்தாம், வேதனையிலிருந்து தப்பிக்கக் கூடியவர்கள்.

34

لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ ذٰلِكَ جَزٰٓؤُا الْمُحْسِنِیْنَ ۟ۚۖ

அவர்களுக்கு, அவர்கள் விரும்புகின்றவை அனைத்தும் அவர்களின் இறைவனிடம் கிடைக்கும். நன்மை செய்வோரின் கூலி இதுதான்;

35

لِیُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِیْ عَمِلُوْا وَیَجْزِیَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟

அவர்கள் செய்து கொண்டிருந்த மிகத் தீமையான செயல்களை அல்லாஹ் அவர்களின் கணக்கிலிருந்து நீக்கிவிட வேண்டும்; மேலும், அவர்கள் ஆற்றிவந்த மிகச் சிறந்த செயல்களைக் கவனித்து அவர்களுக்குக் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக!

36

اَلَیْسَ اللّٰهُ بِكَافٍ عَبْدَهٗ ؕ وَیُخَوِّفُوْنَكَ بِالَّذِیْنَ مِنْ دُوْنِهٖ ؕ وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟ۚ

(நபியே!) அல்லாஹ் தன் அடியானுக்குப் போதுமானவனில்லையா, என்ன? இவர்கள் அவனல்லாதவர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகிறார்கள். உண்மை யாதெனில், அல்லாஹ் எவனை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றானோ, அவனுக்கு வழிகாட்டக்கூடியவர் எவருமிலர்.

37

وَمَنْ یَّهْدِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّضِلٍّ ؕ اَلَیْسَ اللّٰهُ بِعَزِیْزٍ ذِی انْتِقَامٍ ۟

மேலும், எவருக்கு அவன் நேர்வழி காட்டுகின்றானோ அவரை வழிகெடுப்பவனும் எவருமில்லை. அல்லாஹ் வல்லமைமிக்கவனாகவும், பழிவாங்குபவனாகவும் இல்லையா, என்ன?

38

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ قُلْ اَفَرَءَیْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِیَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖۤ اَوْ اَرَادَنِیْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖ ؕ قُلْ حَسْبِیَ اللّٰهُ ؕ عَلَیْهِ یَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ ۟

வானங்களையும், பூமியையும் படைத்தது யார் என்று இவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று இவர்கள் பதிலுரைப்பார்கள். (இவர்களிடம்) கேளும். (உண்மை இதுவாயின்) அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கும் தெய்வங்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? அல்லாஹ் எனக்கு ஏதேனும் தீங்கு இழைக்க நாடினால் அந்தத் தீங்கிலிருந்து என்னை அவை காப்பாற்றி விடுமா? அல்லது அல்லாஹ் என்மீது கருணைபொழிய நாடினால் அந்தத் தெய்வங்களால் அவனுடைய கருணையைத் தடுத்து நிறுத்த முடியுமா? (சரி, இவர்களிடம்) கூறிவிடும்: “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; சார்ந்திருப்பவர்கள் அனைவரும் அவனையே முழுமையாகச் சார்ந்திருக்கின்றார்கள்.”

39

قُلْ یٰقَوْمِ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ اِنِّیْ عَامِلٌ ۚ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟ۙ

(இவர்களிடம் தெளிவாகக்) கூறும்: “என் சமூகத்தாரே! நீங்கள் உங்கள் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருங்கள். நான் (என்னுடைய) பணியைச் செய்து கொண்டிருப்பேன்.

40

مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَیَحِلُّ عَلَیْهِ عَذَابٌ مُّقِیْمٌ ۟

இழிவு தரும் வேதனை யாருக்கு வரும், நீங்காத தண்டனை யார்மீது இறங்கும் என்பது உங்களுக்கு விரைவில் தெரிந்துவிடும்.”

41

اِنَّاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ لِلنَّاسِ بِالْحَقِّ ۚ فَمَنِ اهْتَدٰی فَلِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا یَضِلُّ عَلَیْهَا ۚ وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟۠

(நபியே!) நாம் மனிதர்கள் அனைவருக்காகவும் சத்தியத்துடனான இந்த வேதத்தை உம்மீது இறக்கியிருக்கின்றோம். இனி, யாரேனும் நேரிய வழியில் நடந்தால் அது அவருக்கே நன்மை தரும். யாரேனும் வழி தவறினாலும், வழி தவறியதன் தீயவிளைவு அவரையே சாரும். நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்லர்.

42

اَللّٰهُ یَتَوَفَّی الْاَنْفُسَ حِیْنَ مَوْتِهَا وَالَّتِیْ لَمْ تَمُتْ فِیْ مَنَامِهَا ۚ فَیُمْسِكُ الَّتِیْ قَضٰی عَلَیْهَا الْمَوْتَ وَیُرْسِلُ الْاُخْرٰۤی اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟

அல்லாஹ்தான் மரணத்தின்போது உயிர்களைக் கைப்பற்றுகின்றான். (அவ்வாறே) இதுவரை மரணிக்காதவர்களின் உயிர்களைத் தூக்கத்தின்போது கைப்பற்றுகின்றான். பிறகு, எவர்கள் மீது மரணத்தை விதிக்கின்றானோ, அவர்களின் உயிரைத் தடுத்து வைத்துக்கொள்கின்றான். மற்றவர்களின் உயிர்களை, ஒரு குறிப்பிட்ட தவணைவரை திருப்பி அனுப்புகின்றான்; சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் மாபெரும் சான்றுகள் உள்ளன.

43

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ شُفَعَآءَ ؕ قُلْ اَوَلَوْ كَانُوْا لَا یَمْلِكُوْنَ شَیْـًٔا وَّلَا یَعْقِلُوْنَ ۟

என்ன, இவர்கள் இத்தகைய இறைவனை விட்டுவிட்டு மற்றவர்களைப் பரிந்துரையாளர்களாக எடுத்துக் கொண்டார்களா? அவர்களிடம் கேளும்: “அவர்களிடம் எந்த அதிகாரமும் இல்லை என்றாலும், அவர்கள் எதையும் புரியாமலிருந்தாலுமா பரிந்துரை செய்யப்போகிறார்கள்?”

44

قُلْ لِّلّٰهِ الشَّفَاعَةُ جَمِیْعًا ؕ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

கூறுவீராக: ஷஃபாஅத் பரிந்துரை முற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன். பிறகு, நீங்கள் அவனிடமே திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.

45

وَاِذَا ذُكِرَ اللّٰهُ وَحْدَهُ اشْمَاَزَّتْ قُلُوْبُ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ ۚ وَاِذَا ذُكِرَ الَّذِیْنَ مِنْ دُوْنِهٖۤ اِذَا هُمْ یَسْتَبْشِرُوْنَ ۟

ஏக அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்படுமாயின் மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் குமைய ஆரம்பிக்கின்றன. ஆனால், அவனை விடுத்து மற்றவர்களைப் பற்றிக் கூறப்படுமாயின் உடனே அவர்கள் மகிழ்ச்சியினால் பூரிப்படைகின்றார்கள்.

46

قُلِ اللّٰهُمَّ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ عٰلِمَ الْغَیْبِ وَالشَّهَادَةِ اَنْتَ تَحْكُمُ بَیْنَ عِبَادِكَ فِیْ مَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

நீர் கூறும்: “இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிபவனே! நீயே உன்னுடைய அடிமைகளுக்கிடையே அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்ற விஷயங்களில் தீர்ப்பு வழங்குவாய்.”

47

وَلَوْ اَنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا مَا فِی الْاَرْضِ جَمِیْعًا وَّمِثْلَهٗ مَعَهٗ لَافْتَدَوْا بِهٖ مِنْ سُوْٓءِ الْعَذَابِ یَوْمَ الْقِیٰمَةِ ؕ وَبَدَا لَهُمْ مِّنَ اللّٰهِ مَا لَمْ یَكُوْنُوْا یَحْتَسِبُوْنَ ۟

இந்தக் கொடுமைக்காரர்களிடம் பூமியிலுள்ள அனைத்துச் செல்வங்களும் இருந்த போதிலும், அவற்றுடன் இன்னும் அதே அளவு செல்வம் இருந்தாலும், மறுமைநாளில் கொடிய தண்டனையிலிருந்து தப்புவதற்காக அவை அனைத்தையும் ஈடாகக் கொடுத்திட அவர்கள் தயாராகிவிடுவார்கள். அவர்கள் என்றுமே நினைத்து கூடப் பார்க்காதவை அங்கு அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு முன்னால் வெளிப்படும்.

48

وَبَدَا لَهُمْ سَیِّاٰتُ مَا كَسَبُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

அவர்களுடைய சம்பாதனையின் தீயவிளைவுகள் அனைத்தும் (அங்கு) அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். மேலும், அவர்கள் எதனைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கின்றார்களோ அது அவர்களை முழுமையாகச் சூழ்ந்துகொள்ளும்.

49

فَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَانَا ؗ ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ نِعْمَةً مِّنَّا ۙ قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ ؕ بَلْ هِیَ فِتْنَةٌ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟

இதே மனிதனைக் கொஞ்சம் துன்பம் தொட்டுவிட்டால் அவன் நம்மை அழைக்கின்றான். பிறகு, நாம் அவனுக்கு நம் சார்பிலிருந்து அருட்கொடையை அளி(த்து மகிழ்வி)க்கும்போது, இது எனக்கு என்னுடைய அறிவின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றான். உண்மையில் இது ஒரு சோதனையாகும். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.

50

قَدْ قَالَهَا الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்களும் இதையே கூறினார்கள். ஆயினும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை.

51

فَاَصَابَهُمْ سَیِّاٰتُ مَا كَسَبُوْا ؕ وَالَّذِیْنَ ظَلَمُوْا مِنْ هٰۤؤُلَآءِ سَیُصِیْبُهُمْ سَیِّاٰتُ مَا كَسَبُوْا ۙ وَمَا هُمْ بِمُعْجِزِیْنَ ۟

பின்னர், தங்களுடைய சம்பாத்தியத்தின் தீயவிளைவுகள் அவர்களைப் பீடித்துக்கொள்ளும். மேலும், அவர்களில் யார் கொடுமை புரிந்தார்களோ அவர்களையும் அவர்களுடைய சம்பாத்தியத்தின் தீயவிளைவுகள் பிடித்துக் கொள்ளும்! அவர்கள் நம்மைத் தோல்வியுறச் செய்யக்கூடியவர்களல்லர்.

52

اَوَلَمْ یَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠

அல்லாஹ் தான் நாடுகின்றவர்க்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்க்குக் குறைவாகக் கொடுக்கின்றான் என்பதை இவர்கள் அறியவில்லையா? இதில் சான்றுகள் உள்ளன; நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு!

53

قُلْ یٰعِبَادِیَ الَّذِیْنَ اَسْرَفُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغْفِرُ الذُّنُوْبَ جَمِیْعًا ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟

(நபியே!) கூறுவீராக: “தங்கள் ஆன்மாக்களுக்குக் கொடுமை இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். திண்ணமாக, அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவான்.

54

وَاَنِیْبُوْۤا اِلٰی رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ۟

திரும்பி விடுங்கள், உங்கள் இறைவனின் பக்கம்! மேலும், அடிபணிந்து விடுங்கள் அவனுக்கு உங்கள்மீது வேதனை வருவதற்கு முன்பாகவே! பிறகு, எங்கிருந்தும் உங்களுக்கு உதவி கிடைக்காது.

55

وَاتَّبِعُوْۤا اَحْسَنَ مَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَّاَنْتُمْ لَا تَشْعُرُوْنَ ۟ۙ

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்பட்ட வேதத்தின் சிறந்த அம்சத்தைப் பின்பற்றுங்கள்; நீங்கள் உணராதிருக்கும் நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக!

56

اَنْ تَقُوْلَ نَفْسٌ یّٰحَسْرَتٰی عَلٰی مَا فَرَّطْتُ فِیْ جَنْۢبِ اللّٰهِ وَاِنْ كُنْتُ لَمِنَ السّٰخِرِیْنَ ۟ۙ

இனி, “ஐயகோ! அல்லாஹ்வின் விஷயத்தில் நான் குறைபாடு செய்துவிட்டேனே! அது மட்டுமின்றி நான் பரிகாசம் செய்தவர்களுடனும் சேர்ந்துவிட்டேனே!” என்று புலம்பக்கூடிய அல்லது,

57

اَوْ تَقُوْلَ لَوْ اَنَّ اللّٰهَ هَدٰىنِیْ لَكُنْتُ مِنَ الْمُتَّقِیْنَ ۟ۙ

“அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் நானும் இறையச்சமுள்ளவர்களில் ஒருவனாக இருந்திருப்பேனே!” என்று புலம்பக்கூடிய,

58

اَوْ تَقُوْلَ حِیْنَ تَرَی الْعَذَابَ لَوْ اَنَّ لِیْ كَرَّةً فَاَكُوْنَ مِنَ الْمُحْسِنِیْنَ ۟

அல்லது, வேதனையைப் பார்க்கும் நேரத்தில் “அந்தோ! மற்றொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தால் நானும் நற்செயல் புரிவோர்களில் ஒருவனாய் ஆகிவிடுவேனே!” என்று புலம்பக்கூடிய நிலை எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.

59

بَلٰی قَدْ جَآءَتْكَ اٰیٰتِیْ فَكَذَّبْتَ بِهَا وَاسْتَكْبَرْتَ وَكُنْتَ مِنَ الْكٰفِرِیْنَ ۟

(அப்பொழுது அவனுக்கு இந்தப் பதில் கிடைக்கும்:) “அவ்வாறல்ல...! என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்திருந்தன அல்லவா? அவற்றை நீ பொய் என்று கூறினாய். மேலும், தற்பெருமை கொண்டாய்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்!”

60

وَیَوْمَ الْقِیٰمَةِ تَرَی الَّذِیْنَ كَذَبُوْا عَلَی اللّٰهِ وُجُوْهُهُمْ مُّسْوَدَّةٌ ؕ اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْمُتَكَبِّرِیْنَ ۟

(இன்று) எவர்கள் இறைவன் மீது பொய் புனைந்துரைக்கின்றார்களோ, அவர்களின் முகங்கள் மறுமைநாளில் கறுத்துப்போயிருப்பதை நீர் காண்பீர். பெருமையடித்தவர்களுக்கு நரகம் போதிய தங்குமிடமாக இல்லையா, என்ன?

61

وَیُنَجِّی اللّٰهُ الَّذِیْنَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ ؗ لَا یَمَسُّهُمُ السُّوْٓءُ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟

(இதற்கு மாறாக) எவர்கள் இங்கு இறையச்சம் கொண்டு வாழ்கின்றார்களோ, அதன் விளைவாய் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி வாய்ப்புகள் நிமித்தம் அவர்களுக்கு அல்லாஹ் ஈடேற்றம் அளிப்பான். அவர்களை எந்தத் தீங்கும் அணுகாது. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.

62

اَللّٰهُ خَالِقُ كُلِّ شَیْءٍ ؗ وَّهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟

அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் படைத்தவனாவான். அவனே ஒவ்வொரு பொருளுக்கும் பொறுப்பாளனாக இருக்கின்றான்.

63

لَهٗ مَقَالِیْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠

வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இழப்புக்குரியவர்கள்.

64

قُلْ اَفَغَیْرَ اللّٰهِ تَاْمُرُوْٓنِّیْۤ اَعْبُدُ اَیُّهَا الْجٰهِلُوْنَ ۟

(நபியே!) இவர்களிடம் கூறுவீராக: “அறிவிலிகளே! அல்லாஹ்வை விட்டுவிட்டு மற்றவர்களை நான் வணங்க வேண்டுமென்று என்னிடம் நீங்கள் கூறுகின்றீர்களா?

65

وَلَقَدْ اُوْحِیَ اِلَیْكَ وَاِلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكَ ۚ لَىِٕنْ اَشْرَكْتَ لَیَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِیْنَ ۟

(நீர் இவ்விஷயத்தை இவர்களுக்குத் தெளிவுபடக்கூறிவிட வேண்டும்:) உமக்கும், உமக்கு முன் வாழ்ந்து சென்ற அனைத்து நபிமார்களுக்கும் இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டுள்ளது; நீர் இறைவனுக்கு இணைவைத்தால், உம்முடைய செயல் வீணாகிப் போய்விடும்; நீர் நிச்சயமாக நஷ்டமடைந்தவராகி விடுவீர்;

66

بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِّنَ الشّٰكِرِیْنَ ۟

எனவே (நபியே!) நீர் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிபணிவீராக! மேலும், நன்றி செலுத்தும் அடியார்களுடன் ஆகிவிடுவீராக!”

67

وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ۖۗ وَالْاَرْضُ جَمِیْعًا قَبْضَتُهٗ یَوْمَ الْقِیٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِیّٰتٌ بِیَمِیْنِهٖ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟

இந்த மக்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவேயில்லை. (அவனுடைய நிறைவான வல்லமையின் நிலை என்னவெனில்) மறுமைநாளில் பூமி முழுவதும் அவனின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனுடைய வலக்கையில் சுருட்டப்பட்டு இருக்கும். அவன் தூய்மையானவன்; உயர்ந்தவன்; இம்மனிதர்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களை விட்டு!

68

وَنُفِخَ فِی الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ ؕ ثُمَّ نُفِخَ فِیْهِ اُخْرٰی فَاِذَا هُمْ قِیَامٌ یَّنْظُرُوْنَ ۟

மேலும், அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மடிந்து வீழ்வார்கள். ஆனால், அல்லாஹ் யாரை உயிருடன் விட்டு வைக்க நாடியிருந்தானோ அவர்களைத் தவிர! பின்னர் மற்றொரு எக்காளம் ஊதப்படும். உடனே அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

69

وَاَشْرَقَتِ الْاَرْضُ بِنُوْرِ رَبِّهَا وَوُضِعَ الْكِتٰبُ وَجِایْٓءَ بِالنَّبِیّٖنَ وَالشُّهَدَآءِ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْحَقِّ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

பூமி தன் இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும்; வினைச் சுவடிகள் கொண்டு வந்து வைக்கப்படும்; இறைத்தூதரும் அனைத்துச் சாட்சியாளர்களும் கொண்டு வரப்படுவார்கள். மக்கள் மத்தியில் முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படமாட்டாது.

70

وَوُفِّیَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا یَفْعَلُوْنَ ۟۠

மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் புரிந்திருந்த செயல்களுக்கேற்ப முழுமையான கூலி வழங்கப்படும். மக்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான்.

71

وَسِیْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَتْلُوْنَ عَلَیْكُمْ اٰیٰتِ رَبِّكُمْ وَیُنْذِرُوْنَكُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ؕ قَالُوْا بَلٰی وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَی الْكٰفِرِیْنَ ۟

(இந்தத் தீர்ப்புக்குப் பிறகு) நிராகரித்தவர்களாய் இருந்தவர்கள் நரகத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய் ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவ்வாறாக, அவர்கள் அந்நரகத்தை நெருங்கியதும், அதன் வாயில்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள்: “உங்களுடைய இறைவனின் வசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டக்கூடியவர்களும், நீங்கள் இந்த நாளைச் சந்திக்க வேண்டிய ஒரு நேரம் வரும் என்று உங்களை எச்சரிக்கை செய்யக்கூடியவர்களுமான இறைத்தூதர்கள் உங்களிலிருந்தே உங்களிடம் வரவில்லையா?” அதற்கவர்கள், “ஆம்! வந்திருந்தார்கள். ஆயினும், வேதனையின் தீர்ப்பு நிராகரிப்பாளர்கள் மீது உறுதியாகிவிட்டது” என்று பதிலளிப்பார்கள்.

72

قِیْلَ ادْخُلُوْۤا اَبْوَابَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَا ۚ فَبِئْسَ مَثْوَی الْمُتَكَبِّرِیْنَ ۟

அப்போது கூறப்படும்: “நுழையுங்கள் நரகத்தின் வாயில்களில்! நீங்கள் என்றென்றும் இங்குதான் கிடக்க வேண்டியுள்ளது! பெருமையடிப்பவர்களுக்கு இது எத்துணைக் கெட்ட தங்குமிடமாகும்!”

73

وَسِیْقَ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَی الْجَنَّةِ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَیْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِیْنَ ۟

மேலும், எவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்து வாழ்ந்தார்களோ அவர்கள் சுவனத்தை நோக்கிக் கூட்டம் கூட்டமாய்க் கொண்டு செல்லப்படுவார்கள். அவ்வாறு அவர்கள் அதனை நெருங்கியதும் அதன் வாயில்கள் முன்னரே திறந்து வைக்கப்பட்டிருக்க அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள்: உங்கள் மீது ஸலாம் சாந்தி உண்டாகட்டும்! நீங்கள் நல்ல விதமாக இருங்கள். என்றென்றும் தங்கியிருப்பதற்காக இதில் நுழைந்து விடுங்கள்!

74

وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ صَدَقَنَا وَعْدَهٗ وَاَوْرَثَنَا الْاَرْضَ نَتَبَوَّاُ مِنَ الْجَنَّةِ حَیْثُ نَشَآءُ ۚ فَنِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟

அப்போது அவர்கள் கூறுவார்கள்: “இறைவனுக்கே புகழ் அனைத்தும்! அவன் எங்களிடம் தன் வாக்குறுதியை உண்மைப்படுத்திக் காட்டினான். மேலும் எங்களை பூமிக்கு வாரிசுகளாக்கினான். இனி நாங்கள் சுவனத்தில் விரும்புகின்ற இடத்தில் தங்கிக் கொள்ளலாம். ஆகா! எத்தனை சிறந்த கூலி இருக்கிறது, செயல்படக்கூடியவர்களுக்கு!”

75

وَتَرَی الْمَلٰٓىِٕكَةَ حَآفِّیْنَ مِنْ حَوْلِ الْعَرْشِ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ ۚ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْحَقِّ وَقِیْلَ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠

மேலும், நீர் காண்பீர்; அர்ஷைச்* சூழ்ந்த வண்ணம் வானவர்கள் தம் இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள். மேலும், மக்களிடையே முற்றிலும் நியாயமான வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். புகழ் அனைத்தும் அகிலத்தார் அனைவரையும் பரிபாலிக்கின்ற அல்லாஹ்வுக்கே!

PreviousSadNextGhafir

0:00–:––