وَالذّٰرِیٰتِ ذَرْوًا ۟ۙ
புழுதியைக் கிளப்பக் கூடிய (காற்றுகளின் மீது) பிறகு,
Surah 51
Adh-Dhariyat
51. ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
60 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالذّٰرِیٰتِ ذَرْوًا ۟ۙ
புழுதியைக் கிளப்பக் கூடிய (காற்றுகளின் மீது) பிறகு,
فَالْحٰمِلٰتِ وِقْرًا ۟ۙ
நீர் நிரம்பிய மேகங்களைச் சுமக்கக்கூடிய,
فَالْجٰرِیٰتِ یُسْرًا ۟ۙ
மெதுவான வேகத்தில் செல்லக்கூடிய,
فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۟ۙ
பெரும் பணியை (மழையை)ப் பகிர்ந்தளிக்கக்கூடிய காற்றுகளின் மீது சத்தியமாக!
اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۟ۙ
எது பற்றி உங்களுக்கு அச்சுறுத்தப்படுகின்றதோ அது உண்மையானதே!
وَّاِنَّ الدِّیْنَ لَوَاقِعٌ ۟ؕ
மேலும், செயல்களுக்குக் கூலி வழங்குவதென்பது அவசியம் நிகழக்கூடியதே!
وَالسَّمَآءِ ذَاتِ الْحُبُكِ ۟ۙ
பலவகையான தோற்றங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக!
اِنَّكُمْ لَفِیْ قَوْلٍ مُّخْتَلِفٍ ۟ۙ
(மறுமையைப் பற்றிய) உங்களுடைய கூற்று ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கின்றது.
یُّؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَ ۟ؕ
எவன் சத்தியத்திலிருந்து பிறழ்ந்திருக்கின்றானோ அவன் மட்டுமே அதனால் தடுமாற்றம் அடைவான்.
قُتِلَ الْخَرّٰصُوْنَ ۟ۙ
அழிந்துவிட்டார்கள்; கணிப்பு மற்றும் ஊகத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பவர்கள்!
الَّذِیْنَ هُمْ فِیْ غَمْرَةٍ سَاهُوْنَ ۟ۙ
அவர்கள் எத்தகையவர்களெனில், அறியாமையில் மூழ்கி, அலட்சியத்தினால் மதியிழந்து இருப்பவர்கள்.
یَسْـَٔلُوْنَ اَیَّانَ یَوْمُ الدِّیْنِ ۟ؕ
“கூலி கொடுக்கப்படும் அந்நாள் எப்போது வரும்?” என வினவுகின்றனர்.
یَوْمَ هُمْ عَلَی النَّارِ یُفْتَنُوْنَ ۟
இவர்கள் நெருப்பில் வதைக்கப்படும் நாளில் அது வரும்.
ذُوْقُوْا فِتْنَتَكُمْ ؕ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ۟
(அவர்களிடம் கூறப்படும்:) “இப்போது சுவையுங்கள்; உங்களுடைய வேதனையை! எதற்காக நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது.”
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ
இறையச்சம் கொண்டவர்கள் (அந்த நாளில்) திண்ணமாகத் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
اٰخِذِیْنَ مَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِیْنَ ۟ؕ
அவர்களின் அதிபதி அவர்களுக்கு அளிப்பவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அந்நாள் வருவதற்கு முன்னரே நல்லவர்களாக இருந்தார்கள்.
كَانُوْا قَلِیْلًا مِّنَ الَّیْلِ مَا یَهْجَعُوْنَ ۟
இரவு நேரங்களில் குறைவாகவே தூங்குபவர்களாகவும்
وَبِالْاَسْحَارِ هُمْ یَسْتَغْفِرُوْنَ ۟
பின்னிரவு நேரங்களில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருந்தார்கள்.
وَفِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟
மேலும், அவர்களின் செல்வங்களில் உரிமை இருந்தது, யாசிப்பவருக்கும் இல்லாதவருக்கும்!
وَفِی الْاَرْضِ اٰیٰتٌ لِّلْمُوْقِنِیْنَ ۟ۙ
உறுதியாக நம்புபவர்களுக்கு பூமியில் பல சான்றுகள் உள்ளன.
وَفِیْۤ اَنْفُسِكُمْ ؕ اَفَلَا تُبْصِرُوْنَ ۟
ஏன், உங்களிடத்திலும்கூட! உங்களுக்குப் புலப்படுவதில்லையா, என்ன?
وَفِی السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ ۟
வானத்தில்தான் இருக்கின்றன, உங்கள் வாழ்வாதாரமும், உங்களுக்கு வாக்களிக்கப்படுகின்றவையும்!
فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ ۟۠
வானம் மற்றும் பூமியினுடைய அதிபதியின் மீது ஆணையாக! திண்ணமாக, இந்த விஷயம் சத்தியமானது; நீங்கள் பேசிக் கொண்டிருப்பது எவ்வாறு உறுதியானதோ அவ்வாறே இதுவும் உறுதியானது.
هَلْ اَتٰىكَ حَدِیْثُ ضَیْفِ اِبْرٰهِیْمَ الْمُكْرَمِیْنَ ۟ۘ
(நபியே!) இப்ராஹீமிடம் வந்த கண்ணியத்துக்குரிய விருந்தாளிகளின் செய்தி உமக்குக் கிடைத்ததா?
اِذْ دَخَلُوْا عَلَیْهِ فَقَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ ۟
அவர்கள் அவரிடம் வந்தபோது, “உம்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அவர்கள் கூறினார்கள். அவர் கூறினார்: “உங்கள் மீதும் சாந்தி நிலவுக! அறிமுகமில்லாத ஆட்களாக இருக்கிறார்களே!”
فَرَاغَ اِلٰۤی اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِیْنٍ ۟ۙ
பின்னர், அவர் சந்தடியில்லாமல் தம் வீட்டாரிடம் சென்றார்; (பொரிக்கப்பட்ட) கொழுத்த காளைக்கன்றைக் கொண்டு வந்து
فَقَرَّبَهٗۤ اِلَیْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ ۟ؗ
அதனை விருந்தினர் முன்வைத்தார். பிறகு கூறினார்: “சாப்பிடாமல் இருக்கின்றீர்களே!”
فَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ ؕ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِیْمٍ ۟
பின்னர், அவர்களைக் குறித்து அவர் மனத்திற்குள் அஞ்சினார். அவர்களோ, “அஞ்சாதீர்!” என்று கூறினார்கள். மேலும், அறிவுள்ள ஒரு மகன் பிறக்கப் போவதாக அவருக்கு நற்செய்தி அறிவித்தார்கள்.
فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِیْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِیْمٌ ۟
(அதனைக் கேட்டு) அவருடைய மனைவி கூச்சலிட்டவாறு முன்னே வந்தாள்; தன் முகத்தில் அறைந்து கொண்டு கிழவி, மலடி என்று கூறினாள்.
قَالُوْا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِ ؕ اِنَّهٗ هُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟
அவர்கள் கூறினர்: “ ஆம், அவ்வாறுதான் (நடைபெறும்) என்று உன் இறைவன் கூறியுள்ளான். அவன் நுண்ணறிவாளனாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.”
قَالَ فَمَا خَطْبُكُمْ اَیُّهَا الْمُرْسَلُوْنَ ۟
இப்ராஹீம் கேட்டார்: “இறைத்தூதர்களே! நீங்கள் எந்தப் பணியை ஆற்ற அனுப்பப்பட்டுள்ளீர்கள்?”
قَالُوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمٍ مُّجْرِمِیْنَ ۟ۙ
அவர்கள் கூறினர்: “குற்றம் புரிந்த ஒரு சமுதாயத்தாரிடம் நாங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றோம்.”
لِنُرْسِلَ عَلَیْهِمْ حِجَارَةً مِّنْ طِیْنٍ ۟ۙ
சுட்ட கற்களை அவர்கள்மீது பொழிவதற்காக!
مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِیْنَ ۟
அவை வரம்பு மீறிச் செல்வோருக்காக உம் இறைவனிடத்தில் அடையாளமிடப்பட்ட கற்களாகும்.
فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِیْهَا مِنَ الْمُؤْمِنِیْنَ ۟ۚ
பின்னர், அந்த ஊரில் இருந்த இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும் நாம் வெளியேற்றினோம்.
فَمَا وَجَدْنَا فِیْهَا غَیْرَ بَیْتٍ مِّنَ الْمُسْلِمِیْنَ ۟ۚ
மேலும், அங்கு ஒரேயொரு வீட்டைத் தவிர முஸ்லிம் வீடுகள் வேறு எதையும் நாம் காணவில்லை.
وَتَرَكْنَا فِیْهَاۤ اٰیَةً لِّلَّذِیْنَ یَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِیْمَ ۟ؕ
இதன் பின்னர், நாம் அங்கு ஒரு சான்றினை விட்டு வைத்தோம், துன்புறுத்தும் வேதனைக்கு அஞ்சுகின்ற மக்களுக்காக!
وَفِیْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰی فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
மேலும், மூஸாவின் வரலாற்றில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) நாம் தெளிவான சான்றுடன் அவரை ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது
فَتَوَلّٰی بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟
அவன் தன் வலிமையின் காரணமாக செருக் குற்றுப் புறக்கணித்தான். மேலும், “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِی الْیَمِّ وَهُوَ مُلِیْمٌ ۟ؕ
இறுதியில் நாம் அவனையும் அவனுடைய படைகளையும் பிடித்தோம். அவர்கள் அனைவரையும் கடலில் எறிந்துவிட்டோம். மேலும், அவன் பழிப்புக்குரியவனாகிவிட்டான்.
وَفِیْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَیْهِمُ الرِّیْحَ الْعَقِیْمَ ۟ۚ
மேலும், ஆத் சமூகத்தினரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) அவர்கள் மீது நாம் நாசத்தை ஏற்படுத்தும் காற்றை அனுப்பினோம்.
مَا تَذَرُ مِنْ شَیْءٍ اَتَتْ عَلَیْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِیْمِ ۟ؕ
அது எந்த ஒரு பொருளின்மீது பட்டபோதிலும் அதனைச் சிதைத்து அழித்துவிட்டது.
وَفِیْ ثَمُوْدَ اِذْ قِیْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰی حِیْنٍ ۟
மேலும், ஸமூத் கூட்டத்தாரில் (உங்களுக்குச் சான்று உள்ளது.) “ஒரு குறிப்பிட்ட காலம் வரை சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டபோது;
فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَهُمْ یَنْظُرُوْنَ ۟
(இந்த எச்சரிக்கைக்குப் பிறகும்) அவர்கள் தங்கள் அதிபதியின் கட்டளையை ஆணவத்துடன் மீறினார்கள். இறுதியில், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடீரென்று உடைந்துவிழும் வேதனை ஒன்று அவர்களைப் பிடித்துக் கொண்டது.
فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِیَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِیْنَ ۟ۙ
பின்னர், அவர்களால் எழுந்து நிற்கவும் முடியவில்லை; தம்மைக் காப்பாற்றிக்கொள்ளவும் முடியவில்லை.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟۠
மேலும், இவர்கள் அனைவருக்கும் முன்பு நூஹின் சமூகத்தினரை நாம் அழித்தோம்; ஏனெனில், அவர்கள் தீய மக்களாய் இருந்தனர்.
وَالسَّمَآءَ بَنَیْنٰهَا بِاَیْىدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ ۟
வானத்தை நாம் நம் வலிமையினால் படைத்துள்ளோம்.மேலும், நாம் அதற்கான ஆற்றல் உடையவராக இருக்கின்றோம்.
وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ ۟
பூமியை நாம் விரித்திருக்கின்றோம். நாம் மிகச் சிறந்த முறையில் செம்மைப்படுத்துபவர்களாய் இருக்கின்றோம்.
وَمِنْ كُلِّ شَیْءٍ خَلَقْنَا زَوْجَیْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
மேலும், நாம் ஒவ்வொன்றையும் இணைகளாய்ப் படைத்திருக்கின்றோம். நீங்கள் இதிலிருந்து படிப்பினை பெறக்கூடும்!
فَفِرُّوْۤا اِلَی اللّٰهِ ؕ اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۚ
எனவே, ஓடி வாருங்கள், அல்லாஹ்வின் பக்கம்! நான் அவனுடைய சார்பாக உங்களுக்குத் தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்.
وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ ؕ اِنِّیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
அல்லாஹ்வுடன் வேறு எந்தக் கடவுளையும் ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனுடைய சார்பில் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்!
كَذٰلِكَ مَاۤ اَتَی الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ ۟ۚ
இப்படித்தான் நடந்துகொண்டு வருகின்றது. இவர்களுக்கு முன்னிருந்த சமூகத்தாரிடம் எந்த ஓர் இறைத்தூதர் வந்தாலும் அவரை அம்மக்கள் “இவர் ஒரு சூனியக்காரர் அல்லது பைத்தியக்காரர்” என்றுதான் கூறினார்கள்.
اَتَوَاصَوْا بِهٖ ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ
இவர்கள் அனைவரும் இது தொடர்பாக தமக்குள் ஏதேனும் ஒப்பந்தம் செய்துகொண்டார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இவர்கள் வரம்புமீறிச் செல்கின்ற மக்களாவர்.
فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ ۟
ஆகவே (நபியே!) இவர்களை விட்டு முகம் திருப்பிக் கொள்ளும். நீர் பழிப்புக்குரியவரல்லர்.
وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰی تَنْفَعُ الْمُؤْمِنِیْنَ ۟
ஆயினும், அறிவுரை கூறிக்கொண்டிருப்பீராக! ஏனெனில், அறிவுரை இறைநம்பிக்கை கொள்வோருக்குப் பயனளிக்கக் கூடியதாகும்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ ۟
நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை.
مَاۤ اُرِیْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِیْدُ اَنْ یُّطْعِمُوْنِ ۟
நான் அவர்களிடமிருந்து எந்த வாழ்வாதாரத்தையும் நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளித்திட வேண்டுமென்றும் நான் நாடவில்லை.
اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِیْنُ ۟
நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனாகவும், பெரும் ஆற்றலுடையவனாகவும், வலிமைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
فَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا یَسْتَعْجِلُوْنِ ۟
இவர்களுக்கு முன்னிருந்த கொடுமைக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட வேதனையின் பங்கு போலவே, இந்தக் கொடுமைக்காரர்களுக்கும், அவர்களுடைய வேதனை தயாராக இருக்கின்றது. அதற்காக இவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.
فَوَیْلٌ لِّلَّذِیْنَ كَفَرُوْا مِنْ یَّوْمِهِمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟۠
நிராகரிப்பாளர்களுக்கு இறுதியில் எந்த நாளைக் குறித்து அவர்களுக்கு அச்சுறுத்தப்பட்டு வருகின்றதோ, அந்த நாளில் மாபெரும் அழிவு இருக்கின்றது.