سَاَلَ سَآىِٕلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۟ۙ
கேட்கக்கூடியவர் வேதனையைக் கேட்டிருக்கிறார். (அந்த வேதனை) நிச்சயம் நிகழக்கூடியதாகும்,
Surah 70
Al-Maarij
70. ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்)
44 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
سَاَلَ سَآىِٕلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ ۟ۙ
கேட்கக்கூடியவர் வேதனையைக் கேட்டிருக்கிறார். (அந்த வேதனை) நிச்சயம் நிகழக்கூடியதாகும்,
لِّلْكٰفِرِیْنَ لَیْسَ لَهٗ دَافِعٌ ۟ۙ
நிராகரிப்பாளர்களுக்கு! அதனைத் தடுத்து நிறுத்துபவர் எவரும் இல்லை.
مِّنَ اللّٰهِ ذِی الْمَعَارِجِ ۟ؕ
ஏறிச்செல்லும் படிகளின் உரிமையாளனாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உள்ளதாகும்.
تَعْرُجُ الْمَلٰٓىِٕكَةُ وَالرُّوْحُ اِلَیْهِ فِیْ یَوْمٍ كَانَ مِقْدَارُهٗ خَمْسِیْنَ اَلْفَ سَنَةٍ ۟ۚ
வானவர்களும் ரூஹும்* அவனிடம் அந்நாளில் ஏறிச் செல்கின்றனர். அந்நாளின் அளவு ஐம்பதாயிரம் ஆண்டுகளாகும்.
فَاصْبِرْ صَبْرًا جَمِیْلًا ۟
(நபியே!) பொறுமையை மேற்கொள்ளும்; அழகிய பொறுமையை!
اِنَّهُمْ یَرَوْنَهٗ بَعِیْدًا ۟ۙ
இவர்கள் அதனை வெகு தொலைவில் இருப்பதாகக் கருதுகின்றார்கள்.
وَّنَرٰىهُ قَرِیْبًا ۟ؕ
நாம் அது அருகில் இருப்பதைப் பார்க்கின்றோம்.
یَوْمَ تَكُوْنُ السَّمَآءُ كَالْمُهْلِ ۟ۙ
(அந்த வேதனை ஏற்படும்) அந்நாளில் வானம், உருகிய வெள்ளியைப் போன்றும்
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ ۟ۙ
மலைகள், கடையப்பட்ட வண்ணக் கம்பளியைப் போன்றும் ஆகிவிடும்.
وَلَا یَسْـَٔلُ حَمِیْمٌ حَمِیْمًا ۟ۚۖ
மேலும், அன்று எந்த உற்ற நண்பனும் தன்னுடைய நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்.
یُّبَصَّرُوْنَهُمْ ؕ یَوَدُّ الْمُجْرِمُ لَوْ یَفْتَدِیْ مِنْ عَذَابِ یَوْمِىِٕذٍ بِبَنِیْهِ ۟ۙ
ஆனால், அவர்கள் ஒருவர் மற்றவருக்குக் காண்பிக்கப்படுவார்கள். குற்றவாளி அந்நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காகத் தன் பிள்ளைகளையும்,
وَصَاحِبَتِهٖ وَاَخِیْهِ ۟ۙ
தன் மனைவியையும், சகோதரனையும்,
وَفَصِیْلَتِهِ الَّتِیْ تُـْٔوِیْهِ ۟ۙ
தனக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த மிக நெருங்கிய குடும்பத்தையும்,
وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ ثُمَّ یُنْجِیْهِ ۟ۙ
ஏன் பூமியிலுள்ள அனைவரையுமே ஈடாகக் கொடுத்துவிட வேண்டும் என்றும், இது அவனுக்கு ஈடேற்றம் அளித்திட வேண்டும் என்றும் விரும்புவான்.
كَلَّا ؕ اِنَّهَا لَظٰی ۟ۙ
ஒருபோதுமில்லை; அது சீறியெழுந்து எரியும் தீப்பிழம்பாகும்.
نَزَّاعَةً لِّلشَّوٰی ۟ۚۖ
அது தோலையும் சதையையும் பொசுக்கிவிடும்.
تَدْعُوْا مَنْ اَدْبَرَ وَتَوَلّٰی ۟ۙ
எந்த மனிதன் சத்தியத்தைப் புறக்கணித்து, புறங்காட்டிச் சென்றானோ ;
وَجَمَعَ فَاَوْعٰی ۟
மேலும் செல்வத்தைச் சேர்த்தானோ இன்னும் கஞ்சத்தனமாக தன்னிடம் தடுத்து வைத்தானோ அத்தகைய ஒவ்வொருவனையும் அது ‘வா வா’ என்று அழைக்கும்.
اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۟ۙ
மனிதன் பதற்றக்காரனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான்.
اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۟ۙ
ஒரு துன்பம் அவனுக்கு வந்தால், பொறுமையிழந்து போகின்றான்.
وَّاِذَا مَسَّهُ الْخَیْرُ مَنُوْعًا ۟ۙ
ஆனால் அவனுக்கு வசதி வாய்ப்புகள் ஏற்படும்போது கஞ்சத்தனம் செய்யத் தலைப்படுகின்றான்.
اِلَّا الْمُصَلِّیْنَ ۟ۙ
ஆயினும் தொழுகையாளிகள் (இத்தகைய தவறுகளில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள்).
الَّذِیْنَ هُمْ عَلٰی صَلَاتِهِمْ دَآىِٕمُوْنَ ۟
அவர்களோ தொழுகையை நிரந்தரமாக நிறைவேற்றுகிறார்கள்.
وَالَّذِیْنَ فِیْۤ اَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُوْمٌ ۟
அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட உரிமை இருக்கிறது.
لِّلسَّآىِٕلِ وَالْمَحْرُوْمِ ۟
யாசிப்பவருக்கும், இல்லாதாருக்கும்;
وَالَّذِیْنَ یُصَدِّقُوْنَ بِیَوْمِ الدِّیْنِ ۟
அவர்கள் கூலி வழங்கும் நாளினை உண்மையென ஏற்றுக்கொள்கிறார்கள்.
وَالَّذِیْنَ هُمْ مِّنْ عَذَابِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ ۟ۚ
மேலும், தங்களுடைய இறைவனின் வேதனைக்கு அஞ்சுகிறார்கள்.
اِنَّ عَذَابَ رَبِّهِمْ غَیْرُ مَاْمُوْنٍ ۟
ஏனெனில், அவர்களுடைய இறைவனின் வேதனை எவரும் அஞ்சாமல் இருக்கக்கூடியதல்ல.
وَالَّذِیْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَ ۟ۙ
அவர்கள் தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கிறார்கள்;
اِلَّا عَلٰۤی اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُمْ فَاِنَّهُمْ غَیْرُ مَلُوْمِیْنَ ۟ۚ
அவர்களுடைய மனைவியரிடமோ அடிமைப் பெண்களிடமோ தவிர! அவ்வாறு அவர்களிடம் அவற்றைப் பாதுகாக்காமல் இருப்பதால் அவர்கள் பழிப்புக்குரியவர்கள் அல்லர்.
فَمَنِ ابْتَغٰی وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۟ۚ
ஆயினும் அதற்கு மேலும் எவர்கள் விரும்புகின்றார்களோ அவர்கள்தாம் வரம்புமீறுகிறவர்கள் ஆவர்.
وَالَّذِیْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رٰعُوْنَ ۟
அவர்கள் தங்களிடம் உள்ள அமானிதப் பொருள்களைப் பாதுகாக்கிறார்கள். தாங்கள் செய்த ஒப்பந்தங்களைப் பேணி நடக்கவும் செய்கிறார்கள்.
وَالَّذِیْنَ هُمْ بِشَهٰدٰتِهِمْ قَآىِٕمُوْنَ ۟
மேலும் தங்களுடைய சாட்சியங்களில் நேர்மையாக நிலைத்திருக்கிறார்கள்.
وَالَّذِیْنَ هُمْ عَلٰی صَلَاتِهِمْ یُحَافِظُوْنَ ۟ؕ
மேலும் தங்களுடைய தொழுகைகளைப் பேணிக் காக்கிறார்கள்.
اُولٰٓىِٕكَ فِیْ جَنّٰتٍ مُّكْرَمُوْنَ ۟ؕ۠
இத்தகையவர்கள்தாம் சுவனத் தோட்டங்களில் கண்ணியத்துடன் தங்கி வாழ்பவர்கள்.
فَمَالِ الَّذِیْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِیْنَ ۟ۙ
(நபியே) என்ன விஷயம்? இந்நிராகரிப்பாளர்கள் உம்மை நோக்கி ஓடிவருகின்றார்களே,
عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ عِزِیْنَ ۟
வலப்பக்கத்திலிருந்தும் இடப்பக்கத்திலிருந்தும் கூட்டம் கூட்டமாக.
اَیَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ اَنْ یُّدْخَلَ جَنَّةَ نَعِیْمٍ ۟ۙ
இவர்கள் ஒவ்வொருவரும் அருள்நிறைந்த சுவனத்தில் தாம் நுழைவிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனரா?
كَلَّا ؕ اِنَّا خَلَقْنٰهُمْ مِّمَّا یَعْلَمُوْنَ ۟
ஒருபோதும் நடக்காது! நாம் எப்பொருளிலிருந்து அவர்களைப் படைத்தோமோ அதை அவர்களே அறிந்திருக்கிறார்கள்.
فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَ ۟ۙ
அவ்வாறில்லை. நான் சத்தியம் செய்கின்றேன். கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளின் அதிபதியின் மீது!
عَلٰۤی اَنْ نُّبَدِّلَ خَیْرًا مِّنْهُمْ ۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِیْنَ ۟
இவர்களுக்குப் பகரமாக இவர்களைவிட சிறந்தவர்களைக் கொண்டு வருவதற்கு நாம் ஆற்றல் பெற்றுள்ளோம். மேலும் நம்மை வெற்றி கொள்ளக்கூடியவர் எவரும் இல்லை!
فَذَرْهُمْ یَخُوْضُوْا وَیَلْعَبُوْا حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟ۙ
எனவே இவர்களை இவர்களுடைய அபத்தமான பேச்சுக்களிலும் விளையாட்டிலும் வீழ்ந்து கிடக்குமாறு நீர் விட்டுவிடும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளினை இவர்கள் அடையும் வரை!
یَوْمَ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ سِرَاعًا كَاَنَّهُمْ اِلٰی نُصُبٍ یُّوْفِضُوْنَ ۟ۙ
இவர்கள் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளி யேறி ஓடிக்கொண்டிருக்கும் நாளில் தங்கள் தெய்வச் சிலைகளின் ஆலயங்களை நோக்கி விரைவாக ஓடுவதைப்போல;
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ ذٰلِكَ الْیَوْمُ الَّذِیْ كَانُوْا یُوْعَدُوْنَ ۟۠
இவர்களின் பார்வைகள் தாழ்ந்துவிட்டிருக்கும்; இழிவு இவர்களைக் கவ்வியிருக்கும்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்தது அந்நாளே ஆகும்.