All Surahs

Surah 72

الجن

Al-Jinn

72. ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்)

28 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

قُلْ اُوْحِیَ اِلَیَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْۤا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًا عَجَبًا ۟ۙ

(நபியே!) நீர் கூறும்: எனக்கு இவ்வாறு வஹி* அனுப்பப்பட்டிருக்கின்றது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர். பின்னர் (தம் சமூக மக்களிடம் சென்று) கூறினர்: “நாங்கள் மிகவும் அற்புதமானதொரு குர்ஆனைச் செவியுற்றோம்.

2

یَّهْدِیْۤ اِلَی الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖ ؕ وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا ۟ۙ

அது நேரிய பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றது. ஆகையால், நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டோம். மேலும், நாங்கள் எங்களுடைய இறைவனுடன் எவரையும் இணையாக்கமாட்டோம்.

3

وَّاَنَّهٗ تَعٰلٰی جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۟ۙ

மேலும், எங்களுடைய இறைவனின் மாட்சிமை மிகவும் உயர்ந்தது; உன்னதமானது. அவன் எவரையும் மனைவியாகவோ, மகனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை.

4

وَّاَنَّهٗ كَانَ یَقُوْلُ سَفِیْهُنَا عَلَی اللّٰهِ شَطَطًا ۟ۙ

மேலும், நம்மிலுள்ள அறிவிலிகள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்குப் புறம்பான பல விஷயங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

5

وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَی اللّٰهِ كَذِبًا ۟ۙ

மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் பொய் சொல்ல முடியாது என்று நாங்கள் கருதியிருந்தோம்.

6

وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ یَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۟ۙ

மேலும், மனிதர்களில் சிலர் சில ஜின்களிடம் பாதுகாவல் கோரக் கூடியவர்களாய் இருந்தனர். இவ்வாறு செய்து அவர்கள் ஜின்களின் ஆணவத்தை இன்னும் அதிகமாக்கிவிட்டார்கள்.

7

وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ یَّبْعَثَ اللّٰهُ اَحَدًا ۟ۙ

மேலும், மனிதர்களும் நீங்கள் நினைத்திருந்தது போன்றுதான் நினைத்திருந்தார்கள்;

8

وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِیْدًا وَّشُهُبًا ۟ۙ

அல்லாஹ் எவரையும் தூதராக அனுப்பமாட்டான் என்று! மேலும், நாங்கள் வானத்தைத் துளாவிப் பார்த்தோம்.

9

وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ؕ فَمَنْ یَّسْتَمِعِ الْاٰنَ یَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًا ۟ۙ

அது பலமான காவலர்களால் நிரப்பப்பட்டிருப்பதையும் எரி நட்சத்திரங்கள் பொழிந்து கொண்டிருப்பதையும் கண்டோம். மேலும், இதற்கு முன் ஒட்டுக் கேட்பதற்கு வானத்தில் அமர்விடங்கள் நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது யாரேனும் ஒட்டுக் கேட்க முயன்றால் ஓர் எரிநட்சத்திரம் அவருக்காகக் குறி வைத்துக் காத்திருப்பதைக் காண்கின்றார்.”

10

وَّاَنَّا لَا نَدْرِیْۤ اَشَرٌّ اُرِیْدَ بِمَنْ فِی الْاَرْضِ اَمْ اَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا ۟ۙ

மேலும், (கூறினார்:) “பூமியிலுள்ளவர்களுக்கு ஏதேனும் தீமை நாடப்பட்டுள்ளதா அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நேர்வழி காட்ட விரும்புகின்றானா என்பதை நாம் அறியோம்.

11

وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوْنَ وَمِنَّا دُوْنَ ذٰلِكَ ؕ كُنَّا طَرَآىِٕقَ قِدَدًا ۟ۙ

மேலும், நம்மில் சில நல்லவர்களும் இருக்கின்றனர். அவ்வாறு அல்லாதோரும் இன்னும் சிலர் நம்மில் இருக்கின்றனர்.

12

وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ نُّعْجِزَ اللّٰهَ فِی الْاَرْضِ وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًا ۟ۙ

நாம் பல வழிகளில் பிளவுண்டு கிடக்கின்றோம். மேலும், நம்மால் பூமியில் அல்லாஹ்வை வென்றிட முடியாது என்பதையும், எங்கேனும் ஓடிச் சென்று அவனைத் தோல்வியுறச் செய்திட முடியாது என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம்.

13

وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰۤی اٰمَنَّا بِهٖ ؕ فَمَنْ یُّؤْمِنْ بِرَبِّهٖ فَلَا یَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًا ۟ۙ

மேலும், நேர்வழி காட்டும் அறிவுரையை நாங்கள் கேள்விப்பட்டபோது அதன் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இனி, எவரேனும் தன்னுடைய இறைவன் மீது நம்பிக்கை கொள்வாராயின் அவருக்கு இழப்பு அல்லது அநீதி பற்றி எந்த அச்சமும் இருக்காது.

14

وَّاَنَّا مِنَّا الْمُسْلِمُوْنَ وَمِنَّا الْقٰسِطُوْنَ ؕ فَمَنْ اَسْلَمَ فَاُولٰٓىِٕكَ تَحَرَّوْا رَشَدًا ۟

மேலும், நம்மில் சிலர் முஸ்லிம்களாயும் (அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவர்களாயும்) வேறு சிலர் சத்தியத்திலிருந்து பிறழ்ந்தவர்களாயும் உள்ளனர். எவர்கள் இஸ்லாத்தை (இறைவனுக்குக் கீழ்ப்படியும் மார்க்கத்தை) தேர்ந்தெடுத்துக் கொண்டார்களோ அவர்கள் ஈடேற்றத்தின் பாதையை தேடிப் பெற்றுக் கொண்டனர்.

15

وَاَمَّا الْقٰسِطُوْنَ فَكَانُوْا لِجَهَنَّمَ حَطَبًا ۟ۙ

ஆனால், எவர்கள் சத்தியத்திலிருந்து விலகிக் கொண்டார்களோ, அவர்கள் நரகத்தின் எரிபொருள்களாய் ஆகிவிட்டார்கள்.”

16

وَّاَنْ لَّوِ اسْتَقَامُوْا عَلَی الطَّرِیْقَةِ لَاَسْقَیْنٰهُمْ مَّآءً غَدَقًا ۟ۙ

மேலும், (நபியே! நீர் கூறும்: “இன்னும் எனக்கு வஹி அனுப்பப்பட்டிருப்பது என்னவெனில்) மக்கள் நேர்வழியில் நிலைகுலையாமல் இருந்திருந்தால் நாம் அவர்களுக்கு மழையை தாராளமாகப் பொழியச் செய்திருப்போம்.

17

لِّنَفْتِنَهُمْ فِیْهِ ؕ وَمَنْ یُّعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهٖ یَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ۟ۙ

இந்த அருட்கொடையின் மூலம் அவர்களைச் சோதிப்பதற்காக! மேலும், எவரேனும் தன்னுடைய இறைவனின் அறிவுரையைப் புறக்கணித்தால் அவரை அவருடைய இறைவன் கடுமையான வேதனையில் ஆழ்த்தி விடுவான்.

18

وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۟ۙ

மேலும், மஸ்ஜித்கள் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். எனவே, அங்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அழைக்காதீர்கள்”

19

وَّاَنَّهٗ لَمَّا قَامَ عَبْدُ اللّٰهِ یَدْعُوْهُ كَادُوْا یَكُوْنُوْنَ عَلَیْهِ لِبَدًا ۟ؕ۠

அல்லாஹ்வின் அடியார் அவனை அழைப்பதற்காக எழுந்து நின்றபோது மக்கள் அவர் மீது பாய முனைந்துவிட்டார்கள்.

20

قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّیْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا ۟

(நபியே!) நீர் கூறும்: “நான் என் இறைவனையே அழைக்கின்றேன். மேலும், அவனுடன் யாரையும் நான் இணையாக்குவதில்லை.”

21

قُلْ اِنِّیْ لَاۤ اَمْلِكُ لَكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا ۟

கூறும்: “உங்களுக்கு ஏதேனும் தீமையோ, நன்மையோ செய்திடும் ஆற்றல் எனக்கில்லை.”

22

قُلْ اِنِّیْ لَنْ یُّجِیْرَنِیْ مِنَ اللّٰهِ اَحَدٌ ۙ۬ وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۟ۙ

கூறும்: “அல்லாஹ்வின் பிடியிலிருந்து எவராலும் என்னைக் காப்பாற்ற முடியாது. மேலும், அவனைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் என்னால் பெற முடியாது.

23

اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ ؕ وَمَنْ یَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ۟ؕ

அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவனுடைய தூதுச் செய்திகளையும் சேர்ப்பித்து விடுவதைத் தவிர வேறு எந்தப் பணியும் எனக்கில்லை.” இனி, எவரேனும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தால் திண்ணமாக அவருக்கு நரக நெருப்பு இருக்கின்றது. மேலும் இப்படிப்பட்டவர்கள் அதில் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.

24

حَتّٰۤی اِذَا رَاَوْا مَا یُوْعَدُوْنَ فَسَیَعْلَمُوْنَ مَنْ اَضْعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا ۟

இந்த மக்கள் தங்களுடைய நடத்தையைக் கைவிட மாட்டார்கள்; எதுவரையெனில், அவர்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயத்தை அவர்கள் நேரில் காணும் வரை! அப்போது, எவருடைய உதவியாளர்கள் பலவீனர்கள், எவருடைய கூட்டம் எண்ணிக்கையில் குறைவானது என்பதை அவசியம் அறிந்துகொள்வார்கள்.

25

قُلْ اِنْ اَدْرِیْۤ اَقَرِیْبٌ مَّا تُوْعَدُوْنَ اَمْ یَجْعَلُ لَهٗ رَبِّیْۤ اَمَدًا ۟

மேலும், கூறும்: “உங்களுக்கு வாக்களிக்கப்படும் விஷயம் அண்மையில் உள்ளதா அல்லது என் இறைவன் அதற்கென நீண்டதொரு காலத்தை நிர்ணயித்துள்ளானா என்பதை நான் அறியேன்.

26

عٰلِمُ الْغَیْبِ فَلَا یُظْهِرُ عَلٰی غَیْبِهٖۤ اَحَدًا ۟ۙ

அவன் மறைவானவற்றை அறிந்தவன். தான் மறைவாக வைத்திருப்பவற்றை எவருக்கும் அறிவித்துக் கொடுப்பதில்லை.

27

اِلَّا مَنِ ارْتَضٰی مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ یَسْلُكُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۟ۙ

அவன் விரும்பிய தூதருக்கே தவிர! பிறகு, அவருக்கு முன்பும் பின்பும் பாதுகாவலரை நியமிக்கின்றான்;

28

لِّیَعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَیْهِمْ وَاَحْصٰی كُلَّ شَیْءٍ عَدَدًا ۟۠

அந்தத் தூதர்கள் தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளைச் சேர்ப்பித்துவிட்டார்கள் என்பதை அவன் அறிந்துகொள்வதற்காக! மேலும், அவன் அவர்களிடம் உள்ளவை அனைத்தையும் சூழ்ந்து அறிந்திருக்கின்றான். மேலும், ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக் கணக்கிட்டு வைத்துள்ளான்.

PreviousNuhNextAl-Muzzammil

0:00–:––