All Surahs

Surah 84

الانشقاق

Al-Inshiqaq

84. ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)

25 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اِذَا السَّمَآءُ انْشَقَّتْ ۟ۙ

வானம் பிளக்கின்றபோது

2

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ۙ

மேலும், அது தன்னுடைய அதிபதியின் கட்டளையை செயல்படுத்தும்போது, இது(தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும்.

3

وَاِذَا الْاَرْضُ مُدَّتْ ۟ؕ

மேலும், பூமி பரப்பப்பட்டு விடும்போது

4

وَاَلْقَتْ مَا فِیْهَا وَتَخَلَّتْ ۟ۙ

இன்னும், அது தன்னுள் இருப்பவை அனைத்தையும் வெளியில் எறிந்துவிட்டு, ஏதுமற்றதாய் ஆகிவிடும்போது

5

وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ؕ

மேலும், அது தன் அதிபதியின் கட்டளையைச் செயல்படுத்தும்போது, இது (தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும்.

6

یٰۤاَیُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰی رَبِّكَ كَدْحًا فَمُلٰقِیْهِ ۟ۚ

“மனிதனே! நீ இடைவிடாமல் பாடுபட்டு உன் இறைவனின் பக்கம் சென்று கொண்டிருப்பவனாகவும் அவனை நீ சந்திக்கக் கூடியவனாகவும் இருக்கின்றாய்.

7

فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۟ۙ

எவருடைய வினைப்பட்டியல் அவர் வலக்கையில் கொடுக்கப்படுமோ

8

فَسَوْفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیْرًا ۟ۙ

அவரிடம் எளிதான கணக்கு வாங்கப்படும்.

9

وَّیَنْقَلِبُ اِلٰۤی اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ

மேலும், அவர் தம் குடும்பத்தாரை நோக்கி மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வார்.

10

وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖ ۟ۙ

ஆனால், எவனுடைய வினைப்பட்டியல் அவன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுமோ

11

فَسَوْفَ یَدْعُوْا ثُبُوْرًا ۟ۙ

அவன் மரணத்தை அழைப்பான்.

12

وَّیَصْلٰی سَعِیْرًا ۟ؕ

பிறகு, கொழுந்து விட்டெரியும் நரகத்தில் போய் வீழ்வான்.

13

اِنَّهٗ كَانَ فِیْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ

அவன் தன்னுடைய குடும்பத்தாரிடம் இன்பத்தில் மூழ்கியிருந்தான்.

14

اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ یَّحُوْرَ ۟ۚۛ

(தன்னுடைய இறைவனின் பக்கம்) ஒருபோதும் திரும்பி வர வேண்டியதில்லை என்று அவன் கருதியிருந்தான்.

15

بَلٰۤی ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِیْرًا ۟ؕ

ஏன் திரும்பி வர வேண்டியதில்லை? அவனுடைய இறைவன் அவனுடைய இழிசெயல்களைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தான்!

16

فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِ ۟ۙ

அவ்வாறில்லை! அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீதும்,

17

وَالَّیْلِ وَمَا وَسَقَ ۟ۙ

இரவின் மீதும், மேலும், அது ஒன்றுதிரட்டி வைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும்

18

وَالْقَمَرِ اِذَا اتَّسَقَ ۟ۙ

மேலும், முழுமையாய் மலர்ந்து விடும் சந்திரன் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.

19

لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ ۟ؕ

திண்ணமாக, நீங்கள் படிப்படியாய் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.

20

فَمَا لَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ

பிறகு, இம்மக்களுக்கு என்ன நேர்ந்தது? நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே!

21

وَاِذَا قُرِئَ عَلَیْهِمُ الْقُرْاٰنُ لَا یَسْجُدُوْنَ ۟

மேலும், இவர்களின் முன்னிலையில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இவர்கள் ஸஜ்தா* செய்வதுமில்லையே!

22

بَلِ الَّذِیْنَ كَفَرُوْا یُكَذِّبُوْنَ ۟ؗۖ

மாறாக, இந்த நிராகரிப்பாளர்களோ பொய்யெனத் தூற்றுகின்றார்கள்.

23

وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یُوْعُوْنَ ۟ؗۖ

உண்மையில், இவர்கள் (தம் வினைச்சுவடிகளில்) சேர்த்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ் நன்கறிகின்றான்.

24

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ

எனவே, இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைக்கான “நற்செய்தியை” அறிவித்துவிடுவீராக!

25

اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நற்செயல்கள் செய்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கிறது.

PreviousAl-MutaffifinNextAl-Buruj

0:00–:––