All Surahs

Surah 29

العنكبوت

Al-Ankabut

29. ஸூரத்துல் அன்கபூத் (சிலந்திப் பூச்சி)

69 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

الٓمّٓ ۟ۚ

அலிஃப், லாம், மீம்.

2

اَحَسِبَ النَّاسُ اَنْ یُّتْرَكُوْۤا اَنْ یَّقُوْلُوْۤا اٰمَنَّا وَهُمْ لَا یُفْتَنُوْنَ ۟

“நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று மட்டும் கூறுவதனால் விட்டு விடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா, என்ன?

3

وَلَقَدْ فَتَنَّا الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَلَیَعْلَمَنَّ اللّٰهُ الَّذِیْنَ صَدَقُوْا وَلَیَعْلَمَنَّ الْكٰذِبِیْنَ ۟

உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கின்றோம். அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்பதை!

4

اَمْ حَسِبَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ اَنْ یَّسْبِقُوْنَا ؕ سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟

தீமைகளைச் செய்வோர், நம்மை மிகைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்களா, என்ன? அவர்கள் எடுக்கும் தீர்மானம் மிகவும் மோசமானதாகும்.

5

مَنْ كَانَ یَرْجُوْا لِقَآءَ اللّٰهِ فَاِنَّ اَجَلَ اللّٰهِ لَاٰتٍ ؕ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்த்திருப்பவர்கள் (தெரிந்துகொள்ள வேண்டும்:) அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்தே தீரும். மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

6

وَمَنْ جَاهَدَ فَاِنَّمَا یُجَاهِدُ لِنَفْسِهٖ ؕ اِنَّ اللّٰهَ لَغَنِیٌّ عَنِ الْعٰلَمِیْنَ ۟

எவன் ஜிஹாத் செய்கின்றானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அதனை செய்கின்றான். திண்ணமாக, உலக மக்களை விட்டு அல்லாஹ் தேவைகள் அற்றவன்.

7

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَنَجْزِیَنَّهُمْ اَحْسَنَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟

மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களின் தீமைகளை நாம் களைந்துவிடுவோம். மேலும், நாம் அவர்களுக்கு அவர்களின் அழகிய செயல்களுக்குரிய கூலியையும் வழங்குவோம்.

8

وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ حُسْنًا ؕ وَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِیْ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ؕ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

தன்னுடைய தாய் தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். ஆனால், எதை (அதாவது, எந்தக் கடவுள் எனக்கு இணையானது என்பதை) நீ அறிய மாட்டாயோ அதனை எனக்கு இணையாக்கும்படி அவர்கள் (பெற்றோர்) உன்னை வற்புறுத்தினாலோ அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே. என்னிடம்தான் நீங்கள் அனைவரும் திரும்பி வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருந்தீர்களோ அவற்றை நான் உங்களுக்கு அறிவிப்பேன்.

9

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِی الصّٰلِحِیْنَ ۟

மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்திருப்பார்களோ அவர்களை நாம் திண்ணமாக, சான்றோர்களுடன் சேர்த்துவிடுவோம்.

10

وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِیَ فِی اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ ؕ وَلَىِٕنْ جَآءَ نَصْرٌ مِّنْ رَّبِّكَ لَیَقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْ ؕ اَوَلَیْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِیْ صُدُوْرِ الْعٰلَمِیْنَ ۟

மனிதர்களில் சிலர் உள்ளனர். “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டோம்” என்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய விஷயத்தில் அவர்கள் துன்புறுத்தப்பட்டால் மக்கள் தரும் இந்தச் சோதனையை அல்லாஹ்வுடைய தண்டனை போன்று கருதிவிடுகின்றார்கள். ஆனால், உம்முடைய இறைவனிடமிருந்து வெற்றியும் உதவியும் வந்துவிடுமாயின், இவர்களே கூறுவார்கள், “திண்ணமாக நாங்கள் உங்களுடன்தானே இருந்தோம்” என்று! உலக மக்களின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனன்றோ?

11

وَلَیَعْلَمَنَّ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَلَیَعْلَمَنَّ الْمُنٰفِقِیْنَ ۟

மேலும், அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; நம்பிக்கை கொண்டவர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்பதை!

12

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوا اتَّبِعُوْا سَبِیْلَنَا وَلْنَحْمِلْ خَطٰیٰكُمْ ؕ وَمَا هُمْ بِحٰمِلِیْنَ مِنْ خَطٰیٰهُمْ مِّنْ شَیْءٍ ؕ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟

இந்நிராகரிப்பாளர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம் “நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றுங்கள்; உங்களுடைய பாவங்களை நாங்கள் சுமந்து கொள்கின்றோம்” என்று கூறுகின்றார்கள். உண்மை யாதெனில், அவர்களின் பாவங்களிலிருந்து சிறிதளவுகூட இவர்கள் சுமந்து கொள்ளக் கூடியவர்களல்லர். நிச்சயமாக இவர்கள் பொய் சொல்கின்றார்கள்.

13

وَلَیَحْمِلُنَّ اَثْقَالَهُمْ وَاَثْقَالًا مَّعَ اَثْقَالِهِمْ ؗ وَلَیُسْـَٔلُنَّ یَوْمَ الْقِیٰمَةِ عَمَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠

ஆம்! இவர்கள் தங்களுடைய சுமைகளையும் சுமப்பார்கள்; தங்கள் சுமைகளுடன் வேறு பல சுமைகளையும் சுமப்பார்கள். மேலும், இவர்கள் புனைந்துரைக்கின்றவற்றைப் பற்றி மறுமை நாளில் திண்ணமாக விசாரிக்கப்படுவார்கள்.

14

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَلَبِثَ فِیْهِمْ اَلْفَ سَنَةٍ اِلَّا خَمْسِیْنَ عَامًا ؕ فَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ ۟

நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் ஆண்டுகள் அவர்களிடையே வாழ்ந்தார். இறுதியில் அவர்கள் கொடுமை புரிந்து கொண்டிருக்கவே வெள்ளப் பிரளயம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

15

فَاَنْجَیْنٰهُ وَاَصْحٰبَ السَّفِیْنَةِ وَجَعَلْنٰهَاۤ اٰیَةً لِّلْعٰلَمِیْنَ ۟

பின்னர் நூஹையும், கப்பலில் ஏறியவர்களையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். மேலும், அதனை உலகத்தார் அனைவர்க்கும் ஒரு படிப்பினைக்குரிய சான்றாக்கிவிட்டோம்.

16

وَاِبْرٰهِیْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟

மேலும், இப்ராஹீமை நாம் அனுப்பினோம். அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். மேலும், அவனுக்கு அஞ்சுங்கள். நீங்கள் அறிந்துகொள்வீர்களாயின், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

17

اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا ؕ اِنَّ الَّذِیْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا یَمْلِكُوْنَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ ؕ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟

அல்லாஹ்வை விடுத்து நீங்கள் பூஜிப்பவை அனைத்தும் வெறும் சிலைகள்தாம்! மேலும், நீங்கள் பொய்யை இட்டுக் கட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். அல்லாஹ்வை விடுத்து யாரையெல்லாம் நீங்கள் வழிபடுகின்றீர்களோ அவர்கள் உண்மையில் உங்களுக்கு எந்த ஓர் உணவையும் அளிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. உணவை அல்லாஹ்விடமே கேளுங்கள். மேலும், அவனுக்கே அடிபணியுங்கள்; மேலும், அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.

18

وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْ ؕ وَمَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟

மேலும், நீங்கள் பொய்யென வாதிட்டால், உங்களுக்கு முன்னர் பல சமூகங்கள் பொய்யென வாதிட்டிருக்கின்றன. மேலும், தூதைத் தெளிவுற எடுத்துரைப்பதைத் தவிர தூதர் மீது வேறெந்தப் பொறுப்புமில்லை.”

19

اَوَلَمْ یَرَوْا كَیْفَ یُبْدِئُ اللّٰهُ الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟

அல்லாஹ் எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, அல்லாஹ்வுக்கு எளிதானதாகும்.

20

قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ بَدَاَ الْخَلْقَ ثُمَّ اللّٰهُ یُنْشِئُ النَّشْاَةَ الْاٰخِرَةَ ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟ۚ

இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், அல்லாஹ் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன்.

21

یُعَذِّبُ مَنْ یَّشَآءُ وَیَرْحَمُ مَنْ یَّشَآءُ ۚ وَاِلَیْهِ تُقْلَبُوْنَ ۟

தான் நாடுபவர்களைத் தண்டிப்பான்; தான் நாடுவோர்க்குக் கருணை புரிவான். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.

22

وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ؗ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟۠

பூமியிலும் வானத்திலும் நீங்கள் அவனை இயலாமையில் ஆக்கக்கூடியவர்கள் அல்லர். அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றக்கூடிய எந்த ஒரு பொறுப்பாளரும் உதவியாளரும் உங்களுக்கு இல்லை!

23

وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ وَلِقَآىِٕهٖۤ اُولٰٓىِٕكَ یَىِٕسُوْا مِنْ رَّحْمَتِیْ وَاُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களையும் அவனை சந்திப்பதையும் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் என்னுடைய அருளிலிருந்து நிராசை அடைந்துவிட்டிருக்கின்றார்கள். மேலும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு இருக்கின்றது.

24

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا اقْتُلُوْهُ اَوْ حَرِّقُوْهُ فَاَنْجٰىهُ اللّٰهُ مِنَ النَّارِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟

பிறகு, இப்ராஹீமுடைய சமூகத்தார் அளித்த பதில் இதைத் தவிர வேறு எதுவுமில்லை: “கொன்று விடுங்கள் அவரை; அல்லது எரித்து விடுங்கள் அவரை!” இறுதியில், அல்லாஹ் அவரை நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொண்டான். திண்ணமாக, இறைநம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு இதில் சான்றுகள் உள்ளன.

25

وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ مَّوَدَّةَ بَیْنِكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّیَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ؗ وَّمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟ۗۙ

மேலும், அவர் கூறினார்: “உலக வாழ்க்கையில் அல்லாஹ்வை விடுத்து உருவச்சிலைகளை நீங்கள் உங்களிடையே அன்பு செலுத்துவதற்குச் சாதனமாக்கிக் கொண்டுள்ளீர்கள். ஆயினும், மறுமை நாளில் நீங்கள் ஒருவரையொருவர் மறுத்துரைத்து, ஒருவரையொருவர் சபித்துக் கொள்வீர்கள்! மேலும், நெருப்பு உங்களின் இருப்பிடமாக அமையும். உங்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கமாட்டார்.”

26

فَاٰمَنَ لَهٗ لُوْطٌ ۘ وَقَالَ اِنِّیْ مُهَاجِرٌ اِلٰی رَبِّیْ ؕ اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

(அவ்வேளை) லூத் அவரை ஏற்றுக்கொண்டார். மேலும், இப்ராஹீம் கூறினார்: “நான் என்னுடைய இறைவனின் பக்கம் ஹிஜ்ரத்* செய்கின்றேன். அவன் வலிமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.”

27

وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَیْنٰهُ اَجْرَهٗ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟

மேலும், நாம் அவருக்கு இஸ்ஹாக் மற்றும் யஃகூப் போன்ற பிள்ளைகளை வழங்கினோம். மேலும், அவருடைய வழித்தோன்றல்களுக்கு தூதுத்துவத்தையும் வேதத்தையும் வழங்கினோம். உலகில் அவருக்குரிய கூலியை அவருக்கு அளித்தோம். மேலும், மறுமையில் திண்ணமாக அவர் உத்தமர்களோடு இருப்பார்.

28

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اِنَّكُمْ لَتَاْتُوْنَ الْفَاحِشَةَ ؗ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟

மேலும், நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம்முடைய சமூகத்தாரிடம் கூறினார்: “உங்களுக்கு முன்னர் உலக மக்களில் யாரும் செய்திராத மானக்கேடான செயலை நீங்கள் செய்கின்றீர்கள்;

29

اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِیْلَ ۙ۬ وَتَاْتُوْنَ فِیْ نَادِیْكُمُ الْمُنْكَرَ ؕ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

என்னே உங்களின் இந்த நடத்தை! ஆண்களிடம் செல்கின்றீர்கள்; வழிப்பறி செய்கின்றீர்கள்; உங்கள் சபைகளில் வைத்தே தீயசெயல்களில் ஈடுபடுகின்றீர்கள்!” அவருடைய சமூகத்தாரிடம் இதைத் தவிர வேறெந்த பதிலும் இருக்கவில்லை: “கொண்டுவாரும் அல்லாஹ்வின் தண்டனையை, நீர் உண்மை யாளராயின்!”

30

قَالَ رَبِّ انْصُرْنِیْ عَلَی الْقَوْمِ الْمُفْسِدِیْنَ ۟۠

லூத் வேண்டினார்: “என் இறைவா! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு எதிராக நீ எனக்கு உதவி புரிவாயாக!”

31

وَلَمَّا جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی ۙ قَالُوْۤا اِنَّا مُهْلِكُوْۤا اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ ۚ اِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِیْنَ ۟ۚۖ

மேலும், நம்முடைய தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தபோது, அவர்கள் அவரிடம் கூறினார்கள்: “நாங்கள் இவ்வூர் மக்களை அழிக்கப்போகின்றோம். ஏனெனில், இங்குள்ளவர்கள் பெரும் கொடுமை புரிபவர்களாகி விட்டார்கள்.”

32

قَالَ اِنَّ فِیْهَا لُوْطًا ؕ قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِیْهَا ؗۥ لَنُنَجِّیَنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗۗ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟

அதற்கு இப்ராஹீம், “அங்கு லூத் இருக்கின்றாரே!” என்றார். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அங்கு யார் இருக்கின்றார்கள் என்பதனை நாங்கள் நன்கு அறிவோம். திண்ணமாக, அவரையும் அவருடைய குடும்பத்தையும் நாங்கள் காப்பாற்றிக் கொள்வோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கி அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாள்.”

33

وَلَمَّاۤ اَنْ جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۫ اِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟

பின்னர், நம்முடைய தூதர்கள் லூத்திடம் வந்தபோது அவர்களுடைய வருகையால் அவர் மிகவும் பதற்றமடையவும், மனம் நொந்துவிடவும் செய்தார். அவர்கள் கூறினார்கள்: “அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நாம் உம்மையும் உம்முடைய குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்வோம்; உம்முடைய மனைவியைத் தவிர! அவள் பின்தங்கி அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாள்.

34

اِنَّا مُنْزِلُوْنَ عَلٰۤی اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟

நாம் இவ்வூர் மக்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்குபவர்களாவோம்; இவர்கள் செய்துகொண்டிருக்கும் தீய செயல்களின் விளைவாக!”

35

وَلَقَدْ تَّرَكْنَا مِنْهَاۤ اٰیَةً بَیِّنَةً لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟

நாம் அவ்வூரின் தெளிவான தொரு சான்றை விட்டு வைத்திருக்கின்றோம், அறிந்துகொள்ளக் கூடிய மக்களுக்காக!

36

وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ۙ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَارْجُوا الْیَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟

மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களுடைய சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். இறுதிநாளை எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். மேலும், பூமியில் அநீதி இழைத்துக்கொண்டு, குழப்பம் விளைவிப்பவர்களாய்த் திரியாதீர்கள்.”

37

فَكَذَّبُوْهُ فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟ؗ

ஆனால், அவர்கள் அவரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்.

38

وَعَادًا وَّثَمُوْدَاۡ وَقَدْ تَّبَیَّنَ لَكُمْ مِّنْ مَّسٰكِنِهِمْ ۫ وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ وَكَانُوْا مُسْتَبْصِرِیْنَ ۟ۙ

மேலும், ஆத், ஸமூத் இனத்தார்களையும் நாம் அழித்தோம். அவர்கள் வாழ்ந்திருந்த இடங்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். மேலும், அவர்களுடைய செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகுபடுத்திக் காண்பித்தான். மேலும், அவர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாய் இருந்தும்கூட, அவன் நேர்வழியினின்று அவர்களைப் பிறழச் செய்துவிட்டான்.

39

وَقَارُوْنَ وَفِرْعَوْنَ وَهَامٰنَ ۫ وَلَقَدْ جَآءَهُمْ مُّوْسٰی بِالْبَیِّنٰتِ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ وَمَا كَانُوْا سٰبِقِیْنَ ۟ۚۖ

மேலும், காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியோரையும் நாம் அழித்தோம். அவர்களிடம் மூஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். ஆயினும், அவர்கள் பூமியில் தாங்களே மேலானவர்கள் என இறுமாப்புக் கொண்டார்கள். உண்மையில், அவர்கள் வென்றுவிடுபவர்களாய் இருக்கவில்லை.

40

فَكُلًّا اَخَذْنَا بِذَنْۢبِهٖ ۚ فَمِنْهُمْ مَّنْ اَرْسَلْنَا عَلَیْهِ حَاصِبًا ۚ وَمِنْهُمْ مَّنْ اَخَذَتْهُ الصَّیْحَةُ ۚ وَمِنْهُمْ مَّنْ خَسَفْنَا بِهِ الْاَرْضَ ۚ وَمِنْهُمْ مَّنْ اَغْرَقْنَا ۚ وَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

இறுதியில், ஒவ்வொருவரையும் அவரவருடைய பாவத்தின் காரணமாக நாம் பிடித்தோம். பிறகு, அவர்களில் சிலர் மீது நாம் கல்மாரி பொழியும் காற்றை அனுப்பினோம். வேறு சிலரை ஒரே ஓர் உரத்த முழக்கம் பிடித்துக் கொண்டது; மற்றும் சிலரை நாம் பூமியில் புதைத்துவிட்டோம். அவர்களில் மேலும் சிலரை மூழ்கடித்துவிட்டோம். அல்லாஹ் அவர்கள் மீது கொடுமை புரிபவனாக இருக்கவில்லை. ஆனால், அவர்களே தங்கள் மீது கொடுமை இழைத்துக் கொண்டிருந்தார்கள்.

41

مَثَلُ الَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِیَآءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِ ۚۖ اِتَّخَذَتْ بَیْتًا ؕ وَاِنَّ اَوْهَنَ الْبُیُوْتِ لَبَیْتُ الْعَنْكَبُوْتِ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟

எவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு மற்ற பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்களின் உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிலந்திப்பூச்சியாகும். திண்ணமாக, வீடுகளிலேயே மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடாகும். அந்தோ! இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

42

اِنَّ اللّٰهَ یَعْلَمُ مَا یَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مِنْ شَیْءٍ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் எவரை அழைக்கின்றார்களோ திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கறிகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்.

43

وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ ۚ وَمَا یَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ ۟

மக்கள் புரிந்துகொள்வதற்காக உவமைகளை நாம் கூறுகின்றோம். ஆயினும், ஞானமுடையவர்கள் மட்டுமே இவற்றை அறிந்துகொள்கின்றார்கள்.

44

خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّلْمُؤْمِنِیْنَ ۟۠

அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்தைக் கொண்டே படைத்திருக்கின்றான். திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கின்றது.

45

اُتْلُ مَاۤ اُوْحِیَ اِلَیْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰی عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تَصْنَعُوْنَ ۟

(நபியே!) வஹியின் மூலம் உமக்கு அனுப்பப்பட்டிருக்கும் இந்த வேதத்தை நீர் ஓதுவீராக! மேலும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! திண்ணமாக, தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களைத் தடுக்கின்றது. மேலும், அல்லாஹ்வை நினைவுகூர்வது இதைவிடப் பெரிய விஷயமாகும். நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் அறிகின்றான்.

46

وَلَا تُجَادِلُوْۤا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِیْ هِیَ اَحْسَنُ ۖۗ اِلَّا الَّذِیْنَ ظَلَمُوْا مِنْهُمْ وَقُوْلُوْۤا اٰمَنَّا بِالَّذِیْۤ اُنْزِلَ اِلَیْنَا وَاُنْزِلَ اِلَیْكُمْ وَاِلٰهُنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟

மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களிடம் மிக அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். ஆனால், அவர்களுள் கொடுமையாளர்களிடம் தவிர! மேலும், அவர்களிடம் கூறுங்கள்: “எங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பவற்றின் மீதும் உங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பவற்றின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்களுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் ஒருவனே! மேலும், நாம் அவனுக்கே கீழ்ப்படிந்தவர்களாய் (முஸ்லிம்களாய்) இருக்கின்றோம்.”

47

وَكَذٰلِكَ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ ؕ فَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یُؤْمِنُوْنَ بِهٖ ۚ وَمِنْ هٰۤؤُلَآءِ مَنْ یُّؤْمِنُ بِهٖ ؕ وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الْكٰفِرُوْنَ ۟

(நபியே!) இதே போன்று உமக்கும் வேதத்தை இறக்கியருளியிருக்கின்றோம். ஆகையால், முன்னர் எவர்களுக்கு வேதம் வழங்கியிருந்தோமோ அவர்கள் இதனை நம்புகின்றார்கள். இவர்களிலும்கூட பெரும்பாலோர் இதன்மீது நம்பிக்கை கொண்டு இருக்கின்றார்கள். மேலும், இறைநிராகரிப்பாளர்கள் மட்டுமே நம்முடைய வசனங்களை மறுக்கின்றனர்.

48

وَمَا كُنْتَ تَتْلُوْا مِنْ قَبْلِهٖ مِنْ كِتٰبٍ وَّلَا تَخُطُّهٗ بِیَمِیْنِكَ اِذًا لَّارْتَابَ الْمُبْطِلُوْنَ ۟

(நபியே!) இதற்கு முன்னர் எந்த வேதத்தையும் நீர் படித்ததில்லை. உம்முடைய கையால் எழுதியதுமில்லை. அவ்வாறிருந்திருந்தால் அசத்தியவாதிகள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

49

بَلْ هُوَ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ فِیْ صُدُوْرِ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ ؕ وَمَا یَجْحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الظّٰلِمُوْنَ ۟

உண்மையில் இவை ஞானம் வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் தெளிவான சான்றுகளாய்த் திகழ்கின்றன. நம்முடைய வசனங்களை எவரும் மறுப்பதில்லை கொடுமைக்காரர்களைத் தவிர!

50

وَقَالُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیٰتٌ مِّنْ رَّبِّهٖ ؕ قُلْ اِنَّمَا الْاٰیٰتُ عِنْدَ اللّٰهِ ؕ وَاِنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟

இவர்கள் கேட்கின்றார்கள், “இவருடைய இறைவனிடமிருந்து இவருக்கு ஏன் சான்றுகள் இறக்கியருளப்படவில்லை” என்று! அதற்கு நீர் கூறும்: “சான்றுகள் அல்லாஹ்விடம் உள்ளன. நானோ தெள்ளத்தெளிவாக எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன்.”

51

اَوَلَمْ یَكْفِهِمْ اَنَّاۤ اَنْزَلْنَا عَلَیْكَ الْكِتٰبَ یُتْلٰی عَلَیْهِمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَرَحْمَةً وَّذِكْرٰی لِقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟۠

அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம் மீது நாம் இறக்கியருளி இருப்பது அவர்களுக்குப் போதுமான சான்றாக இல்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் கருணையும் நல்லுரையும் இருக்கின்றன.

52

قُلْ كَفٰی بِاللّٰهِ بَیْنِیْ وَبَیْنَكُمْ شَهِیْدًا ۚ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا بِالْبَاطِلِ وَكَفَرُوْا بِاللّٰهِ ۙ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟

(நபியே!) நீர் கூறும்: “எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சி அளிக்க அல்லாஹ்வே போதுமானவன். அவன் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அறிகின்றான். எவர்கள் அசத்தியத்தை ஏற்றுக் கொள்கின்றார்களோ மேலும், அல்லாஹ்வை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இழப்புக்கு உரியவர்கள்.”

53

وَیَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ ؕ وَلَوْلَاۤ اَجَلٌ مُّسَمًّی لَّجَآءَهُمُ الْعَذَابُ ؕ وَلَیَاْتِیَنَّهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

விரைவில் வேதனையைக் கொண்டு வருமாறு உம்மிடம் இவர்கள் கோருகின்றார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் நிர்ணயிக்கப்படாதிருந்தால் அவர்கள்மீது வேதனை வந்துவிட்டிருக்கும். மேலும், திண்ணமாக, அது (உரிய நேரத்தில்) அவர்களிடம் திடீரென வந்தே தீரும். அதைப்பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாத நிலையில்!

54

یَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ ؕ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِیْطَةٌ بِالْكٰفِرِیْنَ ۟ۙ

வேதனையை விரைவில் கொண்டு வருமாறு இவர்கள் உம்மிடம் கோருகின்றார்கள். அதே நேரத்தில் நரகம் இந்நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது!

55

یَوْمَ یَغْشٰىهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَیَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

மேலும், அந்நாளை (இவர்கள் அறிந்து கொள்வார்கள்) அன்று வேதனை இவர்களின் மேலிருந்தும், இவர்களின் கால்களுக்குக் கீழிருந்தும் இவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். மேலும், கூறுவான்: “இப்பொழுது சுவையுங்கள், நீங்கள் செய்து கொண்டிருந்த இழிசெயல்களின் விளைவை!”

56

یٰعِبَادِیَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ اَرْضِیْ وَاسِعَةٌ فَاِیَّایَ فَاعْبُدُوْنِ ۟

நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களே! திண்ணமாக, என்னுடைய பூமி விசாலமானது. எனவே, எனக்கே நீங்கள் அடிபணியுங்கள்.

57

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ۫ ثُمَّ اِلَیْنَا تُرْجَعُوْنَ ۟

ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க வேண்டியதாய் இருக்கின்றது. பின்னர் நீங்கள் அனைவரும் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்!

58

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّهُمْ مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ نِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ۗۖ

எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்திருக்கின்றார்களோ, அவர்களை சுவனத்தின் உயர்ந்த மாளிகைகளில் வசிக்கச் செய்வோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கே அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். நற்செயல் புரிபவர்களுக்குரிய இக்கூலி எத்துணைச் சிறப்பானது!

59

الَّذِیْنَ صَبَرُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟

அவர்கள் எப்படிப்பட்டவர்களெனில் பொறுமையை மேற்கொண்டார்கள்; தம் இறைவனேயே முழுவதுஞ் சார்ந்திருக்கின்றார்கள்

60

وَكَاَیِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۗۖ اَللّٰهُ یَرْزُقُهَا وَاِیَّاكُمْ ۖؗ وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

எத்தனையோ பிராணிகள் உள்ளன; அவை தாமே தமது உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை. அல்லாஹ் அவற்றுக்கு உணவளிக்கின்றான். உங்களுக்கும் அவன்தான் உணவளிக்கின்றான். அவன் யாவற்றையும் செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

61

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ۚ فَاَنّٰی یُؤْفَكُوْنَ ۟

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருப்பவனும் யார் என்று நீர் இவர்களிடம் கேட்டால் திண்ணமாக, இவர்கள் ‘அல்லாஹ்’ என்று பதில் தருவார்கள். பிறகு, இவர்கள் எங்கிருந்து ஏமாற்றப்படுகின்றார்கள்!

62

اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ لَهٗ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

அல்லாஹ் தன்னுடைய அடிமைகளில் தான் நாடுவோருக்கு உணவைத் தாராளமாய் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு அளவோடு வழங்குகின்றான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

63

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْیَا بِهِ الْاَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟۠

மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் இறந்துகிடக்கின்ற பூமியை உயிர்ப்புறச் செய்தவன் யார்? என்று இவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்’ என்று திண்ணமாக அவர்கள் பதில் சொல்வார்கள். ‘அல்ஹம்துலில்லாஹ்’ புகழ் அனைத்தும் இறைவனுக்கு உரியது என்று கூறும். ஆயினும், இவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்வதில்லை.

64

وَمَا هٰذِهِ الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌ ؕ وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِیَ الْحَیَوَانُ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟

மேலும், இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும் அன்றி வேறொன்றுமில்லை. நிலையாக வாழ்வதற்கான இல்லம் மறுமை இல்லம்தான்! அந்தோ, இவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

65

فَاِذَا رَكِبُوْا فِی الْفُلْكِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۚ۬ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَی الْبَرِّ اِذَا هُمْ یُشْرِكُوْنَ ۟ۙ

இந்த மக்கள் கப்பலில் பயணமாகும்போது தங்களுடைய தீனைமார்க்கத்தை அல்லாஹ்வுக்கு உரித்தாக்கிய வண்ணம் அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். பிறகு, அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிட்டால் அவனுக்கு இணை வைக்கத் தொடங்கிவிடுகின்றார்கள்.

66

لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ۙۚ وَلِیَتَمَتَّعُوْا ۥ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟

அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய ஈடேற்றத்திற்கு நன்றி கொல்வதற்காகவும் உலக வாழ்க்கையின் இன்பத்தை அவர்கள் அனுபவிப்பதற்காகவும்தான்! சரி, விரைவில் இவர்களுக்குத் தெரிந்துவிடும்!

67

اَوَلَمْ یَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّیُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ ؕ اَفَبِالْبَاطِلِ یُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ یَكْفُرُوْنَ ۟

இவர்களின் அக்கம்பக்கங்களில் இருக்கும் மக்கள் இறாஞ்சிச் செல்லப்படும் நிலையில் இருக்க ஹரமை நாம் அபயமளிக்கும் புனிதத்தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பிறகு என்ன, இவர்கள் அசத்தியத்தை ஏற்றுக்கொள்கின்றார்களா? அல்லாஹ்வுடைய அருட்கொடைக்கு நன்றி கொல்கின்றார்களா?

68

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَآءَهٗ ؕ اَلَیْسَ فِیْ جَهَنَّمَ مَثْوًی لِّلْكٰفِرِیْنَ ۟

அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது தன் முன் சத்தியம் வந்திருக்கும்போது அதைப் பொய்யென வாதிட்டவனைவிடப் பெரும் கொடுமைக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பாளர்களுக்கு நரகம் இருப்பிடமல்லவா?

69

وَالَّذِیْنَ جَاهَدُوْا فِیْنَا لَنَهْدِیَنَّهُمْ سُبُلَنَا ؕ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِیْنَ ۟۠

மேலும், எவர்கள் நமக்காக ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களுக்கு நாம் நம்முடைய வழிகளைக் காண்பிப்போம். மேலும், திண்ணமாக, அல்லாஹ் நற்பணியாற்றுபவர்களுடன் இருக்கின்றான்.

PreviousAl-QasasNextAr-Rum

0:00–:––