الٓمّٓ ۟ۚ
அலிஃப்லாம்மீம்.
Surah 30
Ar-Rum
30. ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு)
60 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
الٓمّٓ ۟ۚ
அலிஃப்லாம்மீம்.
غُلِبَتِ الرُّوْمُ ۟ۙ
ரோமானியர் அண்டை நாட்டிலே தோல்வி அடைந்துள்ளனர்.
فِیْۤ اَدْنَی الْاَرْضِ وَهُمْ مِّنْ بَعْدِ غَلَبِهِمْ سَیَغْلِبُوْنَ ۟ۙ
மேலும், அவர்கள் தங்களுடைய இந்தத் தோல்விக்குப் பின் சில ஆண்டுகளுக்குள்ளாகவே வெற்றியடைந்துவிடுவார்கள்.
فِیْ بِضْعِ سِنِیْنَ ؕ۬ لِلّٰهِ الْاَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ ؕ وَیَوْمَىِٕذٍ یَّفْرَحُ الْمُؤْمِنُوْنَ ۟ۙ
முன்பும் பின்பும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியதாகும். மேலும், அந்நாளில் அல்லாஹ்வினால் அளிக்கப்பட்ட வெற்றியைக் கண்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சி கொண்டாடுவார்கள்.
بِنَصْرِ اللّٰهِ ؕ یَنْصُرُ مَنْ یَّشَآءُ ؕ وَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟ۙ
தான் நாடுவோருக்கு அல்லாஹ் உதவி செய்கின்றான். மேலும், அவன் வலிமை மிக்கவனாகவும் பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
وَعْدَ اللّٰهِ ؕ لَا یُخْلِفُ اللّٰهُ وَعْدَهٗ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
இது அல்லாஹ் அளித்த வாக்குறுதி ஆகும். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதில்லை. ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
یَعْلَمُوْنَ ظَاهِرًا مِّنَ الْحَیٰوةِ الدُّنْیَا ۖۚ وَهُمْ عَنِ الْاٰخِرَةِ هُمْ غٰفِلُوْنَ ۟
மக்கள் உலக வாழ்வின் புறத்தோற்றத்தை மட்டுமே அறிகின்றனர். மறுமையைப் பற்றி அவர்கள் அலட்சியமாக இருக்கின்றனர்.
اَوَلَمْ یَتَفَكَّرُوْا فِیْۤ اَنْفُسِهِمْ ۫ مَا خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّی ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ بِلِقَآئِ رَبِّهِمْ لَكٰفِرُوْنَ ۟
என்ன, அவர்கள் தங்களைப்பற்றி என்றைக் கேனும் சிந்தித்ததில்லையா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்துப் பொருட்களையும் சத்தியத்துடனும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவுமே படைத்துள்ளான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் தங்கள் அதிபதியின் சந்திப்பை நிராகரிப்பவர்களாய் இருக்கின்றனர்.
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاَثَارُوا الْاَرْضَ وَعَمَرُوْهَاۤ اَكْثَرَ مِمَّا عَمَرُوْهَا وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ؕ فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟ؕ
மேலும், இவர்கள் எப்பொழுதேனும் பூமியில் சுற்றித்திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்; பூமியை நன்கு பண்படுத்தினார்கள்; மேலும், இவர்களைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் அதில் வளமான வாழ்க்கையை நிர்மாணித்தார்கள். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பிறகு, அல்லாஹ் அவர்களுக்கு அக்கிரமம் புரிபவனாக இருந்ததில்லை. ஆனால், தமக்குத் தாமே அவர்கள் அக்கிரமம் புரிந்துகொண்டிருந்தார்கள்.
ثُمَّ كَانَ عَاقِبَةَ الَّذِیْنَ اَسَآءُوا السُّوْٓاٰۤی اَنْ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ وَكَانُوْا بِهَا یَسْتَهْزِءُوْنَ ۟۠
இறுதியில் எவர்கள் தீவினைகள் செய்து வந்தார்களோ அவர்களுடைய இறுதி முடிவு மிகவும் தீயதாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறி அவற்றைப் பரிகாசம் செய்து கொண்டுமிருந்தார்கள்.
اَللّٰهُ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یُبْلِسُ الْمُجْرِمُوْنَ ۟
மேலும், அந்த நேரம் வரும்நாளில் குற்றவாளிகள் நிலைகுலைந்து போவார்கள்.
وَلَمْ یَكُنْ لَّهُمْ مِّنْ شُرَكَآىِٕهِمْ شُفَعٰٓؤُا وَكَانُوْا بِشُرَكَآىِٕهِمْ كٰفِرِیْنَ ۟
அவர்கள் ஏற்படுத்தியிருந்த இணைக்கடவுளர்களில் யாரும் அவர்களுக்குப் பரிந்துரைக்கக் கூடியவராக இருக்கமாட்டார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய இணைக் கடவுள்களை நிராகரிப்பவர்களாகி விடுவார்கள்.
وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یَوْمَىِٕذٍ یَّتَفَرَّقُوْنَ ۟
அந்நேரம் வரும்நாளில் (எல்லா மனிதர்களும்) தனித் தனிக் குழுக்களாகப் பிரிந்து போவார்கள்.
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِیْ رَوْضَةٍ یُّحْبَرُوْنَ ۟
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்துள்ளார்களோ அவர்கள் சுவனத் தோட்டத்தில் மகிழ்ச்சியுடனும் இன்பத்துடனும் தங்க வைக்கப்படுவார்கள்.
وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَا وَلِقَآئِ الْاٰخِرَةِ فَاُولٰٓىِٕكَ فِی الْعَذَابِ مُحْضَرُوْنَ ۟
மேலும், எவர்கள் நிராகரித்தார்களோ, மேலும், நம்முடைய வசனங்களையும் மறுமைச் சந்திப்பையும் பொய்யென்று கூறியிருந்தார்களோ அவர்கள் வேதனையில் கொண்டு வந்து நிறுத்தப்படுவார்கள்.
فَسُبْحٰنَ اللّٰهِ حِیْنَ تُمْسُوْنَ وَحِیْنَ تُصْبِحُوْنَ ۟
எனவே துதியுங்கள் அல்லாஹ்வை நீங்கள் மாலை நேரத்தை அடையும் போதும், காலை நேரத்தை அடையும்போதும்!
وَلَهُ الْحَمْدُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَعَشِیًّا وَّحِیْنَ تُظْهِرُوْنَ ۟
வானங்களிலும் பூமியிலும் புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது. மேலும் (துதியுங்கள் அவனை) நீங்கள் பிற்பகலிலும் மதிய வேளையை அடையும்போதும்!
یُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَیُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ وَیُحْیِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ وَكَذٰلِكَ تُخْرَجُوْنَ ۟۠
அவன் உயிருள்ளவற்றை உயிரில்லாதவற்றிலிருந்து வெளிப்படுத்துகின்றான். உயிரில்லாதவற்றை உயிருள்ளவற்றிலிருந்து வெளிப்படுத்துகின்றான். மேலும், பூமி இறந்து போனதன் பின்னர் அதற்கு உயிரூட்டுகின்றான். இதைப்போன்றுதான் நீங்களும் (மரணமான நிலையிலிருந்து) வெளிக்கொணரப்படுவீர்கள்.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ اِذَاۤ اَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُوْنَ ۟
அவனுடைய சான்றுகளில் ஒன்று அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதாகும். பின்னர், திடீரென நீங்கள் மனிதர்களாக இருக்கிறீர்கள்; (பூமியில்) பரவிச் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَیْهَا وَجَعَلَ بَیْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
மேலும், அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான்; நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், உங்களிடையே அன்பையும், கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன.
وَمِنْ اٰیٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّلْعٰلِمِیْنَ ۟
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.
وَمِنْ اٰیٰتِهٖ مَنَامُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ وَابْتِغَآؤُكُمْ مِّنْ فَضْلِهٖ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟
இரவிலோ பகலிலோ நீங்கள் உறங்குவதும், அவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடுவதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக, (உன்னிப்பாக) செவிமடுக்கும் மக்களுக்கு இவற்றில் நிறையச் சான்றுகள் உள்ளன.
وَمِنْ اٰیٰتِهٖ یُرِیْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مَآءً فَیُحْیٖ بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
மேலும், அச்சமும் ஆர்வமும் அளிக்கும் வகையில் அவன் உங்களுக்கு மின்னலைக் காண்பிப்பதும், மேலும், வானிலிருந்து அவன் மழையைப் பொழியச் செய்வதும், அதன் மூலம் பூமிக்கு அது இறந்துபோன பின் உயிர் கொடுப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையாகும். திண்ணமாக, சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இவற்றில் பல சான்றுகள் உள்ளன.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ تَقُوْمَ السَّمَآءُ وَالْاَرْضُ بِاَمْرِهٖ ؕ ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةً ۖۗ مِّنَ الْاَرْضِ ۖۗ اِذَاۤ اَنْتُمْ تَخْرُجُوْنَ ۟
மேலும், வானமும் பூமியும் அவனுடைய கட்டளைப்படி நிலை பெற்றிருப்பதும் அவனுடைய சான்றுகளுள் ஒன்றாகும். பிறகு, அவன் உங்களைப் பூமியிலிருந்து (வெளியேறி வரும்படி) அழைத்தான். ஒரே ஓர் அழைப்பில் திடீரென நீங்கள் வெளியேறி வருவீர்கள்.
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் அனைவரும் அவனுடைய அடிமைகளே! அனைவரும் முழுக்க முழுக்க அவனுக்கே கீழ்ப்படிகின்றனர்.
وَهُوَ الَّذِیْ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ وَهُوَ اَهْوَنُ عَلَیْهِ ؕ وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
அவனே முதன் முறையாகப் படைக்கின்றான். பிறகு, அவனே அதை மறுமுறையும் படைப்பான். இது அவனுக்கு மிகவும் எளிதானது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய தன்மை மிக உயர்ந்ததாகும். மேலும், அவன் வலிமை மிக்கவன்; நுண்ணறிவாளன்.
ضَرَبَ لَكُمْ مَّثَلًا مِّنْ اَنْفُسِكُمْ ؕ هَلْ لَّكُمْ مِّنْ مَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ مِّنْ شُرَكَآءَ فِیْ مَا رَزَقْنٰكُمْ فَاَنْتُمْ فِیْهِ سَوَآءٌ تَخَافُوْنَهُمْ كَخِیْفَتِكُمْ اَنْفُسَكُمْ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உவமையை கூறுகின்றான்: உங்களுக்குச் சொந்தமான அடிமைகளில் யாராகிலும் நாம் உங்களுக்கு வழங்கிய செல்வத்தில் உங்களுக்குச் சரியான பங்காளிகளாய் இருக்கின்றார்களா? மேலும், நீங்கள் உங்களுக்குச் சமமானவர்களுக்கு பரஸ்பரம் அஞ்சுவதுபோல் அவர்களுக்கு அஞ்சுகின்றீர்களா? சிந்தித்துச் செயல்படும் மக்களுக்கு இவ்வாறே நாம் நம்முடைய வசனங்களைத் தெளிவாக விளக்குகின்றோம்.
بَلِ اتَّبَعَ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَهْوَآءَهُمْ بِغَیْرِ عِلْمٍ ۚ فَمَنْ یَّهْدِیْ مَنْ اَضَلَّ اللّٰهُ ؕ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
ஆயினும், இந்த அக்கிரமக்காரர்கள் எவ்வித அறிவுமின்றி தங்கள் மன இச்சைகளைப் பின்பற்றிச் செல்கின்றார்கள். அல்லாஹ் யாரை வழிகெடுத்துவிட்டானோ, இனி அவருக்கு வேறு எவரால் வழிகாட்ட முடியும்? இத்தகையோருக்கு உதவியாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
فَاَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ حَنِیْفًا ؕ فِطْرَتَ اللّٰهِ الَّتِیْ فَطَرَ النَّاسَ عَلَیْهَا ؕ لَا تَبْدِیْلَ لِخَلْقِ اللّٰهِ ؕ ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ ۙۗ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟ۗۙ
எனவே (நபியே, இன்னும் நபியைப் பின்பற்றுபவர்களே) ஒருமனப்பட்ட நிலையில் உங்களுடைய முகத்தை இந்த தீனின் பக்கம் நிலைப்படுத்துங்கள். அல்லாஹ் மனிதர்களை எந்த இயற்கை அமைப்பில் படைத்திருக்கின்றானோ அந்த இயற்கை அமைப்பில் நிலைத்திருங்கள். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அமைப்பில் மாறுதல் செய்ய முடியாது. இதுதான் முற்றிலும் நேரானசெம்மையான மார்க்கமாகும். ஆயினும் பெரும்பாலான மக்கள் அறிவதில்லை.
مُنِیْبِیْنَ اِلَیْهِ وَاتَّقُوْهُ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۙ
அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களாய் (அதில் நிலைத்திருங்கள்). மேலும், அவனுக்கு அஞ்சுங்கள். தொழுகையை நிலைநாட்டுங்கள். மேலும், இணைவைப்பாளர்களுடன் நீங்கள் சேர்ந்து விடாதீர்கள்;
مِنَ الَّذِیْنَ فَرَّقُوْا دِیْنَهُمْ وَكَانُوْا شِیَعًا ؕ كُلُّ حِزْبٍ بِمَا لَدَیْهِمْ فَرِحُوْنَ ۟
அவர்களோ தங்களுடைய மார்க்கத்தைத் தனித்தனியாகப் பிரித்து, பல குழுக்களாகப் பிரிந்து விட்டார்கள். மேலும், அவர்களில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் தங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றார்கள்.
وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُّنِیْبِیْنَ اِلَیْهِ ثُمَّ اِذَاۤ اَذَاقَهُمْ مِّنْهُ رَحْمَةً اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ یُشْرِكُوْنَ ۟ۙ
மக்க(ளின் நிலைமை என்னவெனில், அவர்க)ளுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டுவிட்டால், தங்களுடைய இறைவனின் பக்கம் திரும்பியவாறு அவனிடம் இறைஞ்சுகின்றார்கள். பிறகு, அவன் தன்னுடைய அருட்கொடையில் சிறிதளவை அவர்களுக்குச் சுவைக்கக் கொடுத்தால், உடனே அவர்களில் ஒரு பிரிவினர் இறைவனுக்கு இணை வைக்கத் தொடங்கி விடுகின்றனர்;
لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ؕ فَتَمَتَّعُوْا ۥ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
நாம் அவர்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி கொல்லும் பொருட்டு! சரி, அனுபவித்துக் கொள்ளுங்கள். விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும்!
اَمْ اَنْزَلْنَا عَلَیْهِمْ سُلْطٰنًا فَهُوَ یَتَكَلَّمُ بِمَا كَانُوْا بِهٖ یُشْرِكُوْنَ ۟
இவர்கள் செய்துவரும் இணைவைப்புச் செயல் சரியானதுதான் எனச் சான்று பகர்கின்ற ஏதேனும் ஆதாரத்தை நாம் இவர்கள் மீது இறக்கி வைத்திருக்கின்றோமோ, என்ன?
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَا ؕ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ اِذَا هُمْ یَقْنَطُوْنَ ۟
நாம் மக்களுக்கு ஏதேனும் அருட்கொடையை சுவைக்கக் கொடுத்தால், அதில் அவர்கள் பூரித்துப் போய்விடுகின்றார்கள். மேலும், தாங்கள் செய்த தீவினைகளினால் அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்துவிட்டால் உடனே அவர்கள் நிராசை அடைந்துவிடுகின்றார்கள்.
اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை தாராளமாகக் கொடுக்கின்றான்; (தான் நாடுவோர்க்கு) அளவோடு கொடுக்கின்றான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? திண்ணமாக, நம்பிக்கை கொள்ளும் சமூகத்தினர்க்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன.
فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِیْنَ وَابْنَ السَّبِیْلِ ؕ ذٰلِكَ خَیْرٌ لِّلَّذِیْنَ یُرِیْدُوْنَ وَجْهَ اللّٰهِ ؗ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
எனவே (நம்பிக்கையாளனே!) உறவினர்க்கு அவருடைய உரிமையை வழங்கிவிடு; மேலும், வறியவருக்கும் பயணிகளுக்கும் (அவர்களின் உரிமையையும் தந்துவிடு). அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புவோர்க்கு இதுவே மிகச் சிறந்த வழிமுறையாகும். மேலும், அவர்களே வெற்றியடைபவர்களாவர்.
وَمَاۤ اٰتَیْتُمْ مِّنْ رِّبًا لِّیَرْبُوَاۡ فِیْۤ اَمْوَالِ النَّاسِ فَلَا یَرْبُوْا عِنْدَ اللّٰهِ ۚ وَمَاۤ اٰتَیْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِیْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ ۟
மக்களுடைய பொருள்களுடன் கலந்து பெருக வேண்டும் என்பதற்காக நீங்கள் வட்டிக்கு விடும் பணம் அல்லாஹ்விடத்தில் பெருகுவதில்லை. ஆனால், அல்லாஹ்வின் உவப்பைப் பெறவேண்டுமென நாடியவர்களாய் நீங்கள் வழங்கும் ஜகாத் அதனை வழங்குவோர்தாம் உண்மையில் தம்முடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்பவர்களாவர்.
اَللّٰهُ الَّذِیْ خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ؕ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّفْعَلُ مِنْ ذٰلِكُمْ مِّنْ شَیْءٍ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا یُشْرِكُوْنَ ۟۠
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணமடையச் செய்கின்றான்; பிறகு மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பான். என்ன, நீங்கள் இணை வைக்கும் தெய்வங்களில் யாராவது இவற்றுள் எதையாவது செய்பவர் இருக்கின்றாரா? அவன் தூய்மையானவன்; இம் மக்கள் செய்யும் இணைவைப்புச் செயல்களைவிட்டு அவன் மிக உயர்ந்தவன்.
ظَهَرَ الْفَسَادُ فِی الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَیْدِی النَّاسِ لِیُذِیْقَهُمْ بَعْضَ الَّذِیْ عَمِلُوْا لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன; அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகிவிடக்கூடும்.
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلُ ؕ كَانَ اَكْثَرُهُمْ مُّشْرِكِیْنَ ۟
(நபியே! இவர்களிடம்) கூறும்: “பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள். முன்பு வாழ்ந்து சென்ற மக்களின் கதி என்னவாயிற்று என்பதை! அவர்களில் பெரும்பாலோர் இணைவைப்பாளர்களாகவே இருந்தனர்.”
فَاَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ الْقَیِّمِ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ یَوْمَىِٕذٍ یَّصَّدَّعُوْنَ ۟
எனவே (நபியே!) உமது முகத்தை இந்த நேரிய மார்க்கத்தின் பக்கம் உறுதியுடன் நிலைப்படுத்தி வைப்பீராக; அல்லாஹ்விடமிருந்து எவராலும் எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த முடியாத ஒருநாள் வருமுன்! அந்நாளில் மக்கள் பிளவுண்டு, தனித்தனியே பிரிந்து சென்று விடுவர்.
مَنْ كَفَرَ فَعَلَیْهِ كُفْرُهٗ ۚ وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِاَنْفُسِهِمْ یَمْهَدُوْنَ ۟ۙ
எவன் நிராகரித்தானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்குக் கேடாக முடியும். மேலும், எவர்கள் நற்செயல் புரிந்தார்களோ அவர்கள் தங்களுக்காகவே (வெற்றியின் வழியைத்) தயார்படுத்துகின்றார்கள்;
لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّلِحٰتِ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الْكٰفِرِیْنَ ۟
இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தோருக்கு அல்லாஹ் தன் அருளிலிருந்து கூலி வழங்குவதற்காக! திண்ணமாக அவன் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ یُّرْسِلَ الرِّیَاحَ مُبَشِّرٰتٍ وَّلِیُذِیْقَكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَلِتَجْرِیَ الْفُلْكُ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
மேலும், நற்செய்தி கூறுவதற்காக காற்றை அனுப்புவது அவனுடைய சான்றுகளில் உள்ளதாகும்; எதற்காகவெனில், அவனுடைய அருளிலிருந்து உங்களை சுவைக்கச் செய்வதற்காகவும், மேலும், அவனுடைய கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடுவதற்காகவும், அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழ்வதற்காகவும்தான்!
وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِیْنَ اَجْرَمُوْا ؕ وَكَانَ حَقًّا عَلَیْنَا نَصْرُ الْمُؤْمِنِیْنَ ۟
மேலும், நாம் உமக்கு முன்னர் தூதர்களை அவரவருடைய சமூகத்தாரிடையே அனுப்பினோம். அவர்கள் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பின்னர், எவர்கள் குற்றம் புரிந்தார்களோ அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிவது நம்மீது கடமையாக இருந்தது.
اَللّٰهُ الَّذِیْ یُرْسِلُ الرِّیٰحَ فَتُثِیْرُ سَحَابًا فَیَبْسُطُهٗ فِی السَّمَآءِ كَیْفَ یَشَآءُ وَیَجْعَلُهٗ كِسَفًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ ۚ فَاِذَاۤ اَصَابَ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اِذَا هُمْ یَسْتَبْشِرُوْنَ ۟ۚ
அல்லாஹ்தான் காற்றை அனுப்புகின்றான்; அது மேகத்தைக் கிளப்பிவிடுகின்றது. பிறகு அவன் நாடும் விதத்தில் மேகங்களை வானத்தில் பரப்புகின்றான். அவற்றைப் பல துண்டுகளாய்ப் பிரிக்கின்றான். பின்னர் அவற்றுக்கிடையில் இருந்து மழைத்துளிகள் உதிர்ந்து விழுவதை நீர் காண்கின்றீர். தன் அடிமைகளில் தான் நாடுபவர்கள் மீது அவன் இந்த மழையைப் பொழிவிக்கும்போது அவர்கள் உடனே மகிழ்ந்து போய்விடுகின்றார்கள்.
وَاِنْ كَانُوْا مِنْ قَبْلِ اَنْ یُّنَزَّلَ عَلَیْهِمْ مِّنْ قَبْلِهٖ لَمُبْلِسِیْنَ ۟
ஆனால், அவர்கள் அது பொழியப்படுவதற்கு முன் நிராசையடைந்துவிட்டிருந்தார்கள்.
فَانْظُرْ اِلٰۤی اٰثٰرِ رَحْمَتِ اللّٰهِ كَیْفَ یُحْیِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ اِنَّ ذٰلِكَ لَمُحْیِ الْمَوْتٰى ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
அல்லாஹ்வுடைய அருளின் பலன்களைப் பாருங்கள். இறந்து கிடக்கும் பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கின்றான்? திண்ணமாக, அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கக்கூடியவனாவான். மேலும், அவன் யாவற்றின்மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
وَلَىِٕنْ اَرْسَلْنَا رِیْحًا فَرَاَوْهُ مُصْفَرًّا لَّظَلُّوْا مِنْ بَعْدِهٖ یَكْفُرُوْنَ ۟
மேலும், நாம் காற்றை அனுப்பி, அதனால் அவர்களின் பயிர்கள் மஞ்சள் நிறமாகிப் போவதை அவர்கள் காண்பார்களானால், அப்பொழுது அவர்கள் நன்றி கொன்றவர்களாகி விடுகின்றார்கள்.
فَاِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِیْنَ ۟
(நபியே!) இறந்தவர்களைச் செவியேற்கச் செய்ய நிச்சயமாக உம்மால் முடியாது. புறங்காட்டிச் செல்லும் செவிடர்களை உம்முடைய அழைப்பைச் செவியேற்கும்படிச் செய்யவும் உம்மால் முடியாது.
وَمَاۤ اَنْتَ بِهٰدِ الْعُمْیِ عَنْ ضَلٰلَتِهِمْ ؕ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ یُّؤْمِنُ بِاٰیٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ۟۠
மேலும், குருடர்களை வழிகேட்டிலிருந்து வெளியேற்றி, அவர்களை நேர்வழியில் கொண்டு வரவும் உம்மால் முடியாது. ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாய் இருக்கின்றார்களோ அவர்களை மட்டுமே உம்மால் செவியேற்கச் செய்ய முடியும்.
اَللّٰهُ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَیْبَةً ؕ یَخْلُقُ مَا یَشَآءُ ۚ وَهُوَ الْعَلِیْمُ الْقَدِیْرُ ۟
நீங்கள் பலவீனமான நிலையிலிருந்தபோது உங்களைப் படைக்கத் தொடங்கியவன் அல்லாஹ்தான்! பிறகு அந்தப் பலவீனத்தை அடுத்து உங்களுக்கு வலிமையைத் தந்தான். பின்னர் அந்த வலிமையை அடுத்து உங்களைப் பலவீனர்களாகவும் முதியவர்களாகவும் ஆக்கினான். அவன் எதை நாடுகின்றானோ அதைப் படைக்கின்றான். மேலும், அவன் யாவற்றையும் அறிந்தவனாகவும், யாவற்றின்மீதும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.
وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یُقْسِمُ الْمُجْرِمُوْنَ ۙ۬ مَا لَبِثُوْا غَیْرَ سَاعَةٍ ؕ كَذٰلِكَ كَانُوْا یُؤْفَكُوْنَ ۟
மேலும், அந்த நேரம் வரும்போது குற்றவாளிகள், “நாங்கள் ஒரு நாழிகை நேரத்திற்குமேல் தங்கவில்லை” என்று சத்தியம் செய்து கூறுவார்கள். இதே போன்றுதான் இவர்கள் (உலக வாழ்க்கையில்) ஏமாற்றப்பட்டிருந்தார்கள்.
وَقَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ وَالْاِیْمَانَ لَقَدْ لَبِثْتُمْ فِیْ كِتٰبِ اللّٰهِ اِلٰى یَوْمِ الْبَعْثِ ؗ فَهٰذَا یَوْمُ الْبَعْثِ وَلٰكِنَّكُمْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
ஆனால் ஞானமும், இறைநம்பிக்கையும் வழங்கப்பட்டிருந்தவர்கள் கூறுவர்: “அல்லாஹ்வின் பதிவேட்டிலுள்ளபடி, மரணித்தவர்களை மீண்டும் எழுப்பும் நாள்வரை நீங்கள் தங்கியிருந்திருக்கின்றீர்கள். இதோ, எழுப்பப்படும் அந்த நாள்தான் இது. ஆயினும், நீங்கள் அறியாதவர்களாய் இருந்தீர்கள்.”
فَیَوْمَىِٕذٍ لَّا یَنْفَعُ الَّذِیْنَ ظَلَمُوْا مَعْذِرَتُهُمْ وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟
ஆக, அக்கிரமக்காரர்களுக்கு அந்நாளில் அவர்களுடைய சாக்குபோக்கு எந்த பலனையும் அளித்திடாது. மன்னிப்புக் கோரும்படி அவர்களிடம் கூறப்படவுமாட்டாது.
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِیْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ ؕ وَلَىِٕنْ جِئْتَهُمْ بِاٰیَةٍ لَّیَقُوْلَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا مُبْطِلُوْنَ ۟
நாம் இந்தக் குர்ஆனில் மக்களுக்கு விதவிதமாகப் புரியவைத்திருக்கின்றோம். நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்தாலும் சரி, ஏற்க மறுத்து விட்டவர்கள் ‘நீர் அசத்தியத்தில் இருக்கின்றீர்’ என்று கூறுவார்கள்.
كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
இவ்வாறு, அறிவில்லாதவர்களின் இதயங்களில் அல்லாஹ் முத்திரையிட்டுவிடுகின்றான்.
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلَا یَسْتَخِفَّنَّكَ الَّذِیْنَ لَا یُوْقِنُوْنَ ۟۠
எனவே (நபியே!) பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. உறுதியான நம்பிக்கை கொள்ளாதோர் உம்மை மதிப்பற்றவராக (அலட்சியத்துக்குரியவராக) காணக்கூடாது.