All Surahs

Surah 47

محمد

Muhammad

47. ஸூரத்து முஹம்மது (ஸல்)

38 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اَلَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ اَضَلَّ اَعْمَالَهُمْ ۟

எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ மேலும், அல்லாஹ்வின் வழியை விட்டுத் தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான்.

2

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰی مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ ۟

எவர்கள், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தார்களோ மேலும், முஹம்மதின் மீது இறக்கியருளப்பட்டதை அது முழுக்க முழுக்க அவர்களின் அதிபதியிடமிருந்து வந்த சத்தியமாகும் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களின் தீமைகளை அல்லாஹ் அவர்களை விட்டுக் களைந்து, அவர்களின் நிலைமையைச் சீர்திருத்திவிட்டான்.

3

ذٰلِكَ بِاَنَّ الَّذِیْنَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَاَنَّ الَّذِیْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْ ؕ كَذٰلِكَ یَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ ۟

இதற்குக் காரணம், நிராகரிப்பாளர்கள் அசத்தியத்தைப் பின்பற்றினார்கள்; ஆனால், இறைநம்பிக்கையாளர்களோ தங்களின் இறைவனிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றினார்கள். இவ்வாறு அல்லாஹ் மக்களுக்கு அவர்களின் சரியான அந்தஸ்தைக் காண்பித்துக் கொடுக்கின்றான்.

4

فَاِذَا لَقِیْتُمُ الَّذِیْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِ ؕ حَتّٰۤی اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوا الْوَثَاقَ ۙۗ فَاِمَّا مَنًّا بَعْدُ وَاِمَّا فِدَآءً حَتّٰی تَضَعَ الْحَرْبُ اَوْزَارَهَا ذٰؔلِكَ ۛؕ وَلَوْ یَشَآءُ اللّٰهُ لَانْتَصَرَ مِنْهُمْ ۙ وَلٰكِنْ لِّیَبْلُوَاۡ بَعْضَكُمْ بِبَعْضٍ ؕ وَالَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ فَلَنْ یُّضِلَّ اَعْمَالَهُمْ ۟

எனவே, இறைநிராகரிப்பாளர்களை நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால் முதல் வேலை கழுத்துகளை வெட்டுவதுதான்! அவ்வாறு அவர்களை நீங்கள் முற்றிலும் அடக்கி ஒடுக்கி விட்டால் கைதிகளை இறுக்கமாகக் கட்டிவிடுங்கள்; அதன் பிறகு (அவர்களின் மீது நீங்கள்) கருணை காட்டலாம்; அல்லது ஈட்டுத் தொகை பெறலாம்; (உங்களுக்கு இதற்கான உரிமை இருக்கிறது) போர் ஓயும் வரையில் இதுதான் நீங்கள் செய்யவேண்டிய பணி. அல்லாஹ் நாடியிருந்தால் அவனே அவர்களுக்குப் பதிலடி கொடுத்திருப்பான். ஆயினும் (இந்த வழியை அவன் மேற்கொண்டது) உங்களில் சிலரை வேறு சிலரைக் கொண்டு சோதிப்பதற்காகத்தான்! மேலும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவார்களோ, அவர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கி விட மாட்டான்.

5

سَیَهْدِیْهِمْ وَیُصْلِحُ بَالَهُمْ ۟ۚ

அவன் அவர்களுக்கு வழிகாட்டுவான்; அவர்களின் நிலைமையைச் சீர்படுத்துவான்.

6

وَیُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَّفَهَا لَهُمْ ۟

மேலும், எந்தச் சுவனத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கின்றானோ, அந்தச் சுவனத்தில் அவர்களை நுழைவிப்பான்.

7

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تَنْصُرُوا اللّٰهَ یَنْصُرْكُمْ وَیُثَبِّتْ اَقْدَامَكُمْ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவிபுரிந்தால் அவன் உங்களுக்கு உதவி வழங்குவான். மேலும், உங்களின் பாதங்களை உறுதிப்படுத்துவான்.

8

وَالَّذِیْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ ۟

ஆனால், யார் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு அழிவுதான்! மேலும், அல்லாஹ் அவர்களுடைய செயல்களைப் பயனற்றதாக்கிவிட்டிருக்கிறான்.

9

ذٰلِكَ بِاَنَّهُمْ كَرِهُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ۟

அதற்குக் காரணம், அல்லாஹ் இறக்கிவைத்ததை அவர்கள் வெறுத்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களின் செயல்களை வீணாக்கிவிட்டான்.

10

اَفَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ دَمَّرَ اللّٰهُ عَلَیْهِمْ ؗ وَلِلْكٰفِرِیْنَ اَمْثَالُهَا ۟

அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் கதி என்னவாயிற்று என்று பார்க்கவில்லையா? அவர்களுக்குரிய அனைத்தையும் அவர்களுக்கு எதிராகவே அல்லாஹ் திருப்பிவிட்டான். மேலும், இதைப் போன்ற விளைவுகள்தாம் இந்த நிராகரிப்பாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

11

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ مَوْلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَاَنَّ الْكٰفِرِیْنَ لَا مَوْلٰی لَهُمْ ۟۠

இதற்குக் காரணம், நம்பிக்கையாளர்களுக்குப் பாதுகாவலனாகவும், உதவி புரிபவனாகவும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதே! மேலும், நிராகரிப்பாளர்களுக்குப் பாதுகாவலனும் உதவியாளனும் எவரும் இல்லை.

12

اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا یَتَمَتَّعُوْنَ وَیَاْكُلُوْنَ كَمَا تَاْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۟

இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோரைத் திண்ணமாக அல்லாஹ் சுவனங்களில் புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், நிராகரிப்பாளர்கள் உலகின் சிலநாள் வாழ்வின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கால்நடைகளைப் போன்று உண்டு, பருகிக்கொண்டிருக்கின்றார்கள். மேலும், அவர்கள் இறுதியில் சென்றடையும் இடம் நரகமாகும்.

13

وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ هِیَ اَشَدُّ قُوَّةً مِّنْ قَرْیَتِكَ الَّتِیْۤ اَخْرَجَتْكَ ۚ اَهْلَكْنٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ ۟

(நபியே!) உம்மை வெளியேற்றிய உம்முடைய ஊரை விடவும் அதிக வலிமை கொண்ட எத்தனையோ ஊர்கள் இருந்திருக்கின்றன. அவற்றை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். பிறகு அவர்களைக் காப்பாற்றுபவர் யாரும் இருக்கவில்லை.

14

اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُیِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟

தம் அதிபதியிடமிருந்து வந்த தெளிவான வழிகாட்டுதலில் இருப்பவர், எவர்களுக்குத் தங்களின் தீயசெயல்கள் அழகாக்கப்பட்டு தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்களுக்கு சமம் ஆக முடியுமா, என்ன?

15

مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ فِیْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَیْرِ اٰسِنٍ ۚ وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ یَتَغَیَّرْ طَعْمُهٗ ۚ وَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۚ۬ وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّی ؕ وَلَهُمْ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ ؕ كَمَنْ هُوَ خَالِدٌ فِی النَّارِ وَسُقُوْا مَآءً حَمِیْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ ۟

இறையச்சமுள்ளவர்களுக்கு சுவனம் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது. அதன் மகத்துவம் இதுவே: அதில் தூய்மையான நீராறுகளும், சிறிதும் சுவை குன்றாத பாலாறுகளும், குடிப்பவர்களுக்கு சுவையூட்டும் மது ஆறுகளும், சுத்தமான தேன் ஆறுகளும் ஓடிக்கொண்டிருக்கும். மேலும், அங்கே அவர்களுக்கு எல்லாவிதமான கனிகளும் இருக்கும். அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் கிடைக்கும். (இத்தகைய சுவனப்பேறுகளைப் பெறும் மனிதர்களுக்கு) நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு, குடல்களெல்லாம் துண்டு துண்டாக்கப்படுகின்றவர்கள் ஒப்பாவார்களா?

16

وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ حَتّٰۤی اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا ۫ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ طَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟

அவர்களில் சிலர் உமது பேச்சைக் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். பிறகு, உம்மைவிட்டு வெளியே சென்றால், ஞானம் வழங்கப்பட்டவர்களிடம் கேட்கின்றார்கள்: ‘இவர் இப்போது என்ன சொன்னார்?’ இத்தகையோரின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். மேலும், இவர்கள் தங்களின் மன இச்சைகளைப் பின்பற்றுவோராய் இருக்கின்றனர்.

17

وَالَّذِیْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًی وَّاٰتٰىهُمْ تَقْوٰىهُمْ ۟

ஆனால், எவர்கள் நேர்வழி பெற்றிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியில் இன்னும் அதிக முன்னேற்றத்தை அளிக்கின்றான். அவர்களுக்குரிய இறையச்சம் எனும் தன்மையையும் அவர்களுக்கு வழங்குகின்றான்.

18

فَهَلْ یَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِیَهُمْ بَغْتَةً ۚ فَقَدْ جَآءَ اَشْرَاطُهَا ۚ فَاَنّٰی لَهُمْ اِذَا جَآءَتْهُمْ ذِكْرٰىهُمْ ۟

என்ன, இந்த மக்கள் மறுமைநாள் தங்களிடம் திடீரென வந்துவிட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றார்களா? அதன் அடையாளங்கள் வந்துவிட்டனவே! அந்நாளே அவர்களிடம் வந்துவிட்டால், அறிவுரையை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த வாய்ப்புதான் எஞ்சி இருக்கப்போகிறது?

19

فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰىكُمْ ۟۠

(நபியே!) நன்கு அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவரும் இல்லை. மேலும், உம் பிழைகளுக்காகவும் இறைநம்பிக்கைகொண்ட ஆண்கள், பெண்களுக்காகவும் மன்னிப்புக் கேளும்! அல்லாஹ் உங்கள் செயல்பாடுகளையும் அறிகிறான்; உங்கள் தங்குமிடத்தையும் அறிகிறான்.

20

وَیَقُوْلُ الَّذِیْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ۚ فَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِیْهَا الْقِتَالُ ۙ رَاَیْتَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ یَّنْظُرُوْنَ اِلَیْكَ نَظَرَ الْمَغْشِیِّ عَلَیْهِ مِنَ الْمَوْتِ ؕ فَاَوْلٰى لَهُمْ ۟ۚ

“(போர் புரியும் படி ஆணையிடும்) ஓர் அத்தியாயம் எதுவும் ஏன் இறக்கியருளப்படுவதில்லை?” என்று இறைநம்பிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், போர் பற்றிக் கூறப்பட்ட உறுதியான ஓர் அத்தியாயம் இறக்கியருளப்பட்டபோது, உள்ளங்களில் பிணி இருந்தவர்கள் மரணத்தால் சூழப்பட்டவன் பார்ப்பதைப் போன்று உம்மைப் பார்த்ததை நீர் கண்டீர்! அந்தோ, அவர்களுடைய நிலை பரிதாபத்துக்குரியதுதான்.

21

طَاعَةٌ وَّقَوْلٌ مَّعْرُوْفٌ ۫ فَاِذَا عَزَمَ الْاَمْرُ ۫ فَلَوْ صَدَقُوا اللّٰهَ لَكَانَ خَیْرًا لَّهُمْ ۟ۚ

‘கீழ்ப்படிந்தோம்’ என்று ஒப்புக்கொள்வதும், நல்ல நல்ல சொற்கள் பேசுவதும் (அவர்களின் உதட்டளவில்தான் உள்ளன!) திட்டவட்டமான கட்டளை கொடுக்கப்பட்டபோது, அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதியில் உண்மையானவர்களாய் அவர்கள் நடந்திருந்தால், அது அவர்களுக்கு நல்லதாய் இருந்திருக்கும்.

22

فَهَلْ عَسَیْتُمْ اِنْ تَوَلَّیْتُمْ اَنْ تُفْسِدُوْا فِی الْاَرْضِ وَتُقَطِّعُوْۤا اَرْحَامَكُمْ ۟

இனி இது தவிர வேறெதையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியுமா? நீங்கள் பின்வாங்கிச் செல்வீர்களாயின் பூமியில் நீங்கள் மீண்டும் அராஜகம் விளைவிப்பீர்கள் என்பதையும் மேலும், நீங்கள் பரஸ்பரம் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடுவீர்கள் என்பதையும் தவிர!

23

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰۤی اَبْصَارَهُمْ ۟

இத்தகையோரை அல்லாஹ் சபித்துவிட்டான். மேலும், அவர்களைச் செவிடர்களாயும், குருடர்களாயும் ஆக்கி விட்டான்.

24

اَفَلَا یَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰی قُلُوْبٍ اَقْفَالُهَا ۟

இவர்கள் குர்ஆனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களின் இதயங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா?

25

اِنَّ الَّذِیْنَ ارْتَدُّوْا عَلٰۤی اَدْبَارِهِمْ مِّنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدَی ۙ الشَّیْطٰنُ سَوَّلَ لَهُمْ ؕ وَاَمْلٰی لَهُمْ ۟

உண்மையாதெனில், எவர்கள் தங்களுக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னர் அதனைப் புறக்கணித்துச் சென்று விட்டார்களோ, அவர்களுக்கு ஷைத்தான் இந்த நடத்தையை இலகுவாக்கி விட்டான். மேலும், அவர்களுக்காக பொய்யான எதிர்பார்ப்புகளின் ஒரு படலத்தை நீட்டிக் கொண்டே போகின்றான்.

26

ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لِلَّذِیْنَ كَرِهُوْا مَا نَزَّلَ اللّٰهُ سَنُطِیْعُكُمْ فِیْ بَعْضِ الْاَمْرِ ۖۚ وَاللّٰهُ یَعْلَمُ اِسْرَارَهُمْ ۟

ஆகவேதான், அல்லாஹ் இறக்கியருளிய மார்க்கத்தை வெறுப்பவர்களிடம் அவர்கள் கூறிவிட்டார்கள், “சில விவகாரங்களில் நாங்கள் உங்களுக்குக் கீழ்ப்படிவோம்” என்று! அல்லாஹ் அவர்களின் இந்த இரகசியப் பேச்சுகளை நன்கு அறிகின்றான்.

27

فَكَیْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۟

பின்னர் அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவாறு அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றிக் கொண்டு செல்லும்போது நிலைமை எப்படியிருக்கும்?

28

ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَاۤ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ ۟۠

அதற்குக் காரணம், அல்லாஹ்வுக்குக் கோபமூட்டும் வழிமுறைகளை இவர்கள் பின்பற்றியதும், அவனது உவப்பைப் பெறும் பாதையை அவர்கள் விரும்பாததும்தான். இதனால், அவர்களின் செயல்கள் அனைத்தையும் அவன் வீணாக்கிவிட்டான்.

29

اَمْ حَسِبَ الَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ یُّخْرِجَ اللّٰهُ اَضْغَانَهُمْ ۟

எவர்களுடைய உள்ளங்களில் பிணி இருக்கிறதோ அவர்கள், தங்கள் உள்ளங்களில் உள்ள குரோதங்களை அல்லாஹ் வெளிப்படுத்தமாட்டான் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்களா, என்ன?

30

وَلَوْ نَشَآءُ لَاَرَیْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِیْمٰهُمْ ؕ وَلَتَعْرِفَنَّهُمْ فِیْ لَحْنِ الْقَوْلِ ؕ وَاللّٰهُ یَعْلَمُ اَعْمَالَكُمْ ۟

நாம் விரும்பினால் அவர்களை உமக்குக் கண் கூடாய்க் காட்டித் தந்திருப்போம். அப்போது, அவர்களின் முக அடையாளங்கள் மூலம் நீர் அவர்களை அறிந்துகொள்வீர். ஏன், அவர்கள் பேசும் தொனியிலிருந்தும் அவர்களை நீர் அறிந்துகொள்வீர். அல்லாஹ் உங்கள் அனைவரின் செயல்களையும் நன்கு அறிந்திருக்கின்றான்.

31

وَلَنَبْلُوَنَّكُمْ حَتّٰی نَعْلَمَ الْمُجٰهِدِیْنَ مِنْكُمْ وَالصّٰبِرِیْنَ ۙ وَنَبْلُوَاۡ اَخْبَارَكُمْ ۟

நாம் உங்களை நிச்சயமாகச் சோதனைக்குள்ளாக்குவோம் உங்கள் நிலைமைகளைப் பரிசீலித்து உங்களில் யார் முஜாஹிதுகள் போராளிகள், நிலைகுலையாது துணிச்சலுடன் இருப்பவர்கள் என்பதை நாம் கண்டறிவதற்காக!

32

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ وَشَآقُّوا الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمُ الْهُدٰی ۙ لَنْ یَّضُرُّوا اللّٰهَ شَیْـًٔا ؕ وَسَیُحْبِطُ اَعْمَالَهُمْ ۟

எவர்கள் நேரியவழி தங்களுக்குத் தெளிவாகி விட்ட பிறகு நிராகரிக்கவும், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கவும், தூதரைக் கடுமையாக எதிர்க்கவும் செய்தார்களோ, அவர்களால் உண்மையில் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் இழைத்திட முடியாது. மாறாக, அல்லாஹ் அவர்களுடைய செயல்கள் அனைத்தையும் பாழாக்கி விடுவான்.

33

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَكُمْ ۟

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; மேலும், உங்களுடைய செயல்களை வீணாக்கி விடாதீர்கள்.

34

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ثُمَّ مَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ۟

எவர்கள் நிராகரிப்பவர்களாகவும், இறைவழியிலிருந்து தடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்களோ, மேலும் நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்து, அதே நிலையில் மரணமும் அடைகிறார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.

35

فَلَا تَهِنُوْا وَتَدْعُوْۤا اِلَی السَّلْمِ ۖۗ وَاَنْتُمُ الْاَعْلَوْنَ ۖۗ وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ یَّتِرَكُمْ اَعْمَالَكُمْ ۟

எனவே, நீங்கள் தைரியமிழந்து விடாதீர்கள். மேலும், சமாதானத்தைக் கோராதீர்கள். நீங்கள்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள்! அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். மேலும், உங்கள் செயல்களை அவன் ஒருபோதும் வீணாக்கமாட்டான்.

36

اِنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ ؕ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا یُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا یَسْـَٔلْكُمْ اَمْوَالَكُمْ ۟

இந்த உலக வாழ்க்கை விளையாட்டும் வேடிக்கையும் ஆகும். நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தின்படி வாழ்வீர்களாயின், உங்களுக்குரிய கூலியை அல்லாஹ் உங்களுக்கு வழங்குவான். மேலும், உங்களுடைய செல்வங்களை உங்களிடம் அவன் கேட்கமாட்டான்.

37

اِنْ یَّسْـَٔلْكُمُوْهَا فَیُحْفِكُمْ تَبْخَلُوْا وَیُخْرِجْ اَضْغَانَكُمْ ۟

ஒருவேளை உங்கள் செல்வங்களை உங்களிடமிருந்து அவன் கேட்டால், மேலும் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் கேட்டால் நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; அது நீங்கள் கொண்டிருக்கும் குரோதங்களை வெளிக்கொணரும்.

38

هٰۤاَنْتُمْ هٰۤؤُلَآءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ ۚ فَمِنْكُمْ مَّنْ یَّبْخَلُ ۚ وَمَنْ یَّبْخَلْ فَاِنَّمَا یَبْخَلُ عَنْ نَّفْسِهٖ ؕ وَاللّٰهُ الْغَنِیُّ وَاَنْتُمُ الْفُقَرَآءُ ۚ وَاِنْ تَتَوَلَّوْا یَسْتَبْدِلْ قَوْمًا غَیْرَكُمْ ۙ ثُمَّ لَا یَكُوْنُوْۤا اَمْثَالَكُمْ ۟۠

இதோ! (பாருங்கள்:) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யுங்கள் என்று, உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இவ்விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுகின்ற சிலர் உங்களில் இருக்கின்றனர். ஆனால், யார் கஞ்சத்தனம் செய்கிறாரோ, அவர் உண்மையில் தன் விஷயத்திலேயே கஞ்சத்தனம் செய்து கொண்டிருக்கிறார். அல்லாஹ்வோ தேவைகள் அற்றவன். நீங்கள்தாம் (அவன் பக்கம்) தேவையுடையோர்களாய் இருக்கின்றீர்கள். நீங்கள் புறக்கணித்துவிட்டால், அல்லாஹ் உங்களுடைய இடத்தில் வேறு ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்; மேலும், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள்.

PreviousAl-AhqafNextAl-Fath

0:00–:––