وَالنَّجْمِ اِذَا هَوٰی ۟ۙ
தாரகைகளின்மீது ஆணையாக, அவை மறையும் போது!
Surah 53
An-Najm
53. ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)
62 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالنَّجْمِ اِذَا هَوٰی ۟ۙ
தாரகைகளின்மீது ஆணையாக, அவை மறையும் போது!
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوٰی ۟ۚ
உங்களின் தோழர் வழிதவறிப் போகவுமில்லை; நெறி பிறழ்ந்து செல்லவுமில்லை!
وَمَا یَنْطِقُ عَنِ الْهَوٰی ۟ؕ
மேலும், அவர்தம் மன இச்சையின்படி பேசுவதில்லை.
اِنْ هُوَ اِلَّا وَحْیٌ یُّوْحٰی ۟ۙ
இது (அவர்மீது) இறக்கியருளப்பட்ட வஹியே* ஆகும்.
عَلَّمَهٗ شَدِیْدُ الْقُوٰی ۟ۙ
மாபெரும் நுண்ணறிவாளரும் அதிக வலிமை வாய்ந்தவருமான ஒருவர் இதனை அவருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்.
ذُوْ مِرَّةٍ ؕ فَاسْتَوٰی ۟ۙ
அவர் எதிரே வந்து நின்றார் ;
وَهُوَ بِالْاُفُقِ الْاَعْلٰی ۟ؕ
உயர்ந்த வானத்தின் கீழ் விளிம்பிலிருந்தபோது!
ثُمَّ دَنَا فَتَدَلّٰی ۟ۙ
பிறகு, இன்னும் நெருங்கி வந்து அந்தரத்தில் நின்றார்.
فَكَانَ قَابَ قَوْسَیْنِ اَوْ اَدْنٰی ۟ۚ
எந்த அளவுக்கெனில், இரண்டு வில்லுக்குச் சமமான அல்லது அதைவிடக் குறைவான இடைவெளியே இருந்தது.
فَاَوْحٰۤی اِلٰی عَبْدِهٖ مَاۤ اَوْحٰی ۟ؕ
அப்போது அவர் அல்லாஹ்வின் அடியாருக்கு அறிவிக்கவேண்டிய வஹியை அறிவித்தார்.
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰی ۟
(தம்முடைய) கண்கள் கண்டதைப்பற்றி (நபியுடைய) உள்ளம் பொய்யுரைக்கவில்லை.
اَفَتُمٰرُوْنَهٗ عَلٰی مَا یَرٰی ۟
எதனை அவர் கண்களால் பார்க்கின்றாரோ அதனைப்பற்றி நீங்கள் அவருடன் தர்க்கம் செய்கிறீர்களா?
وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰی ۟ۙ
மற்றொரு முறை அவர் அவரை இறங்கிடக் கண்டார்,
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰی ۟
‘ஸித்றதுல் முன்தஹா’* அருகில்;
عِنْدَهَا جَنَّةُ الْمَاْوٰی ۟ؕ
அதன் அருகிலேயே ‘ஜன்னத்துல் மஃவா’ இருக்கிறது.
اِذْ یَغْشَی السِّدْرَةَ مَا یَغْشٰی ۟ۙ
அந்த நேரத்தில் ‘ஸித்றதுல் முன்தஹா’ எது மூடிக்கொண்டிருந்ததோ அது மூடிக் கொண்டிருந்தது.
مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰی ۟
பார்வை விலகிவிடவுமில்லை; எல்லை கடந்துவிடவுமில்லை.
لَقَدْ رَاٰی مِنْ اٰیٰتِ رَبِّهِ الْكُبْرٰی ۟
மேலும், அவர்தம் இறைவனின் பெரும் பெரும் சான்றுகளைக் கண்டார்.
اَفَرَءَیْتُمُ اللّٰتَ وَالْعُزّٰی ۟ۙ
இனி நீங்கள் சற்றுச் சொல்லுங்கள்: இந்த ‘லாத்’, ‘உஸ்ஸா’ ;
وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰی ۟
மற்றும் மூன்றாவது தேவதையான ‘மனாத்’ ஆகியவற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா?
اَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْاُ ۟
ஆண்மக்கள் உங்களுக்கும், பெண்மக்கள் இறைவனுக்குமா?
تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِیْزٰی ۟
அப்படியென்றால், இது ஒரு மோசடியான பங்கீடேயாகும்!
اِنْ هِیَ اِلَّاۤ اَسْمَآءٌ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَی الْاَنْفُسُ ۚ وَلَقَدْ جَآءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰی ۟ؕ
உண்மையில், இவையெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட சில பெயர்களேயன்றி வேறெதுவுமில்லை. இவற்றிற்கு இறைவன் எந்த ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. உண்மை யாதெனில், மக்கள் வெறும் ஊகத்தையே பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். மனம்போன போக்கில் செல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களின் அதிபதியிடமிருந்து அவர்களுக்கு வழிகாட்டல் வந்துவிட்டிருக்கின்றது.
اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰی ۟ؗۖ
மனிதன் எதை விரும்புகின்றானோ அதுவே அவனுக்கு சத்தியம் (ஹக்) ஆகிவிடுமா என்ன?
فَلِلّٰهِ الْاٰخِرَةُ وَالْاُوْلٰی ۟۠
இம்மைக்கும் மறுமைக்கும் அல்லாஹ்தான் உரிமையாளனாக இருக்கின்றான்.
وَكَمْ مِّنْ مَّلَكٍ فِی السَّمٰوٰتِ لَا تُغْنِیْ شَفَاعَتُهُمْ شَیْـًٔا اِلَّا مِنْ بَعْدِ اَنْ یَّاْذَنَ اللّٰهُ لِمَنْ یَّشَآءُ وَیَرْضٰی ۟
வானங்களில் எத்தனையோ வானவர்கள் இருக்கின்றனர். அவர்களுடைய பரிந்துரை எந்தப் பயனும் அளிக்காது எவரை அல்லாஹ் விரும்புகின்றானோ, எவரைப் பற்றிய வேண்டுகோளை செவிமடுக்க நாடுகின்றானோ, (அத்தகையவருக்காக) பரிந்துரைக்குமாறு அல்லாஹ் அனுமதித்தாலே தவிர!
اِنَّ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ لَیُسَمُّوْنَ الْمَلٰٓىِٕكَةَ تَسْمِیَةَ الْاُ ۟
ஆனால் எவர்கள் மறுமையை ஏற்பதில்லையோ அவர்கள் வானவர்களுக்குப் பெண் தெய்வங்களின் பெயர்களைச் சூட்டுகின்றார்கள்.
وَمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ ؕ اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ ۚ وَاِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ۟ۚ
உண்மை யாதெனில் இவ்விஷயத்தைக் குறித்து ஞானம் எதுவும் இவர்கள் பெற்றிருக்கவில்லை. மேலும், இவர்கள் ஊகத்தைத்தான் பின்பற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்னும் சத்தியத்திற்கு எதிரில் ஊகம் எந்தப் பயனும் தருவது இல்லை.
فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰی ۙ۬ عَنْ ذِكْرِنَا وَلَمْ یُرِدْ اِلَّا الْحَیٰوةَ الدُّنْیَا ۟ؕ
(நபியே!) எவன் நம்முடைய அறிவுரையைப் புறக்கணிக்கின்றானோ, மேலும், உலக வாழ்க்கையைத் தவிர வேறெந்த குறிக்கோளும் அவனுக்கு இல்லையோ அவனை அவனது நிலையிலேயே விட்டுவிடும்.
ذٰلِكَ مَبْلَغُهُمْ مِّنَ الْعِلْمِ ؕ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۙ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰی ۟
இவர்களின் அறிவின் எல்லை அவ்வளவுதான்! இறைவனே நன்கறிகின்றான் அவனுடைய பாதையை விட்டுப் பிறழ்ந்தவர் யார்; நேரான வழியில் இருப்பவர் யார் என்பதனை!
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۙ لِیَجْزِیَ الَّذِیْنَ اَسَآءُوْا بِمَا عَمِلُوْا وَیَجْزِیَ الَّذِیْنَ اَحْسَنُوْا بِالْحُسْنٰی ۟ۚ
மேலும், பூமி மற்றும் வானங்களிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளன் அல்லாஹ்தான்! தீமை செய்தவர்களுக்கு அவர்களின் செயல்களுக்குரிய பிரதிபலனை அல்லாஹ் கொடுப்பதற்காகவும், நற்பணி ஆற்றியவர்களுக்கு நற்கூலியை அவன் வழங்குவதற்காகவும்தான்!
اَلَّذِیْنَ یَجْتَنِبُوْنَ كَبٰٓىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَ ؕ اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ ؕ هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِیْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ ۚ فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ ؕ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰی ۟۠
அவர்களோ பெரும் பெரும் பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துக் கொள்வார்கள்; ஏதோ ஒரு சில பிழைகளைத் தவிர! சந்தேகமின்றி உம் இறைவனின் மன்னிப்பு மிகவும் விசாலமானதாகும். அவன் உங்களை எப்போது மண்ணிலிருந்து படைத்தானோ மேலும், எப்போது நீங்கள் உங்கள் அன்னையரின் வயிற்றில் கருவாக இருந்தீர்களோ அப்போதிருந்தே உங்களை அவன் நன்கு அறிந்திருக்கின்றான். எனவே, நீங்கள் உங்களைத் தூயவர்களென வாதிடாதீர்கள்! உண்மையில் யார் இறையச்சமுடையவர் என்பதை அவனே நன்கறிகின்றான்.
اَفَرَءَیْتَ الَّذِیْ تَوَلّٰی ۟ۙ
பிறகு (நபியே!) எவன் இறைவழியை விட்டு விலகிச் சென்றானோ,
وَاَعْطٰی قَلِیْلًا وَّاَكْدٰی ۟
மேலும், சிறிது வழங்கிவிட்டு பின்னர் நிறுத்திக் கொண்டானோ அவனை நீர் பார்த்ததுண்டா?
اَعِنْدَهٗ عِلْمُ الْغَیْبِ فَهُوَ یَرٰی ۟
மறைவானவற்றைப் பற்றிய ஞானம் அவனிடம் இருந்து, அதன் மூலம் யதார்த்த நிலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றானா?
اَمْ لَمْ یُنَبَّاْ بِمَا فِیْ صُحُفِ مُوْسٰی ۟ۙ
மூஸாவின் ஆகமங்களிலும்;
وَاِبْرٰهِیْمَ الَّذِیْ وَ ۟ۙ
வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமின் ஆகமங்களிலும் விவரிக்கப்பட்டுள்ள விஷயங்களைப் பற்றிய எந்தச் செய்தியும் அவனுக்குக் கிடைக்கவில்லையா, என்ன?
اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ۟ۙ
(அவையாவன): சுமை சுமக்கும் எந்த மனிதனும் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.
وَاَنْ لَّیْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰی ۟ۙ
மேலும், மனிதனுக்குதான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை!
وَاَنَّ سَعْیَهٗ سَوْفَ یُرٰی ۪۟
இன்னும், அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும்.
ثُمَّ یُجْزٰىهُ الْجَزَآءَ الْاَوْفٰی ۟ۙ
பின்னர், அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்.
وَاَنَّ اِلٰی رَبِّكَ الْمُنْتَهٰی ۟ۙ
மேலும், இறுதியில் சேரவேண்டியது உம் இறைவனிடமேயாகும்.
وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰی ۟ۙ
இன்னும், சிரிக்க வைத்தவனும் அழ வைத்தவனும் அவனே!
وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَاَحْیَا ۟ۙ
மேலும் அவனே மரணமளிக்கின்றான்; அவனே வாழ்வளிக்கின்றான்.
وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ ۟ۙ
மேலும், ஆண்பெண் ஜோடிகளை அவனே படைத்தான்;
مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰی ۪۟
தெறித்து விழும் ஒரு விந்துத் துளியிலிருந்து!
وَاَنَّ عَلَیْهِ النَّشْاَةَ الْاُخْرٰی ۟ۙ
இன்னும், மற்றொரு வாழ்க்கையை அளிப்பதும் அவனுடைய பொறுப்பேயாகும்.
وَاَنَّهٗ هُوَ اَغْنٰی وَاَقْنٰی ۟ۙ
மேலும், அவனே செல்வந்தனாக்கினான்; சொத்துக்களை வழங்கினான்.
وَاَنَّهٗ هُوَ رَبُّ الشِّعْرٰی ۟ۙ
இன்னும், அவனே ‘ஷிஃரா’*வின் அதிபதியாக இருக்கிறான்.
وَاَنَّهٗۤ اَهْلَكَ عَادَا لْاُوْلٰی ۟ۙ
மேலும், அவனே முந்தைய ‘ஆது’ சமூகத்தினரை அழித்தான்.
وَثَمُوْدَاۡ فَمَاۤ اَبْقٰی ۟ۙ
‘ஸமூது’ சமூகத்தினரையும் அவர்களில் எவரையும் பிறகு விட்டு வைக்காமல் அழித்தான்.
وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰی ۟ؕ
மேலும் அவர்களுக்கு முன்பு நூஹின் சமூகத்தினரை அழித்தான். ஏனெனில், அவர்கள் பெரும் கொடுமைக்காரர்களாகவும் வரம்பு மீறியவர்களாகவும் இருந்தனர்.
وَالْمُؤْتَفِكَةَ اَهْوٰی ۟ۙ
தலைகீழாக விழுந்த ஊர்களையும் அவன்தான் தூக்கி எறிந்தான்.
فَغَشّٰىهَا مَا غَشّٰی ۟ۚ
பின்னர் அவற்றை எது மூடியதோ, அது மூடியது.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكَ تَتَمَارٰی ۟
(அதனை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள்) ஆகவே மனிதனே, நீ உன் அதிபதியின் எந்தெந்த அருட்கொடைகளில் ஐயம் கொள்வாய்?
هٰذَا نَذِیْرٌ مِّنَ النُّذُرِ الْاُوْلٰی ۟
முன்னரே வந்துவிட்ட எச்சரிக்கைகளில் இதுவும் ஓர் எச்சரிக்கையாகும்.
اَزِفَتِ الْاٰزِفَةُ ۟ۚ
வரவேண்டிய நேரம் நெருங்கி வந்து விட்டது.
لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ كَاشِفَةٌ ۟ؕ
அதனைத் தடுத்து நிறுத்துவோர் அல்லாஹ்வை அன்றி வேறெவரும் இலர்.
اَفَمِنْ هٰذَا الْحَدِیْثِ تَعْجَبُوْنَ ۟ۙ
இனி என்ன, நீங்கள் இந்தச் செய்திகளைப் பற்றியா வியப்படைகிறீர்கள்?
وَتَضْحَكُوْنَ وَلَا تَبْكُوْنَ ۟ۙ
சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அழாமல் இருக்கிறீர்களே?
وَاَنْتُمْ سٰمِدُوْنَ ۟
ஆடிப்பாடி இதனைத் தடுக்க முயலுகிறீர்களா?
فَاسْجُدُوْا لِلّٰهِ وَاعْبُدُوْا ۟
பணிந்து விடுங்கள், அல்லாஹ்வின் முன்பு! மேலும் (அவனுக்கே) அடிபணிந்துவிடுங்கள்.