اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ۟
மறுமைக்கான நேரம் நெருங்கிவிட்டது. மேலும், சந்திரன் பிளந்து விட்டது.
Surah 54
Al-Qamar
54. ஸூரத்துல் கமர் (சந்திரன்)
55 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ۟
மறுமைக்கான நேரம் நெருங்கிவிட்டது. மேலும், சந்திரன் பிளந்து விட்டது.
وَاِنْ یَّرَوْا اٰیَةً یُّعْرِضُوْا وَیَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ ۟
ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக்கணிக்கின்றார்கள். மேலும், “இது எப்போதும் நடைபெறுகின்ற சூனியம்தான்” என்றும் சொல்கின்றார்கள்.
وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ ۟
இவர்கள் (இதனையும்) பொய்யெனக் கூறிவிட்டார்கள். மேலும், தங்கள் மன இச்சைகளையே பின்பற்றினார்கள். ஒவ்வொரு விவகாரமும் ஒரு முடிவை அடைந்தே தீரும்.
وَلَقَدْ جَآءَهُمْ مِّنَ الْاَنْۢبَآءِ مَا فِیْهِ مُزْدَجَرٌ ۟ۙ
மேலும், இவர்களிடம் (முந்தைய சமுதாயங்களின்) செய்திகள் வந்துவிட்டிருக்கின்றன. அவற்றில் வரம்பு மீறிய நடத்தையை விட்டு விலகி இருப்பவர்களுக்கு போதுமான படிப்பினைகள் உள்ளன;
حِكْمَةٌ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُ ۟ۙ
மேலும், அறிவுரையின் நோக்கத்தை முழுவதுமாக நிறைவேற்றும் விவேகமும் உள்ளது. ஆனால் எச்சரிக்கைகள் இவர்களுக்குப் பலன் அளிக்கவில்லை.
فَتَوَلَّ عَنْهُمْ ۘ یَوْمَ یَدْعُ الدَّاعِ اِلٰی شَیْءٍ نُّكُرٍ ۟ۙ
எனவே (நபியே!) இவர்களைப் பொருட்படுத்தாதீர். மிகவும் வெறுப்புக்குரிய ஒரு விஷயத்தின் பக்கம் அழைக்கக்கூடியவர் அழைக்கும் நாளில்;
خُشَّعًا اَبْصَارُهُمْ یَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌ ۟ۙ
மக்கள் பயந்த பார்வைகளுடன் தங்களுடைய மண்ணறைகளிலிருந்து வெளிவருவார்கள்; சிதறிய வெட்டுக்கிளிகளைப்போல்
مُّهْطِعِیْنَ اِلَی الدَّاعِ ؕ یَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا یَوْمٌ عَسِرٌ ۟
அழைக்கக் கூடியவர்களை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள். (உலகில் இதனை மறுத்துக்கொண்டிருந்த) அதே நிராகரிப்பாளர்கள் அப்போது கூறுவார்கள்: “இந்த நாளோ பெரும் கடினமானதாக இருக்கின்றதே!”
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ ۟
இவர்களுக்கு முன்பு நூஹின் சமுதாயத்தினர் பொய்யெனத் தூற்றினர். அவர்கள் நம் அடியாரைப் பொய்யர் எனத் தூற்றினார்கள். “இவர் ஒரு பைத்தியக்காரர்” என்று சொன்னார்கள். மேலும், அவர் மிக மோசமாக மிரட்டப்பட்டார்.
فَدَعَا رَبَّهٗۤ اَنِّیْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ ۟
இறுதியில் அவர் தம் அதிபதியை அழைத்தார்: “நான் தோற்றுப்போய் இருக்கின்றேன். நீ இப்போது இவர்களைப் பழி வாங்குவாயாக!”
فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ۟ؗۖ
அப்போது வானின் வாயில்களைத் திறந்துவிட்டு, மழையைக் கொட்டச் செய்தோம்.
وَّفَجَّرْنَا الْاَرْضَ عُیُوْنًا فَالْتَقَی الْمَآءُ عَلٰۤی اَمْرٍ قَدْ قُدِرَ ۟ۚ
மேலும், பூமியைப் பிளந்து (அதனை) நீரூற்றுகளாக மாற்றிவிட்டோம். மேலும் நிர்ணயிக்கப்பட்டுவிட்ட பணியை நிறைவேற்றுவதற்காக இந்தத் தண்ணீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டது.
وَحَمَلْنٰهُ عَلٰی ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍ ۟ۙ
மேலும், மரப்பலகைகளால் செய்யப்பட்டு ஆணிகள் அறையப்பட்டதில் (கப்பலில்) நாம் நூஹை ஏற்றினோம்.
تَجْرِیْ بِاَعْیُنِنَا ۚ جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ ۟
அது நமது கண்காணிப்பில் சென்று கொண்டிருந்தது. (அவர்களுக்கு) நாம் அளித்த பிரதிபலனாகும் இது, அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம்!
وَلَقَدْ تَّرَكْنٰهَاۤ اٰیَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
அந்தக் கப்பலை நாம் ஒரு சான்றாக விட்டு வைத்தோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?
كَذَّبَتْ عَادٌ فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
‘ஆத்’ சமுதாயத்தினர் பொய்யென வாதிட்டார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்: அப்போது எப்படி இருந்தது நான் அளித்த வேதனை! மேலும், எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْ یَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ ۟ۙ
நீடித்த துர்ப்பாக்கியத்திற்குரிய ஒரு நாளில் நாம் கடுமையான புயல்காற்றை அவர்களின் மீது அனுப்பினோம்.
تَنْزِعُ النَّاسَ ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ ۟
அது மக்களை வேகமாகத் தூக்கி எறிந்துகொண்டிருந்தது. அப்போது அவர்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்ச மரத்தின் தடிகளைப் போன்று ஆனார்கள்.
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
பார்த்துக் கொள்ளுங்கள்: எப்படி இருந்தது நான் அளித்த வேதனை; எப்படி இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ ۟
‘ஸமூத்’ சமுதாயத்தினரும் எச்சரிக்கைகளைப் பொய்யென வாதிட்டார்கள்.
فَقَالُوْۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّفِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟
மேலும், கூறலானார்கள்: “நம்மிலுள்ள ஒரு தனிப்பட்ட மனிதரையா நாம் பின்பற்றிச் செல்வது? அவரைப் பின்பற்றிச் செல்வதற்கு ஏற்றுக்கொண்டோமானால், நாம் வழிகெட்டுப் போய் விட்டோம்; நமது புத்தி பேதலித்துவிட்டது என்பது அதன் பொருளாகும்.
ءَاُلْقِیَ الذِّكْرُ عَلَیْهِ مِنْ بَیْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ ۟
இறைவனின் அறிவுரை அருளப்படுவதற்கு நமக்கு மத்தியில் இவர் ஒருவர்தான் இருக்கின்றாரா, என்ன?”
سَیَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ ۟
(நாம் நம்முடைய தூதரிடம் கூறினோம்:) “நாளையதினம் இவர்களுக்குத் தெரிந்துவிடும்; யார் வடிகட்டிய பொய்யர், தற்பெருமைக்காரர் என்று!
اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ ۟ؗ
நாம் பெண் ஒட்டகத்தை இவர்களுக்குச் சோதனையாக ஆக்கி அனுப்புகின்றோம். எனவே, இப்போது சற்றுப் பொறுத்திருந்து பாரும்; இவர்களின் கதி என்னவாகிறது என்று!
وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ بَیْنَهُمْ ۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ ۟
தண்ணீர் இவர்களுக்கும் ஒட்டகத்துக்கும் இடையே பங்கிடப்படும் என்றும், ஒவ்வொருவரும் (தம் முறை நாளில் தண்ணீருக்கு) வர வேண்டும் என்றும் இவர்களுக்கு அறிவித்துவிடும்.”
فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰی فَعَقَرَ ۟
இறுதியில், அவர்கள் தங்களுடைய ஆளை அழைத்தார்கள். அவர் இந்தப் பணியை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் ஒட்டகத்தைக் கொன்றுவிட்டார்.
فَكَیْفَ كَانَ عَذَابِیْ وَنُذُرِ ۟
பிறகு பார்த்துக்கொள்ளுங்கள்: எவ்வளவு கொடூரமாக இருந்தது நான் அளித்த வேதனை; எவ்வளவு உண்மையானவையாக இருந்தன என்னுடைய எச்சரிக்கைகள்!
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ صَیْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِیْمِ الْمُحْتَظِرِ ۟
நாம் ஒரேயொரு ஓசையைத்தான் அவர்களின் மீது அனுப்பினோம். உடனே அவர்கள், தொழுவத்தில் மிதித்து நசுக்கப்பட்ட வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள்.
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ بِالنُّذُرِ ۟
லூத்தின் சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யென வாதித்தார்கள்.
اِنَّاۤ اَرْسَلْنَا عَلَیْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍ ؕ نَجَّیْنٰهُمْ بِسَحَرٍ ۟ۙ
நாம் கல்மாரி பொழியும் காற்றை அவர்கள் மீது ஏவினோம். லூத்தின் குடும்பத்தினர் மட்டுமே அதிலிருந்து பாதுகாப்பாக இருந்தனர். நாம் நம்முடைய அருளினால் இரவின் பின்நேரத்தில் அவர்களைக் காப்பாற்றி வெளியே கொண்டுவந்தோம்.
نِّعْمَةً مِّنْ عِنْدِنَا ؕ كَذٰلِكَ نَجْزِیْ مَنْ شَكَرَ ۟
இவ்வாறே நாம் கூலி வழங்குகின்றோம்; நன்றி செலுத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும்!
وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ ۟
லூத் தம்முடைய சமூக மக்களுக்கு நம்முடைய தண்டனையைக் குறித்து எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அவர்கள் எல்லா எச்சரிக்கைகளையும் சந்தேகமானவை எனக் கருதி எள்ளி நகையாடிக் கொண்டிருந்தார்கள்.
وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَیْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْیُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
பின்னர் அவருடைய விருந்தாளிகளைப் பாதுகாப்பதிலிருந்து அவரை விலகியிருக்கச் செய்ய அவர்கள் முயற்சி செய்தார்கள். இறுதியில், நாம் அவர்களுடைய கண்களை அவித்துவிட்டோம். சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும்!
وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ ۟ۚ
அதிகாலையில் ஒரு மாபெரிய வேதனை அவர்களை வந்தடைந்தது.
فَذُوْقُوْا عَذَابِیْ وَنُذُرِ ۟
சுவையுங்கள், இப்போது நான் அளிக்கும் வேதனையையும் என்னுடைய எச்சரிக்கைகளையும்
وَلَقَدْ یَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟۠
நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுவதற்கு எவரேனும் இருக்கின்றாரா?
وَلَقَدْ جَآءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُ ۟ۚ
மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடம் எச்சரிக்கைகள் வந்திருந்தன.
كَذَّبُوْا بِاٰیٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِیْزٍ مُّقْتَدِرٍ ۟
ஆனால் அவர்கள் நம்முடைய சான்றுகள் அனைத்தையும் பொய்யென்று வாதித்தார்கள். இறுதியில், நாம் அவர்கள் அனைவரையும் பிடித்துக் கொண்டோம். யாவரையும் மிகைத்த, வலிமை மிக்க ஒருவன் பிடிப்பதைப் போன்று!
اَكُفَّارُكُمْ خَیْرٌ مِّنْ اُولٰٓىِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِی الزُّبُرِ ۟ۚ
என்ன, உங்களுடைய நிராகரிப்பாளர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களா? அல்லது வான்மறைகளில் உங்களுக்காகப் பாவமன்னிப்பு ஏதும் எழுதப்பட்டு இருக்கிறதா?
اَمْ یَقُوْلُوْنَ نَحْنُ جَمِیْعٌ مُّنْتَصِرٌ ۟
அல்லது ‘நாங்கள் ஒரு பலமிக்க குழுவினர் ஆவோம். எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம்’ என்று இந்த மக்கள் கூறுகின்றார்களா?
سَیُهْزَمُ الْجَمْعُ وَیُوَلُّوْنَ الدُّبُرَ ۟
இந்தக் குழு அதி விரைவில் தோல்வி அடைவதையும், அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதையும் காணலாம்.
بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰی وَاَمَرُّ ۟
இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில் வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமைநாளாகும். மேலும், அது பெரும் ஆபத்தான, மிகவும் கசப்பான நேரமாகும்.
اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ ضَلٰلٍ وَّسُعُرٍ ۟ۘ
இந்தக் குற்றவாளிகள் உண்மையில் தவறான கருத்துக்களில் உழல்கின்றார்கள். மேலும், இவர்களின் புத்தி பேதலித்திருக்கிறது.
یَوْمَ یُسْحَبُوْنَ فِی النَّارِ عَلٰی وُجُوْهِهِمْ ؕ ذُوْقُوْا مَسَّ سَقَرَ ۟
இவர்கள் நரக நெருப்பில் முகங்குப்புற இழுத்துச் செல்லப்படும் நாளில் அவர்களிடம் கூறப்படும்: “இப்போது சுவையுங்கள், நரக நெருப்பின் தீண்டுதலை!”
اِنَّا كُلَّ شَیْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ ۟
நிச்சயமாக நாம் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட விதிமுறையின்படி படைத்திருக்கின்றோம்.
وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ ۟
மேலும், நமது கட்டளை ஒரே ஒரு கட்டளையாகவே இருக்கின்றது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அது அமலுக்கு வந்துவிடுகின்றது.
وَلَقَدْ اَهْلَكْنَاۤ اَشْیَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ۟
உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். பின்னர் அறிவுரை பெறுபவர் எவரேனும் இருக்கின்றாரா?
وَكُلُّ شَیْءٍ فَعَلُوْهُ فِی الزُّبُرِ ۟
இவர்கள் செய்தவை அனைத்தும் பதிவேடுகளில் பதிக்கப்பட்டுள்ளன.
وَكُلُّ صَغِیْرٍ وَّكَبِیْرٍ مُّسْتَطَرٌ ۟
ஒவ்வொரு சிறிய பெரிய விஷயமும் எழுதப்பட்டுள்ளது.
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَهَرٍ ۟ۙ
மாறு செய்வதை விட்டு விலகி இருப்பவர்கள் திண்ணமாக சுவனங்களிலும் ஆறுகளிலும் தங்கி இருப்பார்கள்.
فِیْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِیْكٍ مُّقْتَدِرٍ ۟۠
உண்மையான கண்ணியத்திற்குரிய இடத்தில், பெரும் அதிகாரம் உடைய அரசனுக்கருகில்!