یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّیْ وَعَدُوَّكُمْ اَوْلِیَآءَ تُلْقُوْنَ اِلَیْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَآءَكُمْ مِّنَ الْحَقِّ ۚ یُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِیَّاكُمْ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْ ؕ اِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِیْ سَبِیْلِیْ وَابْتِغَآءَ مَرْضَاتِیْ تُسِرُّوْنَ اِلَیْهِمْ بِالْمَوَدَّةِ ۖۗ وَاَنَا اَعْلَمُ بِمَاۤ اَخْفَیْتُمْ وَمَاۤ اَعْلَنْتُمْ ؕ وَمَنْ یَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟
இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் என் வழியில் அறப்போர் செய்வதற்காகவும், எனது உவப்பைப் பெறுவதற்காகவும் (தாயகத்தைத் துறந்து இல்லங்களை விட்டு) வெளியேறி இருந்தால், எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் அவர்களுடன் நட்புறவு வைக்கின்றீர்கள். ஆனால், அவர்களோ உங்களிடம் வந்துள்ள சத்தியத்தை ஏற்க மறுத்துவிட்டிருக்கிறார்கள். மேலும், அவர்களின் நடத்தை இதுவே: இறைத்தூதரையும் உங்களையும், நீங்கள் உங்கள் அதிபதியாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள் எனும் தவறுக்காக நாடுகடத்துகின்றார்கள். ஆனால் நீங்களோ அவர்களுக்கு இரகசியமாக நட்புத்தூதை அனுப்புகிறீர்கள். ஆயினும், நீங்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் செய்யும் அனைத்தையும் நான் நன்கு அறிகின்றேன். உங்களில் யாரேனும் இவ்வாறு செய்தால், திண்ணமாக அவர் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்தவராவார்.