تَبٰرَكَ الَّذِیْ بِیَدِهِ الْمُلْكُ ؗ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرُ ۟ۙ
யாருடைய கைவசத்தில் (பேரண்டத்தின்) ஆட்சியதிகாரம் உள்ளதோ அவன் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாவான். மேலும், அவன் அனைத்துப் பொருளின் மீதும் ஆற்றல் பெற்றவனாக உள்ளான்.
Surah 67
Al-Mulk
67. ஸூரத்துல் முல்க் (ஆட்சி)
30 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
تَبٰرَكَ الَّذِیْ بِیَدِهِ الْمُلْكُ ؗ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرُ ۟ۙ
யாருடைய கைவசத்தில் (பேரண்டத்தின்) ஆட்சியதிகாரம் உள்ளதோ அவன் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாவான். மேலும், அவன் அனைத்துப் பொருளின் மீதும் ஆற்றல் பெற்றவனாக உள்ளான்.
لَّذِیْ خَلَقَ الْمَوْتَ وَالْحَیٰوةَ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِیْزُ الْغَفُوْرُ ۟ۙ
அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.
الَّذِیْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ؕ مَا تَرٰی فِیْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ ؕ فَارْجِعِ الْبَصَرَ ۙ هَلْ تَرٰی مِنْ فُطُوْرٍ ۟
அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். கருணைமிக்க இறைவனின் படைப்பில் எந்த முரண்பாட்டையும் நீர் காணமாட்டீர்! பிறகு, திரும்பவும் பாரீர்! எங்காவது பழுதுகளேதும் உமக்குத் தென்படுகின்றதா?
ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَیْنِ یَنْقَلِبْ اِلَیْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِیْرٌ ۟
மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்துவீர்! உமது பார்வை தளர்வுற்று, தோல்வியடைந்த நிலையில் திரும்பும்!
وَلَقَدْ زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّیٰطِیْنِ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِیْرِ ۟
நாம் உங்களுக்கு அருகிலிருக்கும் வானத்தை மாபெரும் விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை நாம் ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்துவிட் டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
وَلِلَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
எவர்கள் தங்களுடைய அதிபதியை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக வேதனை இருக்கின்றது. அது மிகவும் கேடுகெட்ட இருப்பிடமாகும்.
اِذَاۤ اُلْقُوْا فِیْهَا سَمِعُوْا لَهَا شَهِیْقًا وَّهِیَ تَفُوْرُ ۟ۙ
அதில் அவர்கள் வீசியெறியப்படும்போது அதனுடைய கடுமையான கர்ஜனையைக் கேட்பார்கள். அது கொதித்துக் கொண்டிருக்கும்
تَكَادُ تَمَیَّزُ مِنَ الْغَیْظِ ؕ كُلَّمَاۤ اُلْقِیَ فِیْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ نَذِیْرٌ ۟
கடுமையான கோபத்தால் வெடித்துவிடுவது போல் இருக்கும். ஒவ்வொரு குழுக்களும் அதில் தள்ளப்படும்போது அதன் பாதுகாவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள், “எச்சரிக்கை செய்பவர் எவரும் உங்களிடம் வரவில்லையா?” என்று!
قَالُوْا بَلٰی قَدْ جَآءَنَا نَذِیْرٌ ۙ۬ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَیْءٍ ۖۚ اِنْ اَنْتُمْ اِلَّا فِیْ ضَلٰلٍ كَبِیْرٍ ۟
அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள்: “ஆம்! எச்சரிக்கை செய்பவர் எங்களிடம் வந்திருந்தார். ஆனால் நாங்கள் அவரைப் பொய்யரெனத் தூற்றினோம். அல்லாஹ் எதனையும் இறக்கி வைக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றீர்கள் என்றும் கூறினோம்.”
وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِیْۤ اَصْحٰبِ السَّعِیْرِ ۟
மேலும் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் செவிதாழ்த்திக் கேட்பவர்களாய் அல்லது புரிந்துகொள்பவர்களாய் இருந்திருந்தால், (இன்று) நாங்கள் கொழுந்து விட்டெரியும் இந்த நெருப்பின் தண்டனைக்குரியவர்களோடு சேர்ந்திருக்க மாட்டோம்.”
فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْ ۚ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِیْرِ ۟
இவ்வாறு அவர்களே தங்களின் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். சாபம் உண்டாகட்டும், இந்த நரகவாசிகள் மீது!
اِنَّ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟
பார்க்காமலேயே தங்களின் அதிபதிக்கு எவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மன்னிப்பும் பெரும் கூலியும் உண்டு.
وَاَسِرُّوْا قَوْلَكُمْ اَوِ اجْهَرُوْا بِهٖ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படையாகப் பேசினாலும் சரி! (அல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்!) திண்ணமாக அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறிகிறான்.
اَلَا یَعْلَمُ مَنْ خَلَقَ ؕ وَهُوَ اللَّطِیْفُ الْخَبِیْرُ ۟۠
எவன் படைத்து இருக்கின்றானோ அவன் அறியமாட்டானா என்ன? அவன் நுணுக்கமானவனாகவும் நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِیْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ ؕ وَاِلَیْهِ النُّشُوْرُ ۟
அவனே பூமியை உங்களுக்கு வசப்பட்டதாக அமைத்து வைத்திருக்கின்றான். அதன் மார்பின் மீது நடந்து செல்லுங்கள். மேலும் அல்லாஹ்வின் உணவை உண்ணுங்கள். நீங்கள் (மரணித்த பின்) மீண்டும் உயிர் பெற்று அவனிடமே செல்ல வேண்டி இருக்கிறது.
ءَاَمِنْتُمْ مَّنْ فِی السَّمَآءِ اَنْ یَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِیَ تَمُوْرُ ۟ۙ
வானத்திலிருப்பவன் உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும் அப்போது உடனே பூமி அதிரத் தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா?
اَمْ اَمِنْتُمْ مَّنْ فِی السَّمَآءِ اَنْ یُّرْسِلَ عَلَیْكُمْ حَاصِبًا ؕ فَسَتَعْلَمُوْنَ كَیْفَ نَذِیْرِ ۟
அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? பிறகு உங்களுக்குத் தெரிந்துவிடும், எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று!
وَلَقَدْ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟
இவர்களுக்கு முன்னர் சென்றுபோன மக்கள் பொய்யென வாதிட்டிருக்கின்றார்கள். பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்; என்னுடைய பிடி எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை!
اَوَلَمْ یَرَوْا اِلَی الطَّیْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّیَقْبِضْنَ ؔؕۘ مَا یُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ ؕ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ بَصِیْرٌ ۟
சிறகுகளை விரித்தும் மடக்கியும் தங்களுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா என்ன? அவற்றைத் தடுத்து வைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறு எவருமில்லை! திண்ணமாக, அவனே ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
اَمَّنْ هٰذَا الَّذِیْ هُوَ جُنْدٌ لَّكُمْ یَنْصُرُكُمْ مِّنْ دُوْنِ الرَّحْمٰنِ ؕ اِنِ الْكٰفِرُوْنَ اِلَّا فِیْ غُرُوْرٍ ۟ۚ
சொல்லுங்கள் பார்ப்போம்; கருணைமிக்க இறைவனுக்கு எதிராக உங்களுக்கு உதவி புரிவதற்கு உங்களிடம் எந்தப் படை இருக்கிறது? உண்மை யாதெனில், இந்த நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள்
اَمَّنْ هٰذَا الَّذِیْ یَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ ۚ بَلْ لَّجُّوْا فِیْ عُتُوٍّ وَّنُفُوْرٍ ۟
அல்லது கருணைமிக்க இறைவன் தான் வழங்கும் உணவை நிறுத்திக்கொண்டால் பிறகு, உங்களுக்கு உணவு வழங்குவது யார் என்பதைச் சொல்லுங்கள் பார்ப்போம்! உண்மை யாதெனில், இவர்கள் வரம்பை மீறுவதிலும், சத்தியத்தைப் புறக்கணிப்பதிலும் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.
اَفَمَنْ یَّمْشِیْ مُكِبًّا عَلٰی وَجْهِهٖۤ اَهْدٰۤی اَمَّنْ یَّمْشِیْ سَوِیًّا عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
சற்று சிந்தித்துப் பாருங்கள்! முகங்குப்புற நடந்து செல்பவன் மிகச் சரியான வழியை அடைபவனா? அல்லது தலைநிமிர்ந்து ஒரு நேரான வழியில் நடந்து சென்று கொண்டிருப்பவனா?
قُلْ هُوَ الَّذِیْۤ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟
(இவர்களிடம்) கூறும்: “அல்லாஹ்தான் உங்களைப் படைத்து, கேட்கின்ற மற்றும் பார்க்கின்ற ஆற்றல்களையும் சிந்தித்துணரும் உள்ளங்களையும் உங்களுக்கு வழங்கியுள்ளான்.” ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
قُلْ هُوَ الَّذِیْ ذَرَاَكُمْ فِی الْاَرْضِ وَاِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
(இவர்களிடம் கூறும்:) “அல்லாஹ்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். அவனிடமே நீங்கள் ஒன்றுதிரட்டப்பட இருக்கின்றீர்கள்.”
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
மேலும் இவர்கள் கேட்கின்றார்கள்: “இந்த வாக்குறுதி எப்போது நிறைவேறும்? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், காண்பித்துத் தாருங்கள்!”
قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۪ وَاِنَّمَاۤ اَنَا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
நீர் கூறும்: “இதனைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது. நானோ தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டும்தான்!”
فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِیْٓـَٔتْ وُجُوْهُ الَّذِیْنَ كَفَرُوْا وَقِیْلَ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ ۟
பின்னர், அவர்கள் அதை அருகில் பார்க்கும் போது, எவர்கள் அதை நிராகரித்தார்களோ அவர்களின் முகங்கள் அலங்கோலமாகிவிடும். (அவர்களிடம்) கூறப்படும்: “நீங்கள் எதனைக் குறித்து வற்புறுத்திக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!”
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَهْلَكَنِیَ اللّٰهُ وَمَنْ مَّعِیَ اَوْ رَحِمَنَا ۙ فَمَنْ یُّجِیْرُ الْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ اَلِیْمٍ ۟
(இவர்களிடம்) கேளும்: “அல்லாஹ் என்னையும் என் தோழர்களையும் அழித்துவிட்டால் அல்லது எங்கள் மீது கருணை புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிப்பாளர்களைக் காப்பாற்றுபவன் யார் என்பதை எப்போதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?”
قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَیْهِ تَوَكَّلْنَا ۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
மேலும் (இவர்களிடம்) கூறும்: “அவன் பெரும் கருணையாளனாவான். அவன் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அவனையே நாங்கள் முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடப்பவன் யார் என்பது விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ یَّاْتِیْكُمْ بِمَآءٍ مَّعِیْنٍ ۟۠
(இவர்களிடம்) கேளும்: “உங்கள் (கிணறுகளின்) நீர் பூமிக்குள் போய்விட்டால் பிறகு தண்ணீர் ஊற்றுகளை உங்களுக்கு வெளிக்கொணர்பவன் யார் என்பதையும் நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா?”