لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ
இல்லை! நான் மறுமைநாளின் மீது சத்தியம் செய்கின்றேன்.
Surah 75
Al-Qiyamah
75. ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)
40 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ
இல்லை! நான் மறுமைநாளின் மீது சத்தியம் செய்கின்றேன்.
وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ۟ؕ
இல்லவே இல்லை; இடித்துரைக்கும் மனத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ ۟ؕ
அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்றுதிரட்ட முடியாது என்று மனிதன் கருதிக் கொண்டிருக்கின்றானா?
بَلٰى قٰدِرِیْنَ عَلٰۤی اَنْ نُّسَوِّیَ بَنَانَهٗ ۟
ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக்கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம்.
بَلْ یُرِیْدُ الْاِنْسَانُ لِیَفْجُرَ اَمَامَهٗ ۟ۚ
ஆனால், மனிதன் எதிர்காலத்திலும் தீமைகளைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகின்றான்.
یَسْـَٔلُ اَیَّانَ یَوْمُ الْقِیٰمَةِ ۟ؕ
“அந்த மறுமைநாள் எப்போது வரும்?” என்று அவன் கேட்கின்றான்.
فَاِذَا بَرِقَ الْبَصَرُ ۟ۙ
பிறகு, பார்வை நிலைகுத்தி விடும்போது,
وَخَسَفَ الْقَمَرُ ۟ۙ
மேலும், சந்திரன் ஒளி குன்றிப் போகும்போது,
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ ۟ۙ
மேலும் சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைக்கப்படும்போது;
یَقُوْلُ الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ اَیْنَ الْمَفَرُّ ۟ۚ
அந்நாளில் இதே மனிதன் “நான் எங்கே சென்று ஓடி ஒளிவது?” என்று கேட்பான்.
كَلَّا لَا وَزَرَ ۟ؕ
ஒருபோதுமில்லை! அங்கு எந்தப் புகலிடமும் இருக்காது.
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ لْمُسْتَقَرُّ ۟ؕ
அந்த நாளில் உன் அதிபதியின் முன்பே சென்றடைய வேண்டியிருக்கும்.
یُنَبَّؤُا الْاِنْسَانُ یَوْمَىِٕذٍۭ بِمَا قَدَّمَ وَاَخَّرَ ۟ؕ
அந்த நாளில் மனிதனுக்கு, அவனுடைய முந்தைய, பிந்தைய செயல்கள் அனைத்தும் எடுத்துக் காண்பிக்கப்படும்.
بَلِ الْاِنْسَانُ عَلٰی نَفْسِهٖ بَصِیْرَةٌ ۟ۙ
ஏன், மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான்;
وَّلَوْ اَلْقٰى مَعَاذِیْرَهٗ ۟ؕ
அவன் எவ்வளவுதான் சாக்கு போக்குகளைக் கூறினாலும் சரியே!
لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ ۟ؕ
(நபியே!) இந்த வஹியை* அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்!
اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۟ۚۖ
அதை நினைவில் நிறுத்தச் செய்வதும், ஓதும்படிச் செய்வதும் நமது பொறுப்பாகும்;
فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۟ۚ
ஆகையால் நாம் இதனை ஓதிக் காட்டும்போது அவ்வாறு ஓதிக்காட்டுவதை நீர் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கவும்.
ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗ ۟ؕ
பின்னர், இதன் கருத்தை விளக்குவதும் நமது பொறுப்பே ஆகும்.
كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۟ۙ
ஒருபோதுமில்லை. உண்மை யாதெனில், நீங்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடியதை (அதாவது இம்மையை) நேசிக்கின்றீர்கள்;
وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ
மறுமையை விட்டுவிடுகின்றீர்கள்.
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌ ۟ۙ
அந் நாளில் சில முகங்கள் பொலிவுடன் விளங்கும்;
اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۟ۚ
தம்முடைய அதிபதியைப் பார்த்த வண்ணமிருக்கும்.
وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍۭ بَاسِرَةٌ ۟ۙ
வேறுசில முகங்கள் துயரமடைந்திருக்கும்.
تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۟ؕ
மேலும், இடுப்பை முறிக்கும் அனுபவங்கள் அவற்றிற்கு ஏற்படப்போகின்றன என்று புரிந்து கொண்டிருக்கும்.
كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۟ۙ
ஒருபோதுமில்லை! உயிர் தொண்டை வரை எட்டும்போது,
وَقِیْلَ مَنْ ٚ رَاقٍ ۟ۙ
மேலும், “மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா?” என்று கேட்கப்படும்போது,
وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُ ۟ۙ
மேலும் இது உலகைவிட்டுப் பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்துகொள்ளும் போது,
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۟ۙ
கெண்டைக்கால், கெண்டைக்காலுடன் பின்னிப் பிணையும் போது,
اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ لْمَسَاقُ ۟ؕ۠
அந்நாளில்தான் உன் அதிபதியின் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.
فَلَا صَدَّقَ وَلَا صَلّٰى ۟ۙ
ஆனால், அவன் உண்மையென ஏற்கவுமில்லை; தொழவுமில்லை.
وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰى ۟ۙ
மாறாகப் பொய்யென வாதிட்டான்; திரும்பிச் சென்றான்.
ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهْلِهٖ یَتَمَطّٰى ۟ؕ
பின்னர், ஆணவம் கொண்டு தன் குடும்பத்தாரிடம் சென்றுவிட்டான்.
اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ۙ
இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது!
ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ؕ
ஆம்! இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது!
اَیَحْسَبُ الْاِنْسَانُ اَنْ یُّتْرَكَ سُدًی ۟ؕ
மனிதன் வெறுமனே விட்டுவிடப்படுவான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றானா என்ன?
اَلَمْ یَكُ نُطْفَةً مِّنْ مَّنِیٍّ یُّمْنٰى ۟ۙ
(கருவறையில்) செலுத்தப்படும் அற்பமான இந்திரியத் துளியாய் அவன் இருக்கவில்லையா?
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰى ۟ۙ
பின்னர் அவன் ஓர் இரத்தக்கட்டியாக ஆனான். பின்னர், அல்லாஹ் அவனுடைய உடலைப் படைத்தான். அவனுடைய உறுப்புகளைப் பொருத்தமாக அமைத்தான்.
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ
பிறகு, அவனிலிருந்து ஆண் பெண் என இரு இனங்களை உருவாக்கினான்.
اَلَیْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰى ۟۠
இத்தகைய இறைவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் இல்லையா, என்ன?