هَلْ اَتٰی عَلَی الْاِنْسَانِ حِیْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ یَكُنْ شَیْـًٔا مَّذْكُوْرًا ۟
மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா?
Surah 76
Al-Insan
76. ஸூரத்துத் தஹ்ர் (காலம்)
31 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
هَلْ اَتٰی عَلَی الْاِنْسَانِ حِیْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ یَكُنْ شَیْـًٔا مَّذْكُوْرًا ۟
மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா?
اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ ۖۗ نَّبْتَلِیْهِ فَجَعَلْنٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟
நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்; நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம் அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
اِنَّا هَدَیْنٰهُ السَّبِیْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا ۟
நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி, அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம்.
اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَلٰسِلَاۡ وَاَغْلٰلًا وَّسَعِیْرًا ۟
நன்றி கொல்பவர்களுக்குத் திண்ணமாக, நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
اِنَّ الْاَبْرَارَ یَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا ۟ۚ
நன்மக்கள் (சுவனத்தில்) கிண்ணங்களிலிருந்து கற்பூரம் கலந்திருக்கும் மது அருந்துவார்கள்.
عَیْنًا یَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ یُفَجِّرُوْنَهَا تَفْجِیْرًا ۟
அது ஓடிக் கொண்டிருக்கும் ஊற்றின் நீராகும். இதன் நீரைக் கலந்தே அல்லாஹ்வின் அடியார்கள் மது அருந்துவார்கள். மேலும், தாம் விரும்பும் இடங்களுக்கு அதன் கிளைகளை எளிதாக ஏற்படுத்திக் கொள்வார்கள்.
یُوْفُوْنَ بِالنَّذْرِ وَیَخَافُوْنَ یَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِیْرًا ۟
இவர்கள் எத்தகையவர்கள் என்றால், (இந்த உலகத்தில்) நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் துன்பங்கள் பரவக்கூடிய அந்த (மறுமை) நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள்.
وَیُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰی حُبِّهٖ مِسْكِیْنًا وَّیَتِیْمًا وَّاَسِیْرًا ۟
மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள்.
اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لَا نُرِیْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا ۟
(மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:) “நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை.
اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا یَوْمًا عَبُوْسًا قَمْطَرِیْرًا ۟
நீண்ட, கடும் துன்பத்திற்குரிய ஒருநாளின் வேதனையைக் குறித்துதான் எங்கள் இறைவனிடம் நாங்கள் அஞ்சுகின்றோம்.”
فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْیَوْمِ وَلَقّٰىهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا ۟ۚ
எனவே, அல்லாஹ் அவர்களை அந்நாளின் தீங்கிலிருந்து காப்பாற்றிக் கொள்வான்; அவர்களுக்குப் பொலிவையும் மகிழ்வையும் அளிப்பான்.
وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِیْرًا ۟ۙ
மேலும், அவர்களின் பொறுமைக்குப் பகரமாக சுவனத்தையும் பட்டாடையையும் அவர்களுக்கு வழங்குவான்.
مُّتَّكِـِٕیْنَ فِیْهَا عَلَی الْاَرَآىِٕكِ ۚ لَا یَرَوْنَ فِیْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِیْرًا ۟ۚ
அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ, கடும் குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது.
وَدَانِیَةً عَلَیْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِیْلًا ۟
சுவனத்தின் நிழல்கள் அவர்களின் மீது தாழ்ந்திருக்கும். மேலும், அதன் கனிகள் எப்போதும் (அவர்கள் விரும்பியபடி பறித்துக் கொள்ளும் அளவில்) அவர்களின் அருகில் இருக்கும்.
وَیُطَافُ عَلَیْهِمْ بِاٰنِیَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِیْرَاۡؔ ۟ۙ
வெள்ளிப் பாத்திரங்களும் கண்ணாடிக் குவளைகளும் அவர்களுக்கு முன்னிலையில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்யப்பட்டிருக்கும்.
قَوَارِیْرَاۡؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِیْرًا ۟
அந்தக் கண்ணாடிகளும் வெள்ளி வகையைச் சேர்ந்ததாக இருக்கும். அவற்றைச் (சுவனத்தின் ஊழியர்கள்) சரியான அளவில் நிரப்பியிருப்பார்கள்.
وَیُسْقَوْنَ فِیْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِیْلًا ۟ۚ
அந்தக் கிண்ணங்களில் இருந்து இஞ்சிச்சுவை கலந்திருக்கும் பானங்கள் அவர்களுக்கு அங்கு குடிப்பதற்கு வழங்கப்படும்.
عَیْنًا فِیْهَا تُسَمّٰی سَلْسَبِیْلًا ۟
அது சுவனத்தில் உள்ள ஒரு நீரூற்றாகும். அதன் பெயர் ‘ஸல்ஸபீல்.’
وَیَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۚ اِذَا رَاَیْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا ۟
மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழியம் புரிவதற்)காக சுற்றித் திரிந்து கொண்டேயிருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெளித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர்.
وَاِذَا رَاَیْتَ ثَمَّ رَاَیْتَ نَعِیْمًا وَّمُلْكًا كَبِیْرًا ۟
அங்கு நீர் எந்தப் பக்கம் நோக்கினாலும் அருட்கொடைகள் நிறைந்திருப்பதையும், மாபெரும் பேரரசுக்கான அத்தனை சாதனங்களையும் காண்பீர்.
عٰلِیَهُمْ ثِیَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ ؗ وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ۚ وَسَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا ۟
மென்மையான மற்றும் கனமான பச்சைநிறப் பட்டாடைகள் அவர்களின் மீதிருக்கும். மேலும், அவர்களுக்கு வெள்ளிக்காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் அதிபதி அவர்களுக்குத் தூய்மை மிக்க பானத்தைப் புகட்டுவான்.
اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَآءً وَّكَانَ سَعْیُكُمْ مَّشْكُوْرًا ۟۠
திண்ணமாக, இதுதான் உங்களுக்குரிய கூலி. உங்களுடைய உழைப்பு மதிப்புக்குரியதாக ஆகிவிட்டிருக்கிறது.
اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَیْكَ الْقُرْاٰنَ تَنْزِیْلًا ۟ۚ
(நபியே!) நாம்தாம் உம்மீது இந்தக் குர்ஆனை சிறிது சிறிதாக இறக்கியிருக்கின்றோம்.
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا ۟ۚ
எனவே, நீர் உம் அதிபதியின் கட்டளைப்படி பொறுமையை மேற்கொள்ளும்! இவர்களில் தீயசெயல் செய்பவனுக்கோ சத்தியத்தை நிராகரிப்பவனுக்கோ இணங்கிப் போகாதீர்!
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِیْلًا ۟ۖۚ
உம் அதிபதியின் பெயரைக் காலையிலும் மாலையிலும் நினைவுகூரும்.
وَمِنَ الَّیْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَیْلًا طَوِیْلًا ۟
மேலும், இரவிலும் அவனது திருமுன் ஸஜ்தா செய்யும்! மேலும், இரவின் நீண்ட நேரங்களில் அவனைத் துதித்துக்கொண்டிரும்.
اِنَّ هٰۤؤُلَآءِ یُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَیَذَرُوْنَ وَرَآءَهُمْ یَوْمًا ثَقِیْلًا ۟
இவர்கள் உடனடியாகக் கிடைக்கக்கூடியதை (இம்மையை) நேசிக்கிறார்கள். ஆனால், பிறகு வரவிருக்கும் கடினமான நாளினை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.
نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ ۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِیْلًا ۟
நாமே இவர்களைப் படைத்தோம். இவர்களுடைய எலும்பு மூட்டுக்களை உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால், இவர்களின் வடிவங்களை மாற்றி அமைத்துவிடுவோம்.
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟
இது ஒரு நல்லுரையாகும். இனி, விருப்பமுள்ளவர் தன்னுடைய அதிபதியின் பக்கம் செல்லும் வழியை மேற்கொள்ளட்டும்.
وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟ۗۖ
மேலும், நீங்கள் விரும்புவதால் எதுவும் நடக்கப்போவதில்லை, அல்லாஹ் நாடினால் அன்றி! திண்ணமாக, அல்லாஹ் பேரறிவாளனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ وَالظّٰلِمِیْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟۠
தான் நாடுவோரை தனது கருணையில் நுழையச் செய்கின்றான். மேலும், கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.