All Surahs

Surah 77

المرسلات

Al-Mursalat

77. ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)

50 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ

தொடர்ந்து அனுப்பப்படுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக;

2

فَالْعٰصِفٰتِ عَصْفًا ۟ۙ

பிறகு, புயல் வேகத்தில் வீசுகின்றவற்றின் மீது சத்தியமாக;

3

وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۟ۙ

(மேகங்களை) பரப்புகின்றவற்றின் மீது சத்தியமாக;

4

فَالْفٰرِقٰتِ فَرْقًا ۟ۙ

பிறகு, அவற்றைத் துண்டு துண்டாகப் பிளக்கின்றவற்றின் மீது சத்தியமாக;

5

فَالْمُلْقِیٰتِ ذِكْرًا ۟ۙ

பிறகு, (இதயங்களில் இறைவனின்) நினைவை உண்டாக்குபவைமீது சத்தியமாக;

6

عُذْرًا اَوْ نُذْرًا ۟ۙ

மன்னிப்புப் பெறுவதற்காக அல்லது அச்சமூட்டி எச்சரிப்பதற்காக!

7

اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ۟ؕ

எதைப் பற்றி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்றதோ, அது திண்ணமாக நிகழக்கூடியதே!

8

فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ ۟ۙ

பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும்பொழுது,

9

وَاِذَا السَّمَآءُ فُرِجَتْ ۟ۙ

வானம் பிளக்கப்படும்பொழுது,

10

وَاِذَا الْجِبَالُ نُسِفَتْ ۟ۙ

மலைகள் தூள்தூளாக் கப்படும்பொழுது,

11

وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْ ۟ؕ

இறைத்தூதர்கள் ஆஜராகும் நேரம் வரும் பொழுது (அது நிகழ்ந்துவிடும்).

12

لِاَیِّ یَوْمٍ اُجِّلَتْ ۟ؕ

எந்த நாளுக்காக இந்தக் காரியம் பிற்படுத்தப்பட்டுள்ளது?

13

لِیَوْمِ الْفَصْلِ ۟ۚ

தீர்ப்பு நாளுக்காகத் தான்!

14

وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الْفَصْلِ ۟ؕ

அந்தத் தீர்ப்புநாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?

15

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!

16

اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِیْنَ ۟ؕ

நாம் முன் சென்றோரை அழிக்கவில்லையா, என்ன?

17

ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِیْنَ ۟

பின்னர் அவர்களின் அடிச்சுவட்டில்தானே பின்வருவோரையும் நடக்கச் செய்வோம்!

18

كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟

குற்றவாளிகளிடம் நாம் இப்படித்தான் நடந்துகொள்கின்றோம்.

19

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!

20

اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۙ

என்ன, நாம் உங்களை அற்பமானதொரு நீரிலிருந்து படைக்கவில்லையா?

21

فَجَعَلْنٰهُ فِیْ قَرَارٍ مَّكِیْنٍ ۟ۙ

மேலும், அதனை பாதுகாப்பான ஓர் இடத்தில் வைக்கவில்லையா

22

اِلٰی قَدَرٍ مَّعْلُوْمٍ ۟ۙ

ஒரு குறிப்பிட்ட காலம்வரை.

23

فَقَدَرْنَا ۖۗ فَنِعْمَ الْقٰدِرُوْنَ ۟

(இதோ பாருங்கள்!) நாம் இதற்கான ஆற்றலுடையவர்கள்தாம். ஆம்! நாம் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவர்கள்தாம்!

24

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!

25

اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۟ۙ

நாம் பூமியை ஒன்று திரட்டி வைக்கக்கூடியதாக ஆக்கவில்லையா?

26

اَحْیَآءً وَّاَمْوَاتًا ۟ۙ

உயிருள்ளவர்களையும் மரித்தவர்களையும்.

27

وَّجَعَلْنَا فِیْهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسْقَیْنٰكُمْ مَّآءً فُرَاتًا ۟ؕ

மேலும், மிக உயர்ந்த மலைகளை அதில் நாம் நாட்டவில்லையா? உங்களுக்கு சுவையான நீரைப் புகட்டவும் இல்லையா, என்ன?

28

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!

29

اِنْطَلِقُوْۤا اِلٰی مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ۚ

இப்போது செல்லுங்கள், நீங்கள் எதனைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்களோ அதன் பக்கம்!

30

اِنْطَلِقُوْۤا اِلٰی ظِلٍّ ذِیْ ثَلٰثِ شُعَبٍ ۟ۙ

செல்லுங்கள், மூன்று கிளைகளையுடைய நிழலின் பக்கம்!

31

لَّا ظَلِیْلٍ وَّلَا یُغْنِیْ مِنَ اللَّهَبِ ۟ؕ

அது குளிரச் செய்யக்கூடியதுமன்று, தீச்சுவாலையிலிருந்து காப்பாற்றக்கூடியதுமன்று.

32

اِنَّهَا تَرْمِیْ بِشَرَرٍ كَالْقَصْرِ ۟ۚ

அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்.

33

كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ۟ؕ

அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போலிருக்கும்.

34

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!

35

هٰذَا یَوْمُ لَا یَنْطِقُوْنَ ۟ۙ

இது எத்தகைய நாள் எனில், இதில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்;

36

وَلَا یُؤْذَنُ لَهُمْ فَیَعْتَذِرُوْنَ ۟

எந்தச் சாக்குப்போக்கும் கூறிட அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது.

37

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!

38

هٰذَا یَوْمُ الْفَصْلِ ۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِیْنَ ۟

இது தீர்ப்பளிக்கும் நாளாகும். நாம் உங்களையும் உங்களுக்கு முன் சென்றவர்களையும் ஒன்று திரட்டியுள்ளோம்.

39

فَاِنْ كَانَ لَكُمْ كَیْدٌ فَكِیْدُوْنِ ۟

இப்போது உங்களால் ஏதேனும் சூழ்ச்சி செய்ய முடியுமெனில், எனக்கெதிராக சூழ்ச்சி செய்து பாருங்கள்!

40

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟۠

பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!

41

اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ ظِلٰلٍ وَّعُیُوْنٍ ۟ۙ

இறையச்சம் கொண்டோர் (இன்று) நிழல்களிலும், ஊற்றுகளிலும் தங்கி வாழ்கிறார்கள்.

42

وَّفَوَاكِهَ مِمَّا یَشْتَهُوْنَ ۟ؕ

மேலும், அவர்கள் விரும்பும் பழங்கள் (அவர்களுக்காக உள்ளன).

43

كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

நன்கு உண்ணுங்கள்; பருகுங்கள்; நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பரிசாக!

44

اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟

நாம் நல்லவர்களுக்கு இத்தகைய கூலியைத்தான் வழங்குகின்றோம்.

45

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!

46

كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِیْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ ۟

உண்ணுங்கள்; சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள், சில நாட்களுக்கு! உண்மையில் நீங்கள் குற்றவாளிகள்தாம்.

47

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவு தான்!

48

وَاِذَا قِیْلَ لَهُمُ ارْكَعُوْا لَا یَرْكَعُوْنَ ۟

“(அல்லாஹ்வின் திருமுன்) அடிபணிந்து விடுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அடிபணிவதில்லை.

49

وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟

பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!

50

فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟۠

இனி, இதற்குப் பின் (இந்தக் குர்ஆனுக்குப்பின்) இவர்கள் எந்த வாக்கின் மீதுதான் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்?

PreviousAl-InsanNextAn-Naba

0:00–:––