عَمَّ یَتَسَآءَلُوْنَ ۟ۚ
இவர்கள் எதனைக் குறித்து வினவிக் கொள்கின்றார்கள்?
Surah 78
An-Naba
78. ஸூரத்துந் நபா (பெரும் செய்தி)
40 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
عَمَّ یَتَسَآءَلُوْنَ ۟ۚ
இவர்கள் எதனைக் குறித்து வினவிக் கொள்கின்றார்கள்?
عَنِ النَّبَاِ الْعَظِیْمِ ۟ۙ
அந்த மாபெரும் செய்தியைக் குறித்தா?
الَّذِیْ هُمْ فِیْهِ مُخْتَلِفُوْنَ ۟ؕ
அதைப்பற்றி இவர்கள் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
كَلَّا سَیَعْلَمُوْنَ ۟ۙ
ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்து விடும்.
ثُمَّ كَلَّا سَیَعْلَمُوْنَ ۟
ஆம்; ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۟ۙ
நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா?
وَّالْجِبَالَ اَوْتَادًا ۟
மேலும், மலைகளை முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா?
وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۟ۙ
மேலும், உங்களை (ஆண்பெண் எனும்) இணைகளாக நாம் படைக்கவில்லையா?
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۟ۙ
மேலும், உங்கள் உறக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா?
وَّجَعَلْنَا الَّیْلَ لِبَاسًا ۟ۙ
மேலும், நாம் இரவை மூடிக்கொள்ளக்கூடியதாய் ஆக்கவில்லையா?
وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا ۪۟
மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா?
وَّبَنَیْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۟ۙ
மேலும், உங்களுக்கு மேலே உறுதியான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா?
وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۟
மேலும், அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட விளக்கையும் நாம் படைக்கவில்லையா?
وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۟ۙ
மேலும், கார்முகில்களிலிருந்து மழையை நாம் பொழியச் செய்யவில்லையா?
لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۟ۙ
தானியங்களையும் தாவரங்களையும் மற்றும்
وَّجَنّٰتٍ اَلْفَافًا ۟ؕ
அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்குவதற்காக!
اِنَّ یَوْمَ الْفَصْلِ كَانَ مِیْقَاتًا ۟ۙ
திண்ணமாக, தீர்ப்புநாள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நேரமாய் இருக்கின்றது;
یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۟ۙ
(சூர்) எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக(க் கிளம்பி) வருவீர்கள்.
وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۟ۙ
மேலும், வானம் திறந்துவிடப்படும்; இறுதியில் அது வாயில்கள் மயமாகி விடும்!
وَّسُیِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ۟ؕ
மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும். அப்பொழுது அவை கானலாய்ப் போய்விடும்.
اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۟
திண்ணமாக, நரகம் பதுங்கித் தாக்கக்கூடியதாய் இருக்கிறது.
لِّلطَّاغِیْنَ مَاٰبًا ۟ۙ
வரம்பு மீறியவர்களுக்கான இருப்பிடமாக உள்ளது.
لّٰبِثِیْنَ فِیْهَاۤ اَحْقَابًا ۟ۚ
அதில் அவர்கள் பல யுகங்கள் வீழ்ந்து கிடப்பார்கள்.
لَا یَذُوْقُوْنَ فِیْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۟ۙ
அங்கு குளுமையையோ, குடிப்பதற்கேற்ற எந்த ஒரு பொருளின் சுவையையோ அவர்கள் சுவைக்க மாட்டார்கள்.
اِلَّا حَمِیْمًا وَّغَسَّاقًا ۟ۙ
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர!
جَزَآءً وِّفَاقًا ۟ؕ
(இவை அவர்களின் இழிசெயல்களுக்கு) ஏற்ற கூலிதான்!
اِنَّهُمْ كَانُوْا لَا یَرْجُوْنَ حِسَابًا ۟ۙ
அவர்கள் கேள்விக் கணக்கு கேட்கப்படும் என்பதை நம்பக் கூடியவர்களாய் இருக்கவில்லை.
وَّكَذَّبُوْا بِاٰیٰتِنَا كِذَّابًا ۟ؕ
மேலும், அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென முற்றிலும் மறுத்து விட்டிருந்தார்கள்.
وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ كِتٰبًا ۟ۙ
அதே நேரத்தில் நாமோ அவர்களின் ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணி எண்ணி எழுதி வைத்திருந்தோம்.
فَذُوْقُوْا فَلَنْ نَّزِیْدَكُمْ اِلَّا عَذَابًا ۟۠
“இதோ, சுவையுங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறெதனையும் நாம் அதிகமாக்கவே மாட்டோம்.”
اِنَّ لِلْمُتَّقِیْنَ مَفَازًا ۟ۙ
திண்ணமாக, இறையச்சமுள்ளவர்களுக்கு வெற்றியளிக்கும் ஓர் இடம் இருக்கின்றது.
حَدَآىِٕقَ وَاَعْنَابًا ۟ۙ
“தோட்டங்களும் திராட்சைகளும்
وَّكَوَاعِبَ اَتْرَابًا ۟ۙ
சமவயதுடைய கன்னிப்பெண்களும்,
وَّكَاْسًا دِهَاقًا ۟ؕ
நிறைந்த கிண்ணமும் உள்ளன.
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا كِذّٰبًا ۟ۚ
அங்கு வீணான பேச்சையோ, பொய்யுரையையோ அவர்கள் கேட்க மாட்டார்கள்.
جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۟ۙ
இது உம்முடைய அதிபதியிடமிருந்து கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும்.
رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الرَّحْمٰنِ لَا یَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا ۟ۚ
வானங்கள் மற்றும் பூமிக்கும் அவற்றிற்கிடைப்பட்ட ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அந்தக் கருணை மிக்க இறைவனிடமிருந்து (கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும்). அவனுக்கு முன்னால் பேசுவதற்கு யாருக்கும் திராணி இல்லை.”
یَوْمَ یَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓىِٕكَةُ صَفًّا ۙۗؕ لَّا یَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا ۟
ரூஹும்* வானவர்களும் அணிவகுத்து நிற்கும் அந்நாளில் எவரும் பேசமாட்டார்; ஆனால், கருணைமிக்க இறைவன் எவருக்கு அனுமதி கொடுப்பானோ அவரையும், நேர்மையைச் சொல்பவரையும் தவிர!
ذٰلِكَ الْیَوْمُ الْحَقُّ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ مَاٰبًا ۟
அந்நாள் (வருவது) உண்மையாகும். எனவே, நாடியவர் தம்முடைய இறைவனின் பக்கம் மீளும் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
اِنَّاۤ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِیْبًا ۖۚ۬ یَّوْمَ یَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ یَدٰهُ وَیَقُوْلُ الْكٰفِرُ یٰلَیْتَنِیْ كُنْتُ تُرٰبًا ۟۠
நெருங்கிவிட்டிருக்கும் வேதனை குறித்துத் திண்ணமாக நாம் உங்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டோம். அந்நாளில் மனிதன் தன்னுடைய கைகளால் முன்னர் செய்தனுப்பிய அனைத்தையும் காண்பான். நிராகரித்தவனோ புலம்புவான்: “அந்தோ! நான் மண்ணாய் இருந்திருக்கக்கூடாதா?”