وَالنّٰزِعٰتِ غَرْقًا ۟ۙ
ஆழ்ந்து பற்றியிழுக்கின்ற,
Surah 79
An-Naziat
79. ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்)
46 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالنّٰزِعٰتِ غَرْقًا ۟ۙ
ஆழ்ந்து பற்றியிழுக்கின்ற,
وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۟ۙ
மேலும், மெதுவாக வெளிக்கொணர்கின்ற (வான)வர்கள்மீது சத்தியமாக!
وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۟ۙ
மேலும், (பேரண்டத்தில்) அதிவேகமாக நீந்தித் திரிகின்ற
فَالسّٰبِقٰتِ سَبْقًا ۟ۙ
மேலும், (கட்டளைகளை நிறைவேற்றுவதில்) ஒருவருக்கொருவர் முந்துகின்றவர்கள் மீதும் சத்தியமாக!
فَالْمُدَبِّرٰتِ اَمْرًا ۟ۘ
பிறகு (இறைக்கட்டளைகளுக்கிணங்க) விவகாரங்களை முறைப்படி நிர்வகித்து வருகின்றவர்கள் மீதும் சத்தியமாக!
یَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۟ۙ
எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ
تَتْبَعُهَا الرَّادِفَةُ ۟ؕ
அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ
قُلُوْبٌ یَّوْمَىِٕذٍ وَّاجِفَةٌ ۟ۙ
அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும்.
اَبْصَارُهَا خَاشِعَةٌ ۟ۘ
அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்துவிட்டிருக்கும்.
یَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِی الْحَافِرَةِ ۟ؕ
இந்த மக்கள் கூறுகின்றார்கள்: “நாம் (இறந்த பிறகு) உண்மையில் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரப்படு வோமா,
ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ۟ؕ
இற்றுப்போன எலும்புகளாய் நாம் ஆனாலுமா?”
قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ۟ۘ
இவர்கள் மேலும் கூறலானார்கள்: “அப்பொழுது இது பேரிழப்புக்குரிய திரும்பலாகத்தான் இருக்கும்.”
فَاِنَّمَا هِیَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
உண்மையில், இது ஓர் உரத்த அதட்டலாகத்தான் இருக்கும்.
فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ۟ؕ
உடனே, இவர்கள் வெட்ட வெளியில் ஆஜராகி இருப்பார்கள்!
هَلْ اَتٰىكَ حَدِیْثُ مُوْسٰی ۟ۘ
மூஸாவின் வரலாறு உமக்குக் கிடைத்ததா?
اِذْ نَادٰىهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًی ۟ۚ
‘துவா’ எனும் புனிதப் பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்துக் கூறினான்:
اِذْهَبْ اِلٰی فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰی ۟ؗۖ
“ஃபிர்அவ்னிடம் செல்வீராக! திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டான்.
فَقُلْ هَلْ لَّكَ اِلٰۤی اَنْ تَزَكّٰی ۟ۙ
எனவே, நீர் (அவனிடம்) கூறும்: நீ தூய்மை பெற விரும்புகின்றாயா?
وَاَهْدِیَكَ اِلٰی رَبِّكَ فَتَخْشٰی ۟ۚ
மேலும், உன் இறைவனின் பக்கம் செல்லும் வழியினை நான் உனக்குக் காண்பிக்கட்டுமா? அதன் மூலம் (அவனைக் குறித்து) உனக்குள் அச்சம் ஏற்படும்!”
فَاَرٰىهُ الْاٰیَةَ الْكُبْرٰی ۟ؗۖ
பிறகு, (மூஸா ஃபிர்அவ்னிடம் சென்று) அவனுக்குப் பெரும் சான்றினைக் காண்பித்தார்.
فَكَذَّبَ وَعَصٰی ۟ؗۖ
ஆனால், அவன் அதனைப் பொய் எனக் கூறினான். மேலும், அவன் ஏற்க மறுத்தான்.
ثُمَّ اَدْبَرَ یَسْعٰی ۟ؗۖ
பின்னர் சூழ்ச்சிகள் செய்திடத் திரும்பினான்.
فَحَشَرَ فَنَادٰی ۟ؗۖ
மேலும், மக்களை ஒன்று திரட்டினான். அவர்களை அழைத்து,
فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰی ۟ؗۖ
“நான்தான் உங்களின் மாபெரும் இறைவன்” எனக் கூறினான்.
فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰی ۟ؕ
இறுதியில் அவனை மறுமை மற்றும் இம்மையின் வேதனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்தான்.
اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ یَّخْشٰی ۟ؕ۠
அஞ்சி வாழும் ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் பெரும் படிப்பினை இருக்கின்றது.
ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰىهَا ۟ۙ
உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதா?
رَفَعَ سَمْكَهَا فَسَوّٰىهَا ۟ۙ
அல்லாஹ் அதனை நிர்மாணித்தான். அதன் முகட்டை நன்கு உயர்த்தினான். பிறகு அதைச் சமப்படுத்தினான்.
وَاَغْطَشَ لَیْلَهَا وَاَخْرَجَ ضُحٰىهَا ۪۟
மேலும், அதன் இரவை மூடி, அதன் பகலை வெளிப்படுத்தினான்.
وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰىهَا ۟ؕ
இதன் பின்னர், பூமியை அவன் விரித்தான்!
اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰىهَا ۪۟
அதனுள்ளிலிருந்து அதன் தண்ணீரையும் மேய்ச்சலுக்கானவற்றையும் வெளிக்கொணர்ந்தான்.
وَالْجِبَالَ اَرْسٰىهَا ۟ۙ
மேலும் (அதில்) மலைகளை ஊன்றி வைத்தான்;
مَتَاعًا لَّكُمْ وَلِاَنْعَامِكُمْ ۟ؕ
உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரப் பொருள்களாய் ஆகும் பொருட்டு!
فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰی ۟ؗۖ
எனவே, மாபெரும் அமளி தோன்றும்போது,
یَوْمَ یَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰی ۟ۙ
அன்று மனிதன் தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைத்துப் பார்ப்பான்.
وَبُرِّزَتِ الْجَحِیْمُ لِمَنْ یَّرٰی ۟
மேலும், பார்ப்பவர் ஒவ்வொருவர் கண்ணெதிரிலும் நரகம் திறந்து வைக்கப்படும்.
فَاَمَّا مَنْ طَغٰی ۟ۙ
எவன் வரம்பு மீறியிருந்தானோ
وَاٰثَرَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۙ
மேலும், உலக வாழ்வுக்கு முன்னுரிமை தந்தானோ
فَاِنَّ الْجَحِیْمَ هِیَ الْمَاْوٰی ۟ؕ
அவனுடைய இருப்பிடம் நரகமாகவே இருக்கும்.
وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَنَهَی النَّفْسَ عَنِ الْهَوٰی ۟ۙ
மேலும், எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும், தீய இச்சைகளைவிட்டுத் தனது மனத்தைத் தடுத்திருந்தானோ
فَاِنَّ الْجَنَّةَ هِیَ الْمَاْوٰی ۟ؕ
அவனுடைய இருப்பிடம் சுவனமாக இருக்கும்.
یَسْـَٔلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَیَّانَ مُرْسٰىهَا ۟ؕ
“அந்த இறுதிநேரம் எப்பொழுது வரும்?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்.
فِیْمَ اَنْتَ مِنْ ذِكْرٰىهَا ۟ؕ
அந் நேரத்தைப் பற்றிக் கூறுவது உம்முடைய பணியல்ல!
اِلٰی رَبِّكَ مُنْتَهٰىهَا ۟ؕ
அதைப் பற்றிய ஞானமோ அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது.
اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ یَّخْشٰىهَا ۟ؕ
அந்நேரத்தை அஞ்சும் ஒவ்வொருவருக்கும் நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்.
كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَهَا لَمْ یَلْبَثُوْۤا اِلَّا عَشِیَّةً اَوْ ضُحٰىهَا ۟۠
இவர்கள் அதனைக் கண்டு கொள்ளும் நாளில், ஒரு பிற்பகல் அல்லது முற்பகல் வரையில் மட்டுமே (இவ்வுலகில் அல்லது மரணநிலையில்) தாங்கள் தங்கியிருந்தது போன்று அவர்களுக்குத் தோன்றும்.