سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۟ۙ
(நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக!
Surah 87
Al-Ala
87. ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்)
19 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۟ۙ
(நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக!
الَّذِیْ خَلَقَ فَسَوّٰی ۟
அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் அமைத்தான்;
وَالَّذِیْ قَدَّرَ فَهَدٰی ۟
மேலும் விதியை நிர்ணயித்தான்; பிறகு வழிகாட்டினான்.
وَالَّذِیْۤ اَخْرَجَ الْمَرْعٰی ۟
மேலும், தாவரங்களை முளைக்கச் செய்தான்.
فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰی ۟ؕ
பின்னர், அவற்றைக் காய்ந்து கருகிய குப்பைக் கூளங்களாய் ஆக்கினான்.
سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤی ۟ۙ
(நபியே!) நாம் உம்மை ஓதிடச் செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்;
اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ وَمَا یَخْفٰی ۟ؕ
ஆனால், அல்லாஹ் நாடியதைத் தவிர! திண்ணமாக, அவன் வெளிப்படையாகவும், மறைவாகவும் இருக்கும் யாவற்றையும் அறிகின்றான்.
وَنُیَسِّرُكَ لِلْیُسْرٰی ۟ۚۖ
மேலும், இலகுவான பாதையை நாம் உமக்கு ஏற்படுத்தித் தருவோம்.
فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰی ۟ؕ
எனவே, அறிவுரை வழங்குவீராக, அறிவுரை பலனளிக்குமாயின்!
سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰی ۟ۙ
எவர் அஞ்சுகிறாரோ, அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்.
وَیَتَجَنَّبُهَا الْاَشْقَی ۟ۙ
ஆனால் துர்ப்பாக்கியவானோ அதனைத் தவிர்த்துக்கொள்வான்.
الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰی ۟ۚ
அவன் பெரும் நெருப்பில் நுழைவான்;
ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ۟ؕ
பிறகு அதில் மரணமடையவும் மாட்டான்; வாழவும் மாட்டான்!
قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ۟ۙ
நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டார், தூய்மையை மேற்கொண்டு
وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰی ۟ؕ
மேலும், தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்து தொழுகையை நிறைவேற்றியவர்.
بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا ۟ۚۖ
ஆனால், நீங்கள் இம்மை வாழ்விற்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள்.
وَالْاٰخِرَةُ خَیْرٌ وَّاَبْقٰی ۟ؕ
உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰی ۟ۙ
நிச்சயமாக இதே விஷயம் முன்னர் அருளப்பட்ட வேதங்களிலும் சொல்லப்பட்டிருந்தது;
صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ۟۠
இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களில்!