هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْغَاشِیَةِ ۟ؕ
சூழ்ந்து கொள்ளக் கூடிய துன்பம் (அதாவது மறுமை) பற்றிய செய்தி உமக்கு வந்ததா?
Surah 88
Al-Ghashiyah
88. ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)
26 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْغَاشِیَةِ ۟ؕ
சூழ்ந்து கொள்ளக் கூடிய துன்பம் (அதாவது மறுமை) பற்றிய செய்தி உமக்கு வந்ததா?
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ خَاشِعَةٌ ۟ۙ
அந்நாளில் சில முகங்கள் பீதியுற்றிருக்கும்;
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۟ۙ
கடுமையான சிரமத்தை மேற் கொண்டிருக்கும்; களைத்துப் போயிருக்கும்;
تَصْلٰی نَارًا حَامِیَةً ۟ۙ
கனன்றெழும் நெருப்பில் கருகிக் கொண்டிருக்கும்;
تُسْقٰی مِنْ عَیْنٍ اٰنِیَةٍ ۟ؕ
கொதிக்கும் ஊற்றுநீர் அவர்களுக்கு அருந்தக் கொடுக்கப்படும்;
لَیْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِیْعٍ ۟ۙ
முட்கள் நிறைந்த காய்ந்துபோன புற்பூண்டைத் தவிர வேறெந்த உணவும் அவர்களுக்குக் கிடைக்காது.
لَّا یُسْمِنُ وَلَا یُغْنِیْ مِنْ جُوْعٍ ۟ؕ
அது ஊட்டமும் தராது; பசியையும் போக்காது!
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاعِمَةٌ ۟ۙ
வேறு சில முகங்கள் அந்நாளில் பொலிவுற்றிருக்கும்;
لِّسَعْیِهَا رَاضِیَةٌ ۟ۙ
தன் செயல்கள் குறித்து திருப்தியடைந்திருக்கும்;
فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ
உன்னதமான சுவனத்தில் இருக்கும்;
لَّا تَسْمَعُ فِیْهَا لَاغِیَةً ۟ؕ
அவை அங்கு வீணானவற்றைச் செவியுற மாட்டா.
فِیْهَا عَیْنٌ جَارِیَةٌ ۟ۘ
ஓடிக்கொண்டிருக்கும் நீரூற்று அங்கு உண்டு;
فِیْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۟ۙ
உயர்ந்த கட்டில்கள் அங்கு இருக்கும்;
وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۟ۙ
மேலும், கிண்ணங்களும் வைக்கப்பட்டிருக்கும்.
وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۟ۙ
தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்;
وَّزَرَابِیُّ مَبْثُوْثَةٌ ۟ؕ
எழிலான விரிப்புகளும் விரிக்கப்பட்டிருக்கும்.
اَفَلَا یَنْظُرُوْنَ اِلَی الْاِبِلِ كَیْفَ خُلِقَتْ ۟ۥ
(இம்மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை எனில்,) ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று!
وَاِلَی السَّمَآءِ كَیْفَ رُفِعَتْ ۟ۥ
மேலும், வானத்தைப் பார்க்க வில்லையா, அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று!
وَاِلَی الْجِبَالِ كَیْفَ نُصِبَتْ ۟ۥ
மேலும், மலைகளைப் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு ஊன்றப்பட்டுள்ளன என்று!
وَاِلَی الْاَرْضِ كَیْفَ سُطِحَتْ ۟ۥ
மேலும், பூமியைப் பார்க்கவில்லையா, அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று!
فَذَكِّرْ ؕ۫ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ۟ؕ
சரி (நபியே!) நீர் அறிவுரை புரிந்தவண்ணம் இருப்பீராக! திண்ணமாக, நீர் அறிவுரை புரிபவர் மட்டுமே ஆவீர்!
لَسْتَ عَلَیْهِمْ بِمُصَۜیْطِرٍ ۟ۙ
அவர்களை நீர் நிர்ப்பந்திப்பவர் அல்லர்.
اِلَّا مَنْ تَوَلّٰی وَكَفَرَ ۟ۙ
ஆனால், எவன் புறக்கணித்தானோ மேலும், நிராகரித்தானோ
فَیُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَ ۟ؕ
அவனுக்கு அல்லாஹ் கடினமான தண்டனை அளிப்பான்.
اِنَّ اِلَیْنَاۤ اِیَابَهُمْ ۟ۙ
திண்ணமாக, இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது.
ثُمَّ اِنَّ عَلَیْنَا حِسَابَهُمْ ۟۠
பிறகு, இவர்களிடம் கணக்கு வாங்கும் பொறுப்பு நம்மீதே உள்ளது.