لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
இல்லை! இந்த (மக்கா) நகரின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்!
Surah 90
Al-Balad
90. ஸூரத்துல் பலத் (நகரம்)
20 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
இல்லை! இந்த (மக்கா) நகரின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்!
وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
மேலும், நிலைமை என்னவெனில், (நபியே!) இந்நகரத்தில் நீர் ஆகுமாக்கப்பட்டுள்ளீர்!
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ
மேலும் தந்தை (ஆதம்) மீதும் அவரிலிருந்து பிறந்த மக்கள் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍ ۟ؕ
திண்ணமாக, நாம் மனிதனைப் பெரும் கஷ்டத்தில் படைத்திருக்கின்றோம்.
اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌ ۟ۘ
‘அவன் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது’ என்று அவன் நினைத்திருக்கின்றானா?
یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ
“ஏராளமான செல்வங்களை வாரி இறைத்துவிட்டேன்” என்று அவன் கூறுகின்றான்.
اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌ ۟ؕ
யாருமே அவனைப் பார்க்கவில்லை என்று அவன் கருதுகின்றானா?
اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِ ۟ۙ
அவனுக்கு நாம் இரு கண்களையும்
وَلِسَانًا وَّشَفَتَیْنِ ۟ۙ
ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா?
وَهَدَیْنٰهُ النَّجْدَیْنِ ۟ۚ
மேலும், (நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம். (இல்லையா?)
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۟ؗۖ
ஆயினும், அவன் கடினமான மலைப் பாதையைக் கடந்து செல்லத் துணியவில்லை.
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۟ؕ
கடினமான அந்த மலைப்பாதை எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
فَكُّ رَقَبَةٍ ۟ۙ
(அதுதான்) ஒருவனை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பது ஆகும்;
اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍ ۟ۙ
அல்லது பட்டினி நாளில் உணவளிப்பதும் ஆகும்.
یَّتِیْمًا ذَا مَقْرَبَةٍ ۟ۙ
உறவினரான அநாதைக்கோ
اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍ ۟ؕ
அல்லது வறுமையில் வாடும் ஏழைக்கோ (உணவளிப்பதும் ஆகும்!)
ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۟ؕ
பின்னர் (அத்துடன்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, பொறுமையை மேற்கொள்ளவும் (மக்கள் மீது) இரக்கம் காட்டவும், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுகின்றார்களோ, அவர்களில் ஒருவனாக அவன் இருக்கவேண்டும்.
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
இத்தகையோர்தாம் வலப்பக்கத்தார்.
وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ
மேலும், எவர்கள் நம்முடைய வசனங்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் இடப் பக்கத்தார்.
عَلَیْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ۟۠
அவர்கள் மீது நெருப்பு படர்ந்திருக்கும்.