All Surahs

Surah 91

الشمس

Ash-Shams

91. ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)

15 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟

சூரியன் மீதும் அதன் வெயிலின் மீதும் சத்தியமாக!

2

وَالْقَمَرِ اِذَا تَلٰىهَا ۟

மேலும், சந்திரன் மீது சத்தியமாக, அது சூரியனைத் தொடர்ந்து வரும்போது!

3

وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَا ۟

மேலும், பகலின் மீது சத்தியமாக, அது சூரியனை வெளிப்படுத்திக் காட்டும்போது!

4

وَالَّیْلِ اِذَا یَغْشٰىهَا ۟

மேலும், இரவின் மீது சத்தியமாக, அது சூரியனை மூடி மறைத்துக் கொள்ளும்போது!

5

وَالسَّمَآءِ وَمَا بَنٰىهَا ۟

மேலும், வானத்தின் மீதும் அதை அமைத்தவன் மீதும் சத்தியமாக!

6

وَالْاَرْضِ وَمَا طَحٰىهَا ۟

மேலும், பூமியின் மீதும் அதை விரித்தவன் மீதும் சத்தியமாக!

7

وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَا ۟

மேலும், மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர்,

8

فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَا ۟

அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக!

9

قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا ۟

திண்ணமாக, வெற்றி பெற்றுவிட்டான் மனத்தைத் தூய்மைப்படுத்தியவன்;

10

وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَا ۟ؕ

மேலும், தோற்றுவிட்டான் அதனை நசுக்கியவன்!

11

كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۟

ஸமூத் சமுதாயத்தார் தங்கள் வரம்பு மீறிய போக்கினால் பொய்யெனத் தூற்றினார்கள்.

12

اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَا ۟

அவர்களில் மிகவும் கேடுகெட்ட ஒருவன் எழுந்து வந்தபோது

13

فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْیٰهَا ۟ؕ

அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் கூறினார்: “எச்சரிக்கை! அல்லாஹ்வின் ஒட்டகம் (அதன் மீது கை வைக்காதீர்கள்;) அது நீர் அருந்துவதைத் (தடுக்காதீர்கள்).”

14

فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا فَدَمْدَمَ عَلَیْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا ۟

ஆனால், அம்மக்கள் அவருடைய பேச்சைப் பொய்யெனத் தூற்றினார்கள். மேலும், ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள். இறுதியில், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பாவத்தின் விளைவாக கடுமையானதொரு ஆபத்தை இறக்கி, அனைவரையும் அழித்து, மண்ணோடு மண்ணாக்கி விட்டான்.

15

وَلَا یَخَافُ عُقْبٰهَا ۟۠

மேலும், (தனது இந்தச் செயலின்) எந்தவொரு தீயவிளைவு பற்றியும் அவனுக்கு அச்சம் இல்லை.

PreviousAl-BaladNextAl-Layl

0:00–:––