اَلْقَارِعَةُ ۟ۙ
பயங்கரமான நிகழ்ச்சி!
Surah 101
Al-Qariah
101. ஸூரத்து அல்காரிஆ (திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)
11 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
اَلْقَارِعَةُ ۟ۙ
பயங்கரமான நிகழ்ச்சி!
مَا الْقَارِعَةُ ۟ۚ
அந்த பயங்கரமான நிகழ்ச்சி என்ன?
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُ ۟ؕ
அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
یَوْمَ یَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِ ۟ۙ
அந்நாளில் மக்கள், சிதறிக் கிடக்கும் ஈசல்கள் போலவும்
وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِ ۟ؕ
மேலும், மலைகள் கடையப்பட்ட வண்ண வண்ணக் கம்பளியைப் போலவும் ஆகிவிடும்!
فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗ ۟ۙ
பிறகு, எவருடைய எடைத்தட்டுகள் கனத்திருக்குமோ
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ؕ
அவர் மனத்திற்குகந்த வாழ்வைப் பெறுவார்.
وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗ ۟ۙ
மேலும், எவருடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ
فَاُمُّهٗ هَاوِیَةٌ ۟ؕ
அவருடைய தங்குமிடம் ஆழமான படுகுழிதான்!
وَمَاۤ اَدْرٰىكَ مَا هِیَهْ ۟ؕ
அது என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
نَارٌ حَامِیَةٌ ۟۠
கொழுந்து விட்டெரியும் நெருப்பு!