All Surahs

Surah 102

التكاثر

At-Takathur

102. ஸூரத்துத் தகாஸுர் (பேராசை)

8 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اَلْهٰىكُمُ التَّكَاثُرُ ۟ۙ

பிறரைவிடக் கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது.

2

حَتّٰی زُرْتُمُ الْمَقَابِرَ ۟ؕ

நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்).

3

كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ۙ

அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்.

4

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ؕ

இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்:) அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்

5

كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْیَقِیْنِ ۟ؕ

(இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால் (உங்கள் நடத்தை இப்படி இருந்திருக்காது).

6

لَتَرَوُنَّ الْجَحِیْمَ ۟ۙ

திண்ணமாக, நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்.

7

ثُمَّ لَتَرَوُنَّهَا عَیْنَ الْیَقِیْنِ ۟ۙ

இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்) திண்ணமாக நீங்கள் அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள்

8

ثُمَّ لَتُسْـَٔلُنَّ یَوْمَىِٕذٍ عَنِ النَّعِیْمِ ۟۠

பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைப் பற்றி கட்டாயம் நீங்கள் வினவப் படத்தான் போகின்றீர்கள்.

PreviousAl-QariahNextAl-Asr

0:00–:––